ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக vs நாதக.. விலகிய பாஜக, அதிமுக.. வேட்புமனுவுக்கு இன்றே கடைசி நாள்

201 0

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல்  செய்ய இன்றே கடைசி நாள் திமுக வேட்பாளர் மற்றும் நாதக வேட்பாளர் வேட்புமனு இன்று தாக்கல் செய்ய உள்ளனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல்  செய்ய இன்றே கடைசி நாளான இன்று முக்கிய கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் திமுக,  காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில், திமுக 125 இடங்களிலும் காங்கிரஸ் 18 இடங்களிலும் வெற்றி பெற்றது. குறிப்பாக, ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா போட்டியிட்டார். ஆனால், எதிர்பாராத விதமாக, உடல்நலக்குறைவால் அவர் திடீரென காலமானார்.இதனை தொடர்ந்து 2023ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில், அவரது தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் எதிர்பாராத விதமாக உடல்நலக் குறைவு ஏற்ப்பட்டு கடந்த ஆண்டு இறுதியில் அவரும் காலமானார். இதனால்  5 ஆண்டுகளுக்குள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இரண்டாவது முறையாக, இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.

விலகிய பாஜக, அதிமுக:

இந்த நிலையில் இந்த தேர்தலில் அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவிக்கையில் ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, நடைபெறவிருப்பது, இடைத் தேர்தலுக்கான இடைத் தேர்தல். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலின்போது, பொதுமக்களைப் பட்டியில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்த்தோம். என்று தெரிவித்தார். இதனால் இந்த தேர்தலில் பிரதான கட்சியான திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் மட்டுமே போட்டியிடுகிறது.

திமுக போட்டி:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் திமுக போட்டியிட காங்கிரஸ் விட்டுக்கொடுத்தது. திமுக சார்பில் திரு. வி.சி.சந்திரகுமார் (தி.மு.க.கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்) என்று திமுக அறிவித்திருந்தது.

வேப்மனு தாக்கல்:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கியது, ஆனால், பொங்கல் அரசு விடுமுறை அனைத்தையும் கருத்தில் கொண்டால், வெறும் 3 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் இருந்த நிலையில் இன்று வேப்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

கடைசி நாளான இன்று திமுக வேட்பாளரான வி.சி.சந்திரகுமாரும் நாதக சார்பில் வேட்பாளர் சீதாலட்சுமியும் வேட்புமனு இன்று தாக்கல் செய்ய உள்ளனர். இது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட 9 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நாளை ( சனிக்கிழமை) பரீசிலனை செய்யப்படுகிறது. மேலும் வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஜனவரி 20 ஆம் தேதி கடைசி நாளாகும், அதன் பின்னர் அன்று மாலை இறுதி வேட்பாளார் பட்டியல் வெளியிடப்படும்

இடைத்தேர்தலுக்கான முக்கிய தேதிகள்:

  • வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள் – 10.01.2025
  • வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் – 17.01.2025
  • வேப்பு மனு திரும்ப பெற கடைசி நாள் – 20.01.2025
  • வாக்குப்பதிவு – 05.02.2025
  • வாக்கு எண்ணிக்கை – 08.02.2025

Related Post

விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!

Posted by - March 17, 2026 0
ரஜினிகாந்த் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி கையில் எடுத்துள்ளது. அந்த அணியில் இடம் பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம்…

நன்றி கெட்ட வைகோ? ”அப்ப இனிச்சது, இப்ப கசக்குதோ” நம்பிக்கை இல்லாத போர் வாள்?

Posted by - July 11, 2025 0
மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் மூன்று முறை எப்போது எனது உயிரை காப்பாற்றினார்? என பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர்…

’’அமைச்சர் பொன்முடிக்கு பட்டை நாமம்’’- பதவியை பறித்த முதல்வர் ஸ்டாலின்- இதுதான் காரணமா?

Posted by - April 11, 2025 0
திமுக துணை பொது செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் பொன்முடி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தந்தை பெரியார் திராவிடர் கழக…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் தொல்.திருமாவளவன்

Posted by - September 16, 2024 0
“கூட்டணியில் இருப்பதும், அதிலிருந்து வெளியேறுவதும் சுதந்திரமான ஒரு முடிவு. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் சுதந்திரம், கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெரிய கட்சிகளுக்கும் உள்ளது” என குறிப்பிட்டார். விசிக…

பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!

Posted by - July 23, 2025 0
அதிமுக கூட்டணிக்குள் விஜய்யை கொண்டு வருவதற்காக பாஜக-வை கூட்டணியில் இருந்து வெளியேற்ற எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *