அன்றே சொன்ன இந்தியா..! டிக்டாக்கிற்கு போதாத காலம்..! அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்திலும் தடையா?

146 0

TikTok: அமெரிக்க அரசின் தடை உத்தரவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியை தொடர்ந்து, டிக்டாக் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

டிக்டாக் சேவை நிறுத்தம்:

தேசிய தடை விதிக்கப்படுவதற்கு முன்பு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அமெரிக்காவில் உள்ள தனது பயனர்களுக்கான  TikTok அணுகலை அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் துண்டித்துள்ளது. அமெரிக்காவில் டிக்டாக்கை தடை செய்யும் அரசின் சட்டத்தை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உறுதி செய்தது, அதைத் தொடர்ந்து, இந்த தட விவகாரத்தில் அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தியது. ஜோ பிடன் அரசாங்கம் தலையிடாததாலும், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் வரை அவர் தலையிட முடியாததாலும், டிக்டாக்கிற்கு அமெரிக்காவில் உள்ள தனது பயனர்களுக்கான அணுகலைத் தற்காலிகமாக துண்டித்துள்ளது.

டிக்டாக் சொன்ன தகவல்:

பயனர்கள் பயன்பாட்டைப் பயன்படுத்த முயற்சித்தபோது, ​​அவர்களின் திரையில் ஒரு செய்தி தோன்றியது, அதில் “டிக்டாக்கை தடைசெய்யும் சட்டம் அமெரிக்காவில் இயற்றப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் டிக்டாக்கை இப்போதைக்கு பயன்படுத்த முடியாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, ஏற்கனவே இந்த செயலியை தங்களது சாதனங்களில் நிறுவிய பயனர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று நம்பப்பட்டது. ஆனால், டிக்டாக்கின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கை, தற்போதைய பயனர்களுக்கும் புதிய பதிவிறக்கம் செய்பவர்களுக்கும் இந்த செயலி முற்றிலும் அணுக முடியாததாகிவிட்டது என்பதை  தெளிவுபடுத்துகிறது.

முடிவை மாற்றுவாரா ட்ரம்ப்?

அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் திங்கள்கிழமையுடன் முடிவடைகிறது. அதே நாளில் டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார். டிக்டாக் தடை சட்டத்தை அமல்படுத்துவது வரவிருக்கும் நிர்வாகத்தின் பொறுப்பு என்று வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த தடையை டிரம்ப் முதலில் ஆதரித்த போதிலும், பின்னர் அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக பேசும்போது, “டிக்டாக் குறித்த எனது முடிவு வெகு விரைவில் எடுக்கப்படும், ஆனால் நிலைமையை மறுபரிசீலனை செய்ய எனக்கு நேரம் வேண்டும்” என தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கிலாந்திலும் தடையா?

இந்நிலையில், சீன அரசாங்கத்துடனான பைட் டான்ஸின் உறவின் காரணமாக அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் இது ஒரு தேசிய பாதுகாப்பு அபாயம் என்று குறிப்பிட்டு தடை சட்டத்தை கொண்டுவந்துள்ளனர். இதுதொடர்பான வழக்கில் அந்த செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க வேண்டும் அல்லது தடை விதிக்கப்படும் என்ற சட்டத்தை உச்சநீதிமன்றம் அண்மையில் உறுதிப்படுத்தியது. தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்காவின் வழியையே இங்கிலாந்து போன்ற நட்பு நாடுகள் பின்பற்றி வருகின்றன. எனவே, ஒருவேளை ட்ரம்ப் டிக்டாக் மீதான தடையை நீக்க மறுத்துவிட்டால், அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்து போன்ற பல நாடுகளிலும் அந்த செயலிக்கு தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதேநேரம், தேசிய பாதுகாப்பு என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கடந்த 2020ம் ஆண்டே,  இந்திய அரசு டிக்டாக் செயலியை தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

உலக நாடுகளை தெறிக்கவிட்ட ஈரான்; 4000 கிமீ பாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணை; அலறும் அமெரிக்கா,பிரிட்டன்

Posted by - March 21, 2026 0
மத்திய கிழக்கில் போர் தொடரும் நிலையில், இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க, பிரிட்டிஷ் ராணுவ தளங்கள் அமைந்துள்ள டியாகோ கார்சியாவை ஈரான் குறிவைத்திருப்பது, ராணுவ நிபுணர்களிடையே கவலைகளை…

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

Posted by - March 24, 2026 0
அமெரிக்கா – ஈரான் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக டிரம்ப் அறிவித்த உடனேயே, பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என ஈரான் மறுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில்…

நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் ரமலான் திருநாள்

Posted by - April 11, 2024 0
இன்று அதிகாலையில் பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு ரமலான் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் புத்தாடைகள் அணிந்து பங்கேற்றனர். இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான்…

பணியின்போது அரசு அதிகாரிகள் ஐ போன் பயன்படுத்த தடை – சீனா அதிரடி

Posted by - September 7, 2023 0
பீஜிங்: உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை ஐபோன் மற்றும் ஐபேடு. சீனாவிலும் ஐ-போன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சீனர்களில் பலரும்…

ஹமாஸ்- இஸ்ரேல் போர்: காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது

Posted by - November 7, 2023 0
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான வகையில் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஐ.நா. பொதுச்சபையில் போர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *