ஆசிரியர் தகுதித் தேர்வு: கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி! திமுக அரசுக்கு வைத்த கோரிக்கை என்ன?

129 0

நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது – எடப்பாடி பழனிசாமி.

நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

செப்டம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வுகளுக்கு விண்ணப்பப் பதிவு நேற்று முதல் தொடங்கி உள்ளது. இந்தத் தேர்வுக்கு செப்டம்பர் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப். 9 முதல் 11ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் நவம்பர் 1ஆம் தேதி காலையிலும் இரண்டாம் நாள் நவம்பர் 2ஆம் தேதி காலையிலும் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து இருந்தது.

நிர்வாகத் திறனற்ற திமுக அரசு

இந்த நிலையில் தேர்வு தேதிகளை உடனே மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

’’நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது. கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாள் அன்று தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.

உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும், கிறிஸ்தவப் பெருமக்கள், மறைந்த தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களை அவர்தம் கல்லறையில் வழிபடுவர் என்பதால், அவர்களால் தேர்வுக்கு செல்ல இயலாது.

அலட்சியமாக செயல்படும் திமுக அரசு

ஒரு சரியான நிர்வாகம் உள்ள அரசு இதையெல்லாம் கருத்தில் கொண்டிருக்கும். ஆனால், நடப்பதோ ஸ்டாலின் மாடல் ஆட்சியல்லவா? பொம்மை முதல்வரைப் போலவே, மக்கள் உணர்வுகள் அறியாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்’’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Post

Generated Image January 12 2026 5 19PM

விண்டேஜ் கார் ஓட்டுவதையும், சிலம்பம் சுற்றுவதையும் ரீல்ஸ் பதிவிட்டு விளையாடுவதா.!

Posted by - January 12, 2026 0
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, 3 மாத காலத்திற்குள் முடிவு எட்டப்படும் என தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனையில் கொலை சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அதிகாலையில் ரவுடி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் தலைநகர்…
tvk vijay e1777957622993

TN Election Result 2026: சென்னையின் 16 எம்.எல்.ஏக்கள் யார்? வாக்கு வித்தியாசம்? மிகப்பெரிய, சிறிய வெற்றியாளர்கள்

Posted by - May 5, 2026 0
TN Election Result 2026 Chennai MLAs: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவில் தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களின் விவரங்கள் கீழே…
Generated Image November 17 2025 11 34AM

தாக்கும் காங்கிரஸ்… தயங்கும் திமுக! – என்ன மாயம் செய்தார் ராஜேந்திர பாலாஜி?

Posted by - November 17, 2025 0
சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இம்முறை சிவகாசியில் போட்டியிடும் திட்டத்துடன் இருக்கும் திமுக மவுன சாட்சியாக நிற்பது…
sdfgbhnm

அதிமுகவில் இணைந்தது ஏன்?

Posted by - March 13, 2026 0
அதிமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் காளியம்மாள்: ஆட்சி மாற்றம், மரண தண்டனை குறித்த பரபரப்பு பேச்சு! நாம் தமிழர் கட்சியில் பணியாற்றி வந்த காளியம்மாள்…
Generated Image January 19 2026 11 05AM

தினகரனை வரவேற்கிறேன்” – இபிஎஸ்

Posted by - January 21, 2026 0
சென்னை: “தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள மரியாதைக்குரிய டிடிவி தினகரனை வரவேற்கிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், டிடிவி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *