தேர்தல் விதிமுறைகள் மீறியது தொடர்பாக இதுவரை 110 புகார்கள் வந்துள்ளதாக ஈரோடு தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.இதனிடையே தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில அவர் கூறியதாவது: தொடர்ந்து புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்கள் யாரும் சிறை வைக்கபடவில்லை. இதுகுறித்து வாக்காளர்களிடம் விசாரணை நடத்தினோம். ஆனால் தாங்களாகவேதான் சென்றோம் என தெரிவித்ததாக சொல்கிறார்கள்.இந்திய தேர்தல் ஆணையத்திலிருந்து எங்களிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. நேற்று கூட தேர்தல் நடத்தும் ஏற்பாடுகள் குறித்துதான் வீடியோ கான்பிரஸ் மீட்டிங் நடந்தது, விதிமுறைகள் மீறியது குறித்து எங்களிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 48.6 லட்சம் ரூபாய் வரை பணம் பிடிக்கப்பட்டது. இவ்வாறு சிவகுமார் தெரிவித்தார்.
Related Post
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகை தேநீர்
புதுணர்வு தரும் பானமான தேநீர், உலக அளவில் பெரும்பான்மையான மக்களால் விரும்பப்படுகிறது. காலையில் எழுந்ததும் தேநீர் பருகாவிட்டால், பலருக்கும் அன்றைய நாள் முழுமை பெறாது. கலாசாரம் மற்றும்…
மாதம்பட்டி ரங்கராஜ் மறுமண வழக்கில் வந்த அதிரடி தீர்ப்பு… ஜாய் கிரிசில்டா போட்ட வைரல் பதிவு
மாதம்பட்டி ரங்கராஜ் தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். சினிமா படங்களை தாண்டி சமையல் தொழில் மூலம் தான்…
குளிர்காலத்துல மாரடைப்பு வர அதிக வாய்பிருக்காம்… அவை வராமல் தடுக்க ‘நீங்க’ என்ன செய்யணும் தெரியுமா?
குளிர்காலம் சுற்றுப்புறத்தை உறைபனியின் அமைதியான அடுக்கில் மூடுவதுடன், உங்கள் உடலுக்கு பல சாவல்களை வழங்குகிறது. குறிப்பாக இருதய பிரச்சினைகள் உள்ளவர்கள் குளிர்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். குளிர்காலம்…
வழுக்கும் கழிவறைகள், பலி வாங்கும் சிறைகள் – சீர்கெட்ட காவல்துறை? கண்கெட்ட சிஎம் ஸ்டாலின்?
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தபிறகு லாக்-அப் மரணங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். சிவகங்கையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பழி வாங்கிய ரஜினி.. நடு ரோட்டில் செய்த மாஸ் சம்பவம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒரு கால கட்டத்தில் ரஜினி எந்த அளவுக்கு எதிர்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது…
Categories
- Sports (85)
- TN Political Zone (355)
- Trending Tamil (713)
- Viral Social (14)
- அரசியல் (239)
- இந்தியா (478)
- உலகம் (175)
- சினிமா (834)
- தமிழ்நாடு (1,157)
Recent Posts
- ஜீ தமிழின் புதிய பிரம்மாண்ட தொடர் ‘சாமந்தி’ – ஜூலை 13 முதல் உங்கள் இல்லங்களில்!

- பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக

- JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் – சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? – முழு லிஸ்ட்

- GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்..

- TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
