வெறுமனே இந்த “மஞ்சள்” கலர் போதும்.. ஆச்சரியங்களை அள்ளி தரும் அதிசய உணவுகள்.. ஆயுசும் கூடும்.. அருமை

198 0

சென்னை:

உணவுகளில் இருக்கும் நிறங்களும் ஆரோக்கியம் தரக்கூடியவை.. கலர் கலர் காய்கறிகளே, உடலுக்கு நன்மையை தரும் என்கிறார்கள்.. அந்தவகையில், மஞ்சள் கலரையும் தவிர்த்து விட முடியாது. நீலம் மற்றும் ஊதா நிற காய்கள், உடல்எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.. திராட்சை, நாவல்பழம், பிளம்ஸ்பழம், கத்தரிக்காய் இதெல்லாம் சத்துக்கள் நிறைந்தவை..

நார்ச்சத்து:

வைட்டமின் சி, நார்ச்சத்து இதில் உள்ளன.. கெட்ட கொழுப்பை குறைத்து, நோய் எதிர்ப்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.. செரிமானத்துக்கு பேருதவி புரிகிறது.. இந்த இரண்டு கலர்களில் இருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களில் ஆன்டிஆக்சிடெண்டுகள் நிரம்பியுள்ளன..

ரத்த அழுத்தத்தை முறைபடுத்தவும் இதய நோய் வராமல் தடுக்கவும் இவை பயன்படுகிறது. இனிமேல், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், ப்ளூபெரி, கருப்பு திராட்சை, ஊதா நிற முட்டைகோஸ், கத்தரிக்காயை உங்கள் டயட் சார்ட்டில் கட்டாயம் சேர்த்து கொள்ள சொல்கிறார்கள்.வெறுமனே இந்த "மஞ்சள்" கலர் போதும்.. ஆச்சரியங்களை அள்ளி தரும் அதிசய உணவுகள்..  ஆயுசும் கூடும்.. அருமை | Amazing Health Benefits of Yellow Color Fruits And  Vegetables and Do ...

நெருங்கிய தொடர்பு:

பழங்களின் நிறத்திற்கும், அவைகள் தரும் பலன்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறார்கள். அதிலும், இந்த மஞ்சள் கலர் பழத்தில் ஏகப்பட்ட வைட்டமின்கள் உள்ளன. இதில் தலையாய பழமாக திகழ்வது எலுமிச்சம் பழம்தான்..

ஆரஞ்ச், சாத்துக்குடி, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகைகள் எல்லாமே இந்த எலுமிச்சையை சேர்ந்தவைதான்.. உடலிலுள்ள கழிவுகளை போக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்றன இந்த எலுமிச்சை வகை வழங்கள்.. இதனால் பல்வேறு நோய்கள் வருவது தடுக்கப்படுகின்றன.. நார்ச்சத்து நிறைந்த இந்த பழங்கள், உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கின்றன..

சரும ஜொலிப்பு:

சரும ஆரோக்கியம், தலைமுடி ஆரோக்கியம், பற்களின் ஆரோக்கியம் என அனைத்துக்குமே துணைபுரிகிறது இந்த வகை பழங்கள். வைட்டமின் C நிறைந்த இந்த பழங்கள்தான், சருமத்தில் கொலாஜன் சுரப்பு உருவாவதை ஊக்குவிக்கின்றன..

அடுத்ததாக, வாழையை சொல்லலாம்.. பொட்டாசியம் செழித்து காணப்படும் இந்த வாழைதான், இளமையை பாதுகாக்கும் திறனை பெற்றுள்ளது.. ரத்த அழுத்தத்தை சீராக்கி, கொழுப்பையும் கட்டுப்படுத்துகிறது இந்த வாழைப்பழம். வயிறு பகுதிகளை ஆரோக்கியமாக வைத்திருக்க வாழைப்பழம் உதவுகிறது.

சர்க்கரை நோயாளிகள்:

பப்பாளி பழத்தை சர்க்கரை நோயாளிகளும் குறிப்பிட்டு அளவு சாப்பிடலாம். அந்த அளவுக்கு இந்த மஞ்சள் நிற பழம் உதவுகிறது.. கலோரி குறைவு என்பதுடன், நார்ச்சத்தும் அதிகம் என்பதால்தான், உடல் எடையை குறைக்க இந்த பழத்தை பயன்படுத்துகிறார்கள். சரும சுருக்கங்களை நீக்குவதுடன், மூட்டு நோய்களுக்கும் நிவாரணம் தருகிறது இந்த பப்பாளி. வைட்டமின் A, பீட்டா கரோட்டின் நிறைந்த அன்னாசிபழத்தையும் இதில் சேர்த்து கெள்ளலாம்.

மாம்பழத்தை எடுத்து கொண்டால், வைட்டமின் A, நார்ச்சத்து அதிகம் உள்ளது.. கொழுப்பை குறைக்க உதவுவதுடன், ஆன்டிஆக்சிடென்ட்டுகள் நிறைய இருப்பதால் புற்றுநோயை கட்டுப்படுத்தும் திறன் இந்த பழத்துக்கு உண்டு. ஆனால், சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

மஞ்சள் காய்கள்:

இந்த மஞ்சள் நிற பழங்களுடன், மஞ்சள் நிற காய்கறிகளான மஞ்சள் குடைமிளகாய், மஞ்சள் பூசணிக்காய், மக்காச்சோளம், போன்றவைகளையும் உணவில் நிறைய சேர்த்து கொள்ளலாம். இதனால், ஊட்டச்சத்துகள் அதிகமாக கிடைக்கும்..

Related Post

திண்டுக்கல் அருகே ஊராட்சிப் பணியிலிருந்து நீக்‍க முயன்ற திமுக கவுன்சிலர் – விஷம் குடித்த பணியாளர் மருத்துவமனையில் அனுமதி

Posted by - November 26, 2022 0
திண்டுக்கல் அருகே திமுக கவுன்சிலர் தலையீட்டால் வேலை இழந்த தொழிலாளி எலி மருந்து குடித்து உயிருக்‍கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளார். வடமதுரை அடுத்த வி.மேட்டுப்பட்டியை சேர்ந்த…

‘இந்தி தெரியாது போடா’ என சொல்லிவிட்டு இப்ப ‘கேலோ இந்தியா’-வாம்… சூடு, சொரணை இல்லாத உதயநிதி – நடிகை விந்தியா விமர்சனம்

Posted by - January 29, 2024 0
திமுக இளைஞரணி மாநாடு பயனுள்ளதாக இல்லை என்றும், அது சர்க்கஸ் மாநாடு என அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா கிண்டலடித்துள்ளார். பழனியில் முன்னாள்…

தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் 44 பேர் கைது

Posted by - November 9, 2023 0
புதுடெல்லி: வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை, ஒரு கும்பல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு கொத்தடிமைகளாக விற்பனை செய்துள்ளனர். அவர்களுக்கு இந்தியாவை சேர்ந்தவர்களை…

வாயை மூடிக்கிட்டிரு… பெண்ணை அதட்டிய அமைச்சர் பொன்முடி

Posted by - March 16, 2023 0
தொடர்ந்து அமைச்சர் பொன்முடி  மக்களிடையே சர்ச்சைக்குரிய வகையில் பேசி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார் .   பேருந்தில் பெண்களுக்கு இலவச திட்டம் தமிழக அரசு கொண்டு வந்திருப்பதை,…

புதுச்சேரி

Posted by - April 12, 2022 0
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 16ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வரும் 14 ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *