அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை; கைதானவர் பற்றி பகீர் தகவல்

124 0

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் குற்ற வழக்குகள் பின்னணி கொண்ட நபர் கைது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், அதே பிரிவில் 4 ஆம் ஆண்டு படிக்கும் மாணவருடன் நட்புடன் பழகி வந்தார். இருவருமே பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு வெளியே சென்றனர். பின்னர், பல்கலைக்கழகம் திரும்பிய அவர்கள், வளாகத்திற்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சென்ற இரண்டு பேர், கல்லூரி மாணவரை சரமாரியாக தாக்கி விட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அதனை வீடியோ எடுத்து, வெளியே கூறினால், சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நீண்ட யோசனைக்குப் பிறகு, நேற்றிரவு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை பிரிவான பி.என்.எஸ்.64 -ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கியது.முதற்கட்டமாக, பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். சம்பவம் நடந்த அன்று பல்கலைக்கழகத்திற்குள் இருந்த மாணவ, மாணவிகளை தனித்தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டனர். மாணவியின் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்த, உயர் கல்வித்துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார். மேலும் சென்னை காவல் ஆணையரை தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறிய கோவி. செழியன், தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருப்பதாகக் கூறினார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் மாணவி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடவில்லை என்றும், சம்பந்தப்பட்டவர்கள் வெளி ஆட்கள் என்றும் இதுவரை நடத்திய விசாரணையின் அடிப்படையில் காவல்துறை தெரிவித்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பவர் ஞானசேகரன் என்பதும், அவர் கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், சாலையோர பிரியாணி கடை நடத்திவரும் ஞானசேகரன் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ஞானசேகரன் தினந்தோறும் இரவு நேரங்களில் பிரியாணிக் கடை விற்பனையை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு செல்வதும், அங்கு தனிமையில் இருக்கும் காதலர்களை வீடியோ பதிவு செய்து மிரட்டி பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக கடந்த 23ஆம் தேதி தனிநபராக சென்று மாணவியை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தாக ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Post

தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்- காரணம் என்ன?

Posted by - March 3, 2023 0
சென்னை: தமிழகத்தில் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அதீத காய்ச்சல், உடல் சோர்வால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள…

14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

Posted by - June 20, 2023 0
சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்…

அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?

Posted by - June 18, 2025 0
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் ஆட்சிக்கட்டிலில் அமர தீவிர நடவடிக்கையில் உள்ளனர். ஆளுங்கட்சியான…

ஜிப்மரில் கணைய புற்று நோய்க்கு ‘ரோபோடிக்’ அறுவை சிகிச்சை- சிறு துவாரமிட்டு 10 மணி நேரம் செய்து சாதனை

Posted by - August 12, 2023 0
புதுச்சேரி: புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வயிற்று வலி காரணமாக 38 வயது பெண் அனுமதிக்கப்பட்டார். சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு கணைய புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த…

“நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்” பயங்கரமாக கலாய்த்த இபிஎஸ்

Posted by - May 17, 2025 0
கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை செலுத்தவில்லை என ஸ்டாலின் அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *