ஆரஞ்சு பழம் சீசன் வர போகுது! நல்லதுதான் செய்யும்! ஆனா மறந்தும் கூட “இந்த” உணவுகளுடன் சாப்பிடாதீர்!

254 0

சென்னை:

ஆரஞ்சு பழத்துடன் எப்போதும் இந்த பழத்தை சேர்த்து சாப்பிடவே கூடாது தெரியுமா? மேலும் ஆரஞ்ச் பழத்தின் நன்மைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.

ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பை அகற்றும் திறன் ஆரஞ்சு பழத்திற்கு உள்ளது. மேலும் இதய பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்றுகிறது.

ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் உடலில் புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழித்து உடலை பாதுகாத்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை உணவு சாப்பிடும் முன்பு ஆரஞ்சு பழத்தை ஜூஸாக போட்டு குடித்து வருவது நன்மை தரும்.ஆரஞ்சு பழம் சீசன் வர போகுது! நல்லதுதான் செய்யும்! ஆனா மறந்தும் கூட "இந்த" உணவுகளுடன்  சாப்பிடாதீர்! | Dont eat Orange along with some foods - Tamil Oneindia

இந்த ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிடுவதால் பெண்களுக்கு 50 சதவீதம் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அது போல் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது. முடி கொட்டுவது குறைந்து முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிக்கும் சக்தி ஆரஞ்சு பழத்திற்கு உண்டு. மலட்டுத்தன்மை ஏற்படாமல் பாதுகாக்கிறது. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அது போல் ஈறுகளில் வீக்கம், சொத்தை பல், வாய் கிருமிகளை கட்டுப்படுத்தும். தூக்கமில்லாமல் அவதிப்படுவோர் தூங்குவதற்கு முன்பு ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும். இந்த பழம் ஒவ்வாமை, அசவுகரியம், நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தக்காளி: ஆரஞ்சு பழத்துடன் சேர்த்து உண்ணக் கூடாத சில உணவுகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது தக்காளி. இதுவும் ஆரஞ்சும் அசிடிக் உணவு பொருட்களாகும்.ஒரே நேரத்தில் இரு அமிலத்தன்மை கொண்ட உணவுகளை உட்கொள்வது அசிடிட்டி பிரச்சினையை உண்டாக்கும்.

தயிர்: அது போல் தயிரிலும் அமிலத்தன்மை இருப்பதால் அத்துடன் ஆரஞ்சு பழத்தை சேர்த்து சாப்பிடக் கூடாது. இதுவும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

வாழைப்பழம்: வாழைப்பழத்துடன் ஆரஞ்சு பழத்தை சேர்த்து சாப்பிட்டால் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். வயிறு சார்ந்த நோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்களுக்கு பிரச்சினைகளை அதிகப்படுத்தும்.

மது, காபி: ஆரஞ்சு பழம் சாப்பிட்டுவிட்டு காபி குடித்தல், மதுபானம் குடித்தல் கூடவே கூடாது. இவற்றை செய்தால் வயிற்று பகுதியில் எரிச்சலை ஏற்படுத்தும். அது போல் பால் பொருட்களையும் ஆரஞ்சு பழத்துடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.

Related Post

Udhaynidhi On Vijay: ”அந்த அறிவு கூடவா இல்லை” – சினிமாக்காரர் விஜய்க்கு பதிலடி தந்த உதயநிதி

Posted by - December 7, 2024 0
Udhaynidhi On Vijay: விஜய் பங்கேற்ற நிகழ்ச்சி தொடர்பான கேள்விக்கு, சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என உதயநிதி பதிலளித்துள்ளார். Udhaynidhi On Vijay: திமுக பற்றிய விஜயின் பேச்சு…

ஆளுநரை சந்தித்த விஜய்! கைதான புஸ்ஸி ஆனந்த்.. தவெகவில் பரபரப்பு

Posted by - December 30, 2024 0
பொதுமக்களிடம் தவெக தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை வழங்கிய தவெக கட்சியினர் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்தனர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி…

பட்டுபோன்ற மென்மையான நீளமான கூந்தலை பெறணுமா? அப்ப ‘இந்த’ 7 உணவுகளை மறக்காம சாப்பிடுங்க!

Posted by - December 26, 2023 0
ஆண், பெண் என அனைவரும் தங்கள் தலைமுடி ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறார்கள். நவீன வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால், தலைமுடி பாதிப்படைகிறது.…

ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் சீர்கேட்டை வீடியோவாக வெளியிட்ட ஆவின் ஊழியர் பணி நீக்கம் – இ.பி.எஸ் கண்டனம்..!!

Posted by - September 6, 2024 0
இதுகுறித்து இ.பி.எஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது : திமுக அரசின் 40 மாத கால ஆட்சியில் ஆவின் நிறுவனம் படுபாதாளத்திற்கு சென்றுள்ளது.மிக அத்தியாவசியப் பொருளான பால் வழங்கும்…

ஆதார் போன்று ’மக்கள் ஐடி’ உருவாக்க தமிழக அரசு திட்டம்..!

Posted by - December 28, 2022 0
Makkal ID: ஆதார் போல தமிழக மக்களுக்கு தனி ஐடி உருவாக்க தமிழ்நாடு மின் முகமை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆதார் எண் போன்று மக்கள் ஐடியை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *