இன்று கரையை கடக்கும் மாண்டஸ் புயல்.. 8 மாவட்டங்களில் அதிகனமழை கொட்டும் – வானிலை மையம் அலெர்ட்

236 0

Cyclone Mandous | திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.வலுவடைந்த மாண்டஸ்.. அதிதீவிர புயலாக கரையை கடக்கும்

வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் இன்று புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கடக்க உள்ளதால் தமிகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் தற்போது சென்னை தென்கிழக்கே 350 கி.மீ தொலைவில் உள்ளது. தற்போது 12 கி.மீ வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று (டிசம்பர் 09) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்., தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை (டிசம்பர் 10) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Related Post

ரூ.1000 வந்துருக்கா.. வங்கி அக்கவுண்ட் பேலன்ஸ் செக் பண்ண எளிய வழி.!

Posted by - September 15, 2023 0
மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிரகாரிக்கப்பட்டால் மேல் முறையீடு செய்வதற்கு அரசு வழிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1 கோடியே 6…

புதுச்சேரியில் மீண்டும் கொரோனா பரவல்: பொதுமக்கள் அச்சம்

Posted by - December 11, 2023 0
புதுச்சேரி: புதுச்சேரியில் சில மாதமாக கொரோனா தொற்று இல்லாமல் பூஜ்ஜியமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மக்கள் சளி, காய்ச்சலால் அவதியடைந்து…

விவாகரத்து கொடுக்க மறுத்த கணவன் – கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி கைது!

Posted by - December 6, 2024 0
கள்ளக்குறிச்சி மாவட்டம், சோழவரம் அருகே கூலிப்படையை ஏவி, கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார்…

“வாக்குறுதி எண் 311… ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோருவோர் மீது ஒடுக்குமுறையா?

Posted by - December 31, 2025 0
சென்னை: ‘சம வேலைக்கு சம ஊதி​யம்’ கோரிக்​கையை முன்​வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில் டிச.26 முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. அரையாண்டுத் தேர்வு…

வேண்டிய வரங்களைத் தரும் குலதெய்வ விரத வழிபாடு

Posted by - December 2, 2022 0
குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வம் என்பது ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும். ஒருவருக்கு குல தெய்வம், இஷ்ட தெய்வம், வழிபடு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *