ஸ்ரீபெரும்புதூர் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 2வது நாளாக ஐடி ரெய்டு

270 0

சென்னை:

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃப்ளெக்ஸ் இந்தியா செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்கள், அலுவலகங்கள் மற்றும் ஆவடி, சிப்காட் பகுதிகளில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப காலங்களாக பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் புதுக்கோட்டையில் மணல் குவாரிகளை நடத்தி வரும் அதிபர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட் அதிபர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதேபோல் மின்வாரியத்திற்கு உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிலும் வருமானவரித்துறை சோதனை செய்திருந்தது.ஸ்ரீபெரும்புதூர் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 2வது  நாளாக ஐடி ரெய்டு | Income Tax officials raided Sriperumbudur for the 2nd  day - Tamil Oneindia
இந்நிலையில் நேற்று ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு ஐடி அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. சென்னை பெருங்குடி, கந்தன் சாவடி ஆகிய பகுதிகளில் உள்ள மென்பொருள் நிறுவனங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்பட்டது.

புதுச்சேரி அருகே தவளக்குப்பத்தில் கடலூர் சாலையில் தனியார் கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு கம்ப்யூட்டர் உதிரிபாகங்களை ஒன்று சேர்த்து கம்ப்யூட்டர் தயார் செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தில் நேற்று காலை 15-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இரண்டாம் நாளாக இன்றும் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான ஃபிளக்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் ஐடி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்திற்கு தொடர்புடைய சென்னை, ஸ்ரீபெரும்புதூர் புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Post

ராகுகாலம்: அதன் பலன்கள் & நாள் வாரியாக நேரம்…

Posted by - December 11, 2025 0
#Rahukalam #RahukalamToday #TamilNews #TamilAstrology#TamilUpdates #AstrologyTamil #TodayRahukalam #TamilDailyNews ராகுகாலம் என்பது ஒவ்வொரு நாளும் ஓர் நிரந்தரமான நேரத்தில் வரும் அசுப காலம். இந்த நேரத்தில் புதிய…

ஜிப்மரில் கணைய புற்று நோய்க்கு ‘ரோபோடிக்’ அறுவை சிகிச்சை- சிறு துவாரமிட்டு 10 மணி நேரம் செய்து சாதனை

Posted by - August 12, 2023 0
புதுச்சேரி: புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வயிற்று வலி காரணமாக 38 வயது பெண் அனுமதிக்கப்பட்டார். சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு கணைய புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த…

90ஸ் கிட்ஸ் வாழ்க்கையில் விளையாடிய இன்ஸ்டா காதலி.. நாமக்கல்லில் நடந்தது என்ன?

Posted by - December 3, 2025 0
நாமக்கல்லில் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்த பெண்ணால் 34 வயது இளைஞரின் வாழ்க்கை பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது ப.வேலூர். இந்த ஊர் அருகே அமைந்துள்ளது…

அஜித்குமார் வழக்கு; “சாதாரண கொலை போல் தெரியவில்லை“ நீதிபதிகள் அதிர்ச்சி, அரசுக்கு 2 நாட்கள் கெடு

Posted by - July 1, 2025 0
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு விசாரணையின்போது தாக்கல் செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையால் நீதிபதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, 2 நாட்களில் அறிக்கை அளிக்க அரசுக்கு…

மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் – சென்னை உயர்நீதிமன்றம்

Posted by - June 19, 2025 0
அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *