rajini admk

விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!

158 0

ரஜினிகாந்த் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி கையில் எடுத்துள்ளது. அந்த அணியில் இடம் பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா, ரஜினிகாந்த் பற்றி பேசிய கருத்துக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆதவ் அர்ஜூனா சர்ச்சை பேச்சு

கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு அரசை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் ஆர்ப்பாட்டம் நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜூனா பங்கேற்று பேசினார். அப்போது ரஜினியை திமுக மிரட்டியதால் அவரால் அரசியல் பயணத்தை தொடர முடியவில்லை என்ற கருத்தை முன் வைத்தார். அவரின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்களை கடுமையான கோபத்தில் ஆழ்த்தியது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் போஸ்டர் மூலமும், வீடியோ வெளியிட்டும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

அமைதி காத்த திமுக

அதேசமயம் திமுக தரப்பில் இந்த விஷயத்திற்கு பெரிய அளவில் எதிர்வினையாற்றாமல் சாஃப்டாக கையாண்டு வருகின்றனர். ஏற்கனவே திமுக vs தவெக என மோதல் சென்று கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் பணியில் கவனம் செலுத்தி வருவதால் திமுக தரப்பில் யாரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ரஜினி தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்ற பாணியில் பதிலளித்து வருகின்றனர்.

விஜய்க்கு எதிராக ரஜினி

 

இந்த நிலையில் ரஜினிகாந்த் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி கையில் எடுத்துள்ளது. அந்த அணியில் இடம் பெற்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமமுக தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் ஒரே சமயத்தில் ட்வீட் போட்டு சமூக வலைத்தளம் மூலம் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில், ஆதவ் அர்ஜூனா பெயரை எங்கேயும் குறிப்பிடவில்லை. அவர் தனது பதிவில், “தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டார்,  அன்புச் சகோதரர் ரஜினிகாந்த் குறித்து த.வெ.க கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளது கண்டனத்திற்குரியது.அரசியலைக் கடந்து எல்லோராலும் மதிக்கப்படும் திரை ஆளுமை ரஜினிகாந்த் .

புரட்சித் தலைவரின் அன்பையும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நன்மதிப்பையும் பெற்ற அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது ஏற்கதக்கதல்ல. அரசியலுக்கு வருவது எப்படி ஒவ்வொரு தனிமனிதரின் உரிமையோ, அதேபோல் அரசியலுக்கு வராமல் இருப்பதும் அவர்தம் உரிமை. அதற்கான உரிய காரணத்தை அவரே தெரிவித்துவிட்ட பிறகு, அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர, அரசியல் நோக்கத்தோடு அதை அணுகி, அவதூறு கருத்துகளைப் பேசுவது என்பது அரசியல் நாகரிகமற்ற செயல்” என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் விஜயை எதிர்க்க திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ரஜினி விவகாரம் பிரம்மாஸ்திரமாக அமைந்துள்ளது. இதன்மூலம் ரஜினி ரசிகர்களின் வாக்குகளை தங்கள் பக்கம் ஈர்க்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

டெல்லியில் அமித் ஷாவுடன் இபிஎஸ் ஆலோசனை

Posted by - September 17, 2025 0
சென்னை: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்…
Generated Image November 22 2025 10 34AM

பிரிந்தவர்களுக்கான ‘பி பிளான்’ – பழனிசாமியிடம் பேச வாசனை அனுப்பியதா பாஜக?

Posted by - November 22, 2025 0
பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகளை ஒருங்கிணைப்பதற்காக ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் சமயத்தில் இருந்து விடாமல் தொடர் முயற்சிகளை எடுத்து வரும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இப்போதும்…

தீர்ப்பு வழங்கியதற்காகவே மோசமாக விமர்சிக்கின்றனர்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

Posted by - October 6, 2025 0
சென்னை: வழக்குகளில் தீர்ப்பு வழங்கியதற்காக நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பின்புலம் குறித்து சமூக வளைதளத்தில் மோசமாக விமர்சிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார். யூடியூப்…
tvk

Kolathur Election Result: ஸ்டாலினுக்கு நிகழ்ந்த துரோகங்கள்..! கொளத்தூரில் பின்தங்க காரணம் யார்? பேக் ஃபயரான விளம்பரங்கள்?

Posted by - May 4, 2026 0
Kolathur Election Results 2026: சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து பின்தங்கியிருப்பது, தமிழ்நாடு அரசியலில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Kolathur…
Generated Image January 16 2026 5 04PM

‘‘திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’’ – பொங்கல் விழாவில் பழனிசாமி பேச்சு

Posted by - January 16, 2026 0
மேட்டூர்: “எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி. சில கட்சிகள் வரும், இவற்றையெல்லாம் பகிரங்கமாக கூற முடியாது. வலிமையான கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். திமுக ஆட்சி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *