அமெரிக்காவின் பித்தலாட்டம்.! ட்ரம்ப்பை சந்திக்கும் பாக். ராணுவ தளபதி-பாகிஸ்தானியர்கள் எதிர்ப்பு

115 0

பாகிஸ்தான் ராணுவ தளபதியை நாங்கள் அழைக்கவே இல்லை என்று அமெரிக்கா கூறிய நிலையில், அமெரிக்காவில் ட்ரம்ப்-அசிம் முனிர் சந்திப்பு நிகழ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் 250-ஆவது ஆண்டு விழாவிற்கு, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிரை அழைக்கவே இல்லை என்று அமெரிக்கா கூறிய நிலையில், அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அசிம் முனிர், அதிபர் ட்ரம்ப் உளிட்டோரை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் மறுத்த அமெரிக்கா

இந்தியா பாகிஸ்தான் மோதலின்போது, இரு நாடுகளுக்கும் சமாதானம் செய்து வைத்ததாக ட்ரம்ப் கூறிவருகிறார். ஆனாலும், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆதரவாக செயல்படுகிறதோ என்ற சந்தேகமும் ஒருபுறம் இருந்தது. இந்த நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் அந்நாட்டு ராணுவத்தின் 250-ஆவது ஆண்டு விழாவிற்கு, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் அழைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அசிம் முனிர் விழாவிற்கு அழைக்கப்படவே இல்லை என அமெரிக்கா தெரிவித்தது.

அமெரிக்காவில் அசிம் முனிர் சுற்றுப்பயணம்

கடந்த 14-ம் தேதி, அதாவது சனிக்கிழமை, அமெரிக்காவின் ராணுவ விழா நடைபெற்ற நிலையில், 15-ம் தேதி, அதாவது ஞாயிற்றுக் கிழமையன்று, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர், 5 நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், இன்று அவர் அமெரிக்க அதிபரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் ட்ரம்ப்பின் நிகழ்ச்சி நிரலின்படி, வெள்ளை மாளிகையில் உள்ள கேபினட் அறையில், ட்ரம்ப்பை சந்திக்கிறார் அசிம் முனிர்.

இதைத் தொடர்ந்து, இந்த அமெரிக்க பயணத்தின்போது, அமெரிக்க செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோரையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்புகளின் போது, அமெரிக்கா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய உறவுகள் குறித்து அசிம் முனிர் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அசிம் முனிருக்கு பலத்த எதிர்ப்பு

இது ஒருபுறமிருக்க, பாகிஸ்தானியர்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அசிம் முனிர் தங்கியிருந்த ஹோட்டல் மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அருகே பலர் அசிம் முனிருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தியுள்ளனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “அசிம் முனிர், நீ ஒரு கோழை“, “நீ ஒரு அவமானம்“, “பாகிஸ்தானியர்களை கொன்று குவிக்கும் சர்வாதிகாரி“ என்றெல்லாம் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டபின், அசிம் முனிர் மேற்கொள்ளும் முதல் அமெரிக்க பயணம் இது. இரு நாடுளுடனான மோதலை தானே தடுத்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிவரும் நிலையில், இந்தியா அதை மறுத்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், பாகிஸ்தான் ராணுவ தளபதி ட்ரம்ப்பை சந்திப்பது, பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Related Post

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட உக்ரைன் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

Posted by - March 12, 2025 0
உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஜெலன்ஸ்கி ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன் போர் நிறுத்தம்…

சமூகவலைதளத்தில், பெண்கள் வாழ்வை தொலைக்கலாமா?

Posted by - November 8, 2024 0
பெண்கள் சமூகவலைதளத்தில் வாழ்வை தொலைக்காமல் இதுபோன்ற பரிமாறுதல்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. “ஏன் என் தங்கச்சியை பெயரைச் சொல்லி கூப்பிட்டே” “பெயரைச் சொல்லி…

பாகிஸ்தானியர்களுக்கு தடை.. மூடப்படும் அட்டாரி எல்லை.. மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிரடி!

Posted by - April 24, 2025 0
பயங்கரவாத தாக்குதலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கூட்டத்தின் இறுதியில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி, பாகிஸ்தான்…
qq

எந்தப் பிரச்சினைக்கும் போர் தீர்வாகாது!

Posted by - March 4, 2026 0
ஈரான் முதலில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததற்கான தகவல்கள் இல்லை என அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பான பென்டகன் கூறியிருக்கிறது. ஈரானால் இஸ்ரேலுக்குத்தான் அச்சுறுத்தலே தவிர, அமெரிக்காவுக்கு அல்ல என்று…

15 ஆண்டுகளுக்கு பின் ரேஸிங் களத்தில் அஜித்… போர்ஷே காரில் கெத்தாக வந்த டீம்!

Posted by - November 28, 2024 0
 இந்த நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை தனது நிறுவனத்தின் காரிலும் அஜித் பயன்படுத்தியுள்ளார். ஐரோப்பிய ஜிடி 4 கார் பந்தயத்துக்கு தயாராகும் தனது நிறுவன…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *