அட்ரஸ் கேட்டதால் தலைக்கேறிய கோபம்: டெலிவரி நிர்வாகியை கத்தியால் தாக்கிய பெண்

241 0

பார்சல் டெலிவரி செய்யும் நபர்கள், சில நேரங்களில் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டெல்லியில் பெண் ஒருவர், டெலிவரி நிர்வாகியை கத்தியால் தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

டெல்லி துவார்கா பகுதியில் வசித்து வரும் சுமார் 40 வயது பெண்மணி ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை டெலிவரி செய்வதற்காக நிர்வாகி, அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணிடம், உங்களுடைய முகவரியை கூறுங்கள் என கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த பெண்மணி, டெலிவரி நிர்வாகியை கத்தியால் தாக்கியுள்ளார்.

மேலும் அவர் வந்த மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியுள்ளார். அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணை சமாதானப்படுத்த, டெலிவரி நிர்வாகி ஆபத்தில் இருந்து தப்பியுள்ளார். இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளிக்க, அந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரணையில் அந்த பெண் தனியாக வசித்து வருவதும், மனஅழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

Related Post

இந்திய பெருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது: ஐ.நா. தகவல்

Posted by - January 6, 2024 0
2023-ம் ஆண்டில் உலகளாவிய சவால்களை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டு, உலகின் அதிவேக வளர்ச்சி விகிதத்துடன் பொருளாதாரமாகத் தொடர்கிறது என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி 2024-ல் 6.2 சதவீதமாக…
sd

TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?

Posted by - March 14, 2026 0
டிவிஎஸ் தனது புதிய இ ஸ்கூட்டர் TVS Orbiter 1-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பேட்டரிக்கு சந்தா செலுத்தும் முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு நாளுக்கு நாள்…

தந்தையைப் பழிவாங்க மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற 15 வயது சிறுவன்… அதிர்ச்சி சம்பவம்!

Posted by - December 2, 2022 0
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கும், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் 15 வயது சிறுவனுக்கு இடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது. மகாராஷ்டிர மாநிலம், கல்யாண் ரயில் நிலையம் அருகே…

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்

Posted by - November 16, 2023 0
புதுடெல்லி: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. தமிழ்நாடு…

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விபத்தில் படுகாயம்..

Posted by - March 15, 2024 0
மேற்கு வங்க முதலமைச்சராக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், மம்தா பானர்ஜி விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக அக்கட்சி X தளத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளது. அதில் அவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *