இரவில் மல்லிகை வாசனை, கொலுசு சத்தம்.. சிசிடிவியில் பதிவான ஆவி?… பீதியில் மக்கள்..!

239 0

செருப்பு அணிந்து நடக்கும் சத்தமும், யாரோ அழுவது போன்ற சத்தமும் நள்ளிரவில் கேட்பதாக தகவல் பரவியது.

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா. திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்குள் தவறி விழுந்து கடந்த 24-ம் தேதி உயிரிழந்து விட்டார். மல்லிகா உடலை அடக்கம் செய்த இரண்டு தினங்களுக்கு பிறகு நடந்த சம்பவங்கள் கிராமத்தையே தூக்கம் இல்லாமல் செய்துள்ளது.

மல்லிகாவின் எதிர் வீட்டில் வசிக்கும் ராபர்ட், தனது வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளார். அந்த சிசிடிவியில் மல்லிகாவின் ஆவி உலாவுவது பதிவாகி இருப்பதாக தகவல் பரவ கிராமமே பரபரப்பாகி விட்டது. சிசிடிவியில் நிழல் போன்ற கருப்பு நிற உருவம் பதிவாகியுள்ளது. மல்லிகாவின் வீட்டிற்குள் இருந்து வெளிவரும் கருப்பு நிற உருவம், அந்த தெருவை சுற்றி சுற்றி வருகிறது.

தலையை சீவிய படி இளம்பெண் ஒருவர் தெருவில் நிற்க, அந்த பெண்ணை சுற்றியே கருப்பு நிற உருவமும் நிற்பது போல சிசிடிடி காட்சியில் பதிவாகியுள்ளது.

இரவில் சாதாரணமாக தெரு நாய்கள் குரைப்பதையும் சிசிடிவியுடன் சேர்த்து தகவல் பரவ, பேய் நடமாடுகிறது என அக்கிராமமே நம்ப ஆரம்பித்து விட்டது. இதனால் அப்பகுதி மக்கள் தனியாக வெளியே செல்லவே அச்சப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இரவில் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.

இரவு நேரத்தில் மட்டுமின்றி பகலிலும் அவ்வழியாக செல்லும் போது ஏதாவது சத்தம் கேட்டால் ஆவியாக இருக்குமோ என்று பயப்படுகின்றனர். சிசிடிவி காட்சிகள் மின்னல் வேகத்தில் சமூக வலைதளங்களில் பரவ, பயத்தில் வீட்டிற்கு உள்ளேயே முடங்கி விட்டனர்.

மல்லிகா வசித்த தெருவில் மல்லிகை பூ வாசனை வருவதாகவும், கூடவே ஜல் ஜல் என கொலுசு சத்தமும் கேட்பதாக சிலர் கொளுத்தி போட, அப்பகுதியே பரபரப்பாகி விட்டது. செருப்பு அணிந்து நடக்கும் சத்தமும், யாரோ அழுவது போன்ற சத்தமும் நள்ளிரவில் கேட்பதாக தகவல் பரவ தூக்கத்தை தொலைத்து நிற்கின்றனர் அப்பகுதி மக்கள்.

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என ஒட்டுமொத்த மாவட்ட அதிகாரிகளும் இது குறித்து பேச ஆரம்பித்தனர். ஆனால், உண்மை தலைகீழ். ராபர்ட் என்பவர் பொறுத்திய சிசிடிவி கேமிரா மீது சிலந்தி வலை கட்டியிருந்ததே பேய் நடமாட்டம் போல காட்சியளிக்க காரணம் என்பது தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் சிசிடிவி காட்சிகளை எப்படி பரவ விட்டாய் என ராபர்ட் மீது கோபமடைந்துள்ளனர். பேய் பயத்தில் கிராம மக்கள் கிலியான விவகாரம் இப்போது திருவள்ளூர் மாவட்டத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Related Post

தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் சாம்சங் தொழிலாளர்களை போராட விடு – வைரலாகும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் ட்வீட்..!!

Posted by - October 10, 2024 0
தங்கள் உரிமை கேட்டுப் போராடும் சாம்சங் தொழிலாளர்களை போராட விடுங்கள் என பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள செய்தியில்…

கூட்டணி கேள்விக்கு டென்ஷன்.. தேர்தல் நேரத்தில் திமுகவை விட்டு கட்சிகள் பிரியும்.. இபிஎஸ் அதிரடி…

Posted by - March 26, 2025 0
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு டென்ஷனான நிலையில், தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி உடையும் என்பதுபோல் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்.. ஆடிப்போன எம்.ஆர்.கே

Posted by - May 24, 2025 0
விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்ட பேனர்களில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில் விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக…

வெப்பநிலை இயல்பைவிட மேலும் அதிகரிக்கும் : வானிலை மையம் எச்சரிக்கை

Posted by - February 26, 2024 0
தென்தமிழக உள் மாவட்டங்கள், ஏனைய வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மற்றும் நாளை,…

பால் உற்பத்தியாளரை ஒருமையில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ்!

Posted by - November 22, 2025 0
பால் உற்பத்தியாளரை அமைச்சர் மனோ தங்கராஜ் தொலைத்து விடுவேன் என மரியாதை குறைவாகப் பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பாண்டியராஜபுரம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *