Tamil Nadu Budget 2024 Live : 12.00 மணி வரை தமிழக நிதிஅமைச்சர் அறிவித்த திட்டங்கள்….

405 0

3000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்…!

3000 பேருந்துகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்து இந்த நிதியாண்டில் செயல்படுத்தப்படும் எனநிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

நெய்தல் மீட்சி இயக்கம் திட்டத்திற்கு ஒப்புதல்..!

14 கடலோர மாவட்டங்களில் வளங்களை மீட்டெடுக்க நெய்தல் மீட்சி இயக்கம் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நீரேற்று புனல் மின் நிலையங்களை அமைக்க ரூ.60,000 கோடி..!

நீரேற்று புனல் மின் நிலையங்களை அமைக்க ரூ.60,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை அடையாறு ஆற்றை சீரமைக்க ரூ.1,500 கோடி ஒதுக்கீடு..!

சென்னை அடையாறு ஆற்றை சீரமைக்க ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க ரூ.500 கோடி நிதி

காலநிலை மாற்றத்தினால் அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க நிதி ஒற்றினை ரூ.500 கோடி நிதி மதிப்பில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளட்டுள்ளது.

நீர்வளத்துறைக்கு ரூ.8,398 கோடி ஒதுக்கீடு..!

நீர்வளத்துறைக்கு ரூ.8,398 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன பாதுகாப்பு வசதியுடன் புதிய சிறைச்சாலை

திருச்சிராப்பள்ளி திருவெறும்பூர் பகுதியில் நவீன பாதுகாப்பு வசதியுடன் புதிய சிறைச்சாலை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,000 இடங்களில் இலவச வை ஃபை சேவை..!

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் 1,000 இடங்களில் இலவச வை ஃபை சேவை வழங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

10 புதிய அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் எங்கெங்கே?

1. வேப்பூர் (கடலூர் மாவட்டம்)
2. குஜிலியம்பாறை (திண்டுக்கல் மாவட்டம்)
3. போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்)
4. சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்)
5. கந்தர்வக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்)
6. கமுதி (ராமநாதபுரம் மாவட்டம்)
7. நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்)
8. கூத்தாநல்லூர் (திருவாரூர் மாவட்டம்)
9. செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்)
10. ஏரல் (தூத்துக்குடி மாவட்டம்)

கோவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா..

20 லட்சம் சதுர அடியில் ரூ.1,100 கோடியில் கோவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் எனநிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் உருவாக்கப்படும்..!

தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் ஏற்படுத்தப்படும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

முதல்முறையாக உலக புத்தொழில் மாநாடு..!

தமிழ்நாட்டில் முதல்முறையாக உலக புத்தொழில் மாநாடு நடத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறைக்கு ரூ.2,295 கோடி ஒதுக்கீடு..!

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறைக்கு ரூ.2,295 கோடி ஒதுக்கீடு செய்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

2000 ஏக்கர் விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா அமைக்கப்படும்..!

தூக்குக்குடியில் வான்வாழி சார்ந்த நிறுவனங்களை ஊக்குவிக்க 2000 ஏக்கர் விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

பெண்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம்..!

மீண்டும் வேலைக்கு செல்ல விரும்பும் பெண்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படும்..!

பெண்கள், மாற்றுத்திறனாளி, 3 ஆம் பாலினத்தினர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கும் புதிய தொழிற் நிறுவனங்களுக்கு அவர்களின் சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் ஊதிய மானியம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

தஞ்சாவூரில் சிப்காட்..!

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.120 மதிப்பீட்டில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

ரூ.800 கோடி முதலீடு ஈர்க்கப்படும்..!

சேலம் மாவட்டத்தில் கொண்டுவரப்படும் சிப்காட் நிறுவனத்தில் மூலம் 8000 பேருக்கு வேலைவாய்ப்பு மற்றும் ரூ.800 கோடி முதலீடு ஈர்க்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

புற்றுநோய் சிகிச்சை பிரிவு மேம்பாடு..!

புதிய புற்றுநோய் மேலாண்மை பிரிவு செயல்படுத்தப்படும். புற்றுநோய் மருத்துவமனைகளை மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்திற்கு கொடுக்கப்படும் சிகிச்சைக்கான உச்சவரப்பு தொகை உயர்வு

மருத்து காப்பீடு திட்டத்தை மேம்படுத்த காப்பீடு தொகுப்பு நிதியில் இருந்து ரூ.200 கோடி செலவிடப்படும். விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்திற்கு கொடுக்கப்படும் சிகிச்சைக்கான உச்சவரப்பு தொகை ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாயாக உயர்ந்தப்பட்டுள்ளது.

கோவையில் ரூ.1,100 கோடி ஐ.டி பூங்கா..!

கோவையில் 20 லட்சம் சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நிதி ஒதுக்க செய்யப்படுகிறது.

10 புதிய தொழிற்பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும்..

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ரூ.111 கோடி செலவில் 10 புதிய தொழிற்பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும் என என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

நான் முதல்வன் திட்டத்தில் 29 லட்சம் பேருக்கு பயிற்சி

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இதுவரை 29 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டு 1.19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

வெளிநாட்டு சென்ற ஆராய்ச்சி படிப்பு படிக்க புதிய திட்டம்..!

அரசு பள்ளி மாணவர்கள் பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வெளிநாட்டு சென்று மேற்கொள்ள உதவுத்தொகை வழங்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

கோவையில் கலைஞர் நூலகம்..!

கோவையில் மாபெரும் நூலகம் கலைஞர் பெயரில் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

உயர் கல்வி மேம்பாட்டிற்கு ரூ.3,014 கோடி…

உயர் கல்வி படுக்கும் மாணவர்களின் நலன் மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக ரூ.3,014 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ. 200 கோடியில் கலை, அறிவியல் பொறியியல் கல்லூரிகளின் தரம் மேம்படுத்தப்படும் எனவும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44,042 கோடி ஒதுக்கீடு..

தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44,042 கோடி ஒதுக்கீடு செய்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

435 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்..!

கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் 435 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

1000 புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள்..!

வரும் நிதியாண்டில் புதிதாக 10,000 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டம் விரிவாக்கம்..!

பெண்களின் உயர்கல்விக்கு உதவும் புதுமை பெண் திட்டத்தை வரும் நிதியாண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

Related Post

கார்டை செருகுவதற்கு முன்பாகவே ரூ.50 ஆயிரத்தை அள்ளிக்கொடுத்த ஏ.டி.எம். எந்திரம்

Posted by - July 13, 2023 0
நாகர்கோவில்: குமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 54). ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் நேற்று காலை 10 மணிக்கு குளச்சல் மெயின் ரோட்டில் தூய…

என்னது, 2026ல் விஜய்தான் முதல்வரா! படத்தில் இடம்பெற்ற காட்சி.. வைரலாகும் போஸ்டர்

Posted by - July 9, 2025 0
விஜய் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ஜனநாயகன் படம் உருவாகி வருகிறது. இதுவே அவருடைய கடைசி படமாகும்.…
Generated Image November 05 2025 10 13AM

கனமழை எச்சரிக்கை! தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Posted by - November 5, 2025 0
“தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு, சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மழை எச்சரிக்கை குறித்து தெரிந்து கொள்வோம்” “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று…

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் – புகைப்படங்கள்!

Posted by - January 27, 2023 0
தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு இன்று நடைபெற்றது. தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில்…

எம்.ஜி.ஆர்., ஆக முயன்று தோற்ற மு.க. முத்து – தந்தை கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. ஜெ., உதவி

Posted by - July 19, 2025 0
மறைந்த முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி. ஆரை போலவே திரைப்படங்களில் நடித்து பிரபலமாக முயன்று மு.க. முத்து தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. MK Muthu Died: மறைந்த முன்னாள் முதலமைச்சர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *