சிங்கப்பூரில் பரவி வரும் புது வகை கொரோனா!..

249 0

நோய் வருவதும், அதைக் குணப்படுத்துவதும், சாதாரண மருத்துவ நிகழ்வுதான் என்றாலும், அந்த நோய் தொற்று நோயாக இருக்கும் பட்சத்தில், அது பரவாமல் தடுப்பது மிகவும் முக்கியமானது.

புதுவகையான நோய் என்றால் , நோய்க்கான காரணம் என்ன? எதனால் அந்தநோய் வந்தது ? என்பதைக் கண்டறிந்து, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்குள் நோய்க்குப் பலர் பலியாகி விடுவார்கள்.

அப்படி ஒரு ஆபத்தான நோய் தான் கொரோனா. 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் உருவாகி, சிங்கப்பூருக்கு வந்து அதன் பின் உலகம் முழுவதும் பரவிய கொரோனா நோய் உலகையே தலைகீழாக புரட்டிப் போட்டது. மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்தது.

பல லட்சக் கணக்கான மக்கள் இறந்து போன நிலையில், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப் பட்டது என்றாலும் , அந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் இப்போது சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்.

விடாத நோய் போல இந்த கொரோனா வைரஸ் ஆண்டுக்கு ஆண்டுக்கு, புதிது புதிதாக உருவம் மாறி வந்து மக்களைப் பாதிக்கிறது.

முதலில், கோவிட் – 19 வந்தது. அடுத்து JN வைரஸ் என்றானது .இப்போது கொரொனா வைரஸ் KP 1, KP 2 என்கிறார்கள்.

இதுவும் சீனாவில் இருந்து தான் இறக்குமதி ஆகி இருக்கிறது. சிங்கப்பூரில் இப்போது இந்த தொற்றுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் கடைசி வாரத்தில் 13,700 பேர் பாதிக்கப் பட்டிருந்த நிலையில், மே மாதம் 5 ஆம் தேதியில் இருந்து 7 நாட்களுக்குள் கிட்டத்தட்ட 30000 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சராசரியாக ஒருநாளைக்கு 250 பேருக்கு மேல் புதுவகை கொரொனாவால் பாதிக்கப் படுகின்றனர் என்று சிங்கப்பூர் அரசின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் தொடக்க நிலையில் உள்ள புதிய கொரொனா அலை, வரும் ஜூன் மாதத்துக்குள் உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

60 வயதுக்கு மேலுள்ள முதியவர்களை அதிகம் பாதிக்கும் என்பதால் அவர்கள் எச்சரிக்கையுடம் இருக்கவேண்டும் என்றும், கோவிட்-19 தடுப்பூசியை கடந்த 12 மாதங்களில் எடுத்துக் கொள்ளாதவர்கள்,உடனடியாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சிங்கப்பூர் அரசு வலியுறுத்தி இருக்கிறது.

சமூக கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாய தனிமை படுத்தல் போன்ற நடவடிக்கைகளை கொண்டு வரும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்று அறிவிக்கப் பட்டிருந்தாலும் சிங்கப்பூர் மக்கள் பீதியுடன் தான் இருக்கிறார்கள்.

சீனாவில் உருவாகி , சிங்கப்பூர் வழியாக புது கொரொனா வைரஸ் ,உலகமெங்கும் பரவி வருகிறது.

ABC செய்தி நிறுவனத்தின் தகவல் படி, KP.2 கொரொனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் 28 சதவீதம் பரவி உள்ளது எனத் தெரியவந்துளளது.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த புதுவகை கொரொனா வைரஸ் 91 பேரைப் பாதித்துள்ள நிலையில் இந்திய மக்களும் கவனமாக இருக்கவேண்டும் என்பது அவசியமாகிறது. எனினும், இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரொனா, முதல் அலையின் பாதிப்புகளில் இருந்தே இன்னுமும் உலகம் மீண்டு வரவில்லை. அதற்குள் அடுத்தடுத்து கொரொனா வகைகள் உருவாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

உக்ரைன் அணை உடைந்து பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்வு

Posted by - June 27, 2023 0
கீவ் : உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மீது நோவா ககோவ்கா அணைக்கட்டு உள்ளது. 1956-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை 30 மீட்டர்…

புதிய சிக்கலில் நித்தியானந்தா : பல லட்சம் ஏக்கர் அமேசான் காட்டை ஆக்கிரமித்ததாகப் புகார்!

Posted by - April 7, 2025 0
சர்ச்சைக்குப் பெயர் பெற்ற இந்து சாமியார் நித்தியானந்தா, தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பல லட்சம் ஏக்கர் அமேசான் காடுகளை ஆக்கிரமித்த புதிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். பரபரப்பை…

“இந்தியா செய்யுறத பார்த்தாலே எரிச்சலாகுது” – ஒட்டுமொத்தமாக கடுப்பில் குதித்த அமெரிக்கா

Posted by - August 1, 2025 0
இந்தியாவின் செயல்பாட்டால் அவர்களுடனான உறவில் எரிச்சல் ஏற்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். USA On INDIA: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல்…

இந்தியா ஸ்டாப் பண்ணிக்கனும்.. ரஷ்யாவால் வந்த வினை, 100% வரி போடுவேன் என எச்சரிக்கை

Posted by - July 16, 2025 0
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவிகித வரி விதிக்கப்படும் என, நாட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் எச்சரித்துள்ளார். ரஷ்யா உடனான வர்த்தகத்தை நிறுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகளை, நாட்டோ…

காதலிக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.900 கோடி சொத்தை உயில் எழுதி வைத்த முன்னாள் இத்தாலி பிரதமர்

Posted by - July 10, 2023 0
ஐரோப்பிய நாடான இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி. இவர் கடந்த மாதம் காலமானார். இறந்தபின் அவரது உயில் வாசிக்கப்பட்டபோது, அவர் தனது சொத்துக்களில் ரூ. 905,86,54,868…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *