சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் திருச்செல்வம். இவர் ஆரம்பத்தில் டப்பிங் தியேட்டரிலும், இளையராஜா மியூசிக் கம்போஸ் செய்யும் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்து கம்போஸ் பின் தமிழ், மலையாளம், இந்தி என்று பல மொழிகளில் தயாரான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றினார். அதற்குப் பிறகு தான் இவர் சின்னத்திரையில் சீரியல்களை இயக்கும் பணியில் இறங்கினார். -விளம்பரம்- இவர் முதன்முதலாக 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த மெட்டி ஒலி என்ற தொடரில் இணை இயக்குனராக பணியாற்றினார். அந்த தொடரின் மூலம் திருச்செல்வம் நடிகராகவும் அறிமுகமானார். அதற்கு பிறகு கோலங்கள் என்ற தொடரை இயக்கி சின்னத்திரை இயக்குனராக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த தொடர் மத்தியில் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது.
-இதனை தொடர்ந்து அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களை திருச்செல்வம் இயக்கி இருக்கிறார்.மேலும், திருச்செல்வம் இயக்கிய சீரியல்கள் எல்லாம் இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அதற்கு காரணம் இவர் இயக்கும் சீரியல் எல்லாம் பெண்களின் வாழ்வை மையமாகக் கொண்ட கதையாக அமைந்திருக்கும். தற்போது இவர் சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார்.
அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை. இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மத்தியில் கூட்டு குடும்பமாக அண்ணன் தம்பி வாழுகிறார்கள்.இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்களை எல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்களாக கருதி வருகிறார்கள்.அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்து வந்து அவர்களை வீட்டு வேலை செய்ய வைக்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க அவர்களை அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள்.இப்படி ஒரு நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். ஆரம்பத்தில் பல பிற்போக்கு வசனங்கள் இருந்ததால் இந்த தொடருக்கு பல எதிர்புகள் எழுந்தது.ஆனால், சமீப காலமாக இந்த தொடரில் பல பெண் புரட்சி வசனங்கள் இடம்பெற்று வருவதால் இந்த தொடருக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மத்தியில் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் டிடியின் அக்கா பிரியதர்ஷினி நடித்து வரும் நிலையில் தற்போது அவர் சீரியலில் இருந்து விலகி இருக்கிறது. தற்போது அவருக்கு பதிலாக சீரியல் நடிகை பானுமதி மாற்றப்பட்டு இருக்கிறார். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பலர் இந்த மாற்றத்தை ஏற்க மறுத்துள்ளனர்.
- Home
- பொழுதுபோக்கு
- ‘இனி இவருக்கு பதில் இவர்’ எதிர் நீச்சல் தொடரில் இருந்து விலகிய முக்கிய நடிகை. அடடே இவரா ?
Related Post
Bigg Boss 7 Exclusive: டைட்டில் வென்ற வைல்டுகார்டு போட்டியாளர் அர்ச்சனா! 2வது, 3வது இடங்களில் யார்?
ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலின்படி இந்த சீசனின் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அர்ச்சனா. இன்று காலை பிக் பாஸ் செட்டில் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங்…
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ரித்திகா வெளியேற காரணமே இதுதானா?- வெளிவந்த தகவல்
பாக்கியலட்சுமி சீரியல் பெங்காலி மொழியில் தயாராகி ஒளிபரப்பாகி வந்த ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர் பாக்கியலட்சுமி. தமிழில் சுசித்ரா மற்றும்…
பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் ப்ரோமோ! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா சீரியல். பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் சீரியல் முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்,…
மீண்டும் வருகிறதா ஆதி குணசேகரன் கேரக்டர்.. எப்படி இருக்கு எதிர்நீச்சல் சீரியல்… டி.ஆர்.பி. ரேட்டிங் நிலவரம் இதுதான்!
மாரிமுத்துவின் கேரக்டருக்கு சரியான நபர் கிடைத்தால் குணசேகரன் மீண்டும் என்ட்ரி ஆகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்நீச்சல் மெகா தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் மாரிமுத்து…
பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து எனது காட்சிகள் இருக்குமா என்பதே எனக்கு தெரியவில்லை- ரேஷ்மா சொன்ன ஷாக்கிங் தகவல்
பாக்கியலட்சுமி விஜய் தொலைக்காட்சியின் TRPயை உயர்த்தும் தொடர்களில் ஒன்றாக இருக்கிறது பாக்கியலட்சுமி. பாக்கியா கோபியை விவாகரத்து செய்து வெளியே அனுப்பியது முதல் தற்போது ராதிகா கோபி வீட்டிலேயே…
Categories
- MEMES (12)
- Uncategorized (1)
- அரசியல் (184)
- இந்தியா (470)
- உலகம் (174)
- சினிமா (815)
- தமிழ்நாடு (1,087)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (293)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (85)
Recent Posts
- தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 234 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப் பதிவு

- திருவண்ணாமலை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்

- “என்னை அடக்கவே முடியாது.. மக்கள் விசில் பக்கம் தான்” – கடைசி நேரத்தில் விஜய் சொன்ன வார்த்தை!

- சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் – இபிஎஸ்

- எம்மதமும் சம்மதம்! திருச்சி வாக்கு சேகரிப்புக்கு நடுவே வழிபாடு! மதநல்லிணக்கத்தை செயலில் காட்டிய விஜய்
