dmk 2

“ஆட்சியில் பங்கு குறித்து இனி யாரும் பேசமாட்டார்கள்” – ஆர்.எஸ்.பாரதி உறுதி!

60 0

சென்னை: “கூட்டணி ஆட்சி குறித்து நாளை முதல் யாரும் பேசமாட்டார்கள். விஜய்யை நாங்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “கூட்டணி ஆட்சி குறித்து நாளை முதல் யாரும் பேசமாட்டார்கள். ரூ.5000 கொடுத்த பிறகு, மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என அரசியல் கட்சிகளுக்கு தெரியும்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது, தமிழக மக்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். ராகுல் காந்தியும் இதை ஏற்றுக் கொள்வார். மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் செல்வப்பெருந்தகை ஆகியோருக்கு தான் பதில் சொல்ல வேண்டும். மற்றவர்களுக்கு பதில் சொல்ல முடியாது.

விஜய்யை நாங்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம். மக்களும் எங்களை நம்பி வருகிறார்கள். விசிலுக்கு நீண்ட ஆயுள் கிடையாது, மூச்சிருக்கும் வரை மட்டுமே ஊத முடியும். அம்பேத்கர் தான் நமக்கு வழிகாட்டி. பிஹார் தேர்தலின்போது, நிதிஷ்குமாருக்கு மோடி பல கோடிகளை கொடுத்தார். அப்படி எங்களுக்கு கொடுத்தாரா? ” என்றார்.

முன்னதாக, இன்று காலை காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில், “2021-ல் 173-ல் போட்டியிட்டு 133 வெற்றி .. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களைத் தான். அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதியின் விளக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. கூட்டணி பற்றி ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, செல்வப்பெருந்தகை மட்டும் பேசுவதே ஆதாரபூர்வமானது என்று மற்றவர்களின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Related Post

Gemini Generated Image slc13kslc13kslc1

காரைக்குடியில் ஓட்டு கூட கிடையாது.. இவர் வேட்பாளரா? – சீமானை விளாசிய கார்த்தி சிதம்பரம்!

Posted by - April 7, 2026 0
சீமானின் மாமனார் மறைந்த காளிமுத்து 1998ல் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் நின்றார். நான் ஜெயித்தாலும், தோற்றாலும் காரைக்குடிக்கு வருவேன் என சொன்னார். அந்த தேர்தலில் காளிமுத்து…
Generated Image January 02 2026 11 05AM

தமிழகத்தில் அடுத்த ஆட்சி எங்க ஆட்சி தான்.!

Posted by - January 2, 2026 0
தமிழகத்தில் ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என உறுதியோடு களத்தில் இறங்கியுள்ளது பாஜக, அந்த வகையில் பிரம்மாண்ட மோடி பொங்கல் விழாவில் தொடங்கி அடுத்த 2 மாதங்களுக்கு…

“பேச முடியாத அளவில் துயரத்தில் உள்ளோம்”- உருக்கமாக பேசிய ஆதவ் அர்ஜுனா

Posted by - October 11, 2025 0
த.வெ.க.வை முடக்கும் நோக்கில் செயல்படுவதாக அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். த.வெ.க.வை முடக்கும் நோக்கில் செயல்படுவதாக அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளோம்…
Generated Image November 08 2025 10 15AM

சொந்த கட்சியினரால் அல்லது மக்களால் திமுக அழியும்: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

Posted by - November 8, 2025 0
சென்னை: ‘சொந்த கட்​சி​யின​ரால் அல்​லது மக்​களால் திமுக அழி​யும்’ என பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் தெரி​வித்​தார். வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்​டாட்​டம்…

மதுரை மாநாட்டிலாவது திருந்துவாரா விஜய்? பவுன்சர்கள் ஒகே.. ஆனா ரவுண்ட்ஸ் எப்போ? தவெக சம்பவம் செய்யுமா?

Posted by - August 21, 2025 0
மதுரை மாநாட்டின் மூலமாவது தவெக தலைவர் விஜய் தீவிர அரசியலை முன்னெடுப்பாரா? என அவரது கட்சி தொண்டர்களே ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மதுரை மாநாட்டில் விஜய் தனது மாநிலம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *