ஸ்பெயின் நிறுவனங்களுடன் ரூ.3,440 கோடி அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

257 0

நாடாளுமன்றத்தில் பிரதமரின் உரையை கேட்டேன்… ரசித்தேன்… சிரித்தேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்.

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக கடந்த ஜனவரி 27ஆம் தேதி ஸ்பெயின் சென்றார். தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் ஸ்பெயின் சென்றார். ஸ்பெயினில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். ஸ்பெயினின் ஹபக் லாய்டு நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீட்டு ஒப்பந்தமும்,  எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது. ஸ்பெயினின் ரோகா நிறுவனமும் தமிழ்நாட்டில் ரூ.400 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளது. தொடர்ந்து, பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் வாழ் தமிழர்களையும் சந்தித்து பேசினார்.இந்நிலையில், ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஸ்பெயின் பயணம் சிறப்பாக அமைந்தது. ஸ்பெயின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முக்கிய முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள வாய்ப்புகளை எடுத்துரைத்தேன். ஸ்பெயின் நிறுவனங்களுடன் ரூ.3,440 கோடி அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன” என தெரிவித்தார்.

“தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியை சர்வதேச நாளேடுகள் பாராட்டி உள்ளன. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகே அடுத்த வெளிநாட்டுப் பயணம் அமையும். நாடாளுமன்றத்தில் பிரதமரின் உரையை கேட்டேன்… ரசித்தேன்… சிரித்தேன்…” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் மகிழ்ச்சி தான் என தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என பிரதமர் நரேந்திர மோடி பேசியது குறித்த கேள்விக்கு, அவ்வளவு தொகுதிகள் தானா? மொத்தம் 543 தொகுதிகள் இருக்கே.. அவ்வளவு தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என சொன்னாலும் அச்சரியபடுவதற்கில்லை.” என தெரிவித்தார்.

 

Related Post

3 பேரை திருமணம் செய்து மோசடி.எஸ்கேப்.. சிக்கிய கல்யாண ராணி..!

Posted by - April 18, 2023 0
2 குழந்தைகளுக்கு தாயானவர் புதுமணப் பெண் எனக் கூறி பல திருமணங்களை செய்து மோசடி செய்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம்,…

கடலூர் ரயில் – வேன் விபத்து; மாணவர்கள் மரணத்திற்கு காரணம் கேட்கீப்பரா? ஓட்டுனரா?

Posted by - July 8, 2025 0
கடலூர் செம்மங்குப்பத்தில் ரயில் மீது பள்ளி வேன் மோதிய விபத்து யாருடைய அலட்சியத்தால் நிகழ்ந்தது என புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள…

அடுத்த ரவுண்டுக்கு ரெடியா.. புயல்? உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கனமழை கன்ஃபார்ம்

Posted by - October 22, 2025 0
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமான வலுவடையக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வடமாவட்டங்களில்…

நீட்- ரகசியத்தை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி..!

Posted by - March 15, 2023 0
நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கியுள்ளார். 2021 தேர்தல் பரப்புரையின் போது நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களுக்கு…

Tamil Nadu Budget 2024 Live : 12.00 மணி வரை தமிழக நிதிஅமைச்சர் அறிவித்த திட்டங்கள்….

Posted by - February 19, 2024 0
3000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்…! 3000 பேருந்துகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்து இந்த நிதியாண்டில் செயல்படுத்தப்படும் எனநிதியமைச்சர் தங்கம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *