CHT

எதிர்க்கட்சிகளுக்கு செங்கோட்டையன் வார்னிங்!

80 0

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் நிலையில் தலைவர் விஜய் இதுவரை செய்தியாளர்களை சந்திக்காமல் இருப்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

விஜய் பேசும்போது தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே திரும்பி பார்க்கும் நாளாக அமையும் என தமிழக வெற்றிக் கழகத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் களம் காண்கிறது. அக்கட்சி அரசியல் களத்தில் விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் நிலையில் தலைவர் விஜய் இதுவரை செய்தியாளர்களை சந்திக்காமல் இருப்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இதற்கு தவெகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன், “விஜய் பேசாமல் இருக்கும்போதே பேச வேண்டும் என கேட்கும் மக்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர் பேசினால் என்ன ஆகும் என்பதை எதிர்க்கட்சி நண்பர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விஜய் பேசினால் உங்கள் கதை முடிந்து விடும். காரணம் எதை, எப்போது, எந்த நேரத்தில் பேச வேண்டும் என்பதையறிந்து அவர் பேசுவார். அப்படி விஜய் பேசும்போது தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே திரும்பி பார்க்கும் நாளாக அமையும்.

ஏன் இதை சொல்கிறேன் என்றால் அவரின் ஆற்றலும், சிந்தனையும் நான் பார்க்கின்றபோது திரைப்படத்தில் மட்டுமல்ல உலகளவில் சிறந்த தலைவராக விஜய் வரப் போகிறார். தமிழ்நாட்டை ஆளப் போகிறார். ஒருமுறை தமிழ்நாட்டில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விட்டால், அவர் இருக்கும் வரை விஜய் தான் முதலமைச்சராக இருப்பார். ஒரு இளைஞர் இன்று அரசியலுக்கு வந்திருக்கிறார். சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்க சினிமாவில் ரூ.500 கோடி வருவாய் தேவையில்லை என சொல்லி வந்திருக்கிறார். ஜனநாயகன் படம் நிறுத்தப்படாலும் கவலையில்லை. ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக விஜய் வந்துள்ளார்.

எல்லா தலைவரையும் நான் பார்த்து விட்டு வந்திருக்கிறேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து 3ம் தலைமுறையாக புரட்சி தளபதி விஜயோடு நான் இணைந்து பயணிக்கின்றேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு ஒரு சகோதரனாக இருந்து என்னென்ன உதவிகளை செய்ய வேண்டுமோ செய்துக் கொடுப்பேன்.

234 தொகுதிகளையும் நான் கணக்கில் கொண்டு கரூர் சம்பவத்திற்கு முன், கரூர் சம்பவத்திற்கு பின், ஜனநாயகன் படம் முடக்கப்பட்டதற்கு முன், பின், அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்  பார்த்தால் நாம் 42 சதவிகிதம் இருக்கிறோம். எல்லா கட்சியும் சேர்ந்து 40 சதவிகிதத்தையும் எட்டிப் பிடிக்கவில்லை. இதனால் தான் டெல்லி நம்மை பார்த்து பயப்படுகிறது. தனிச்சையாக நம்மிடம் இவ்வளவு வாக்கு வங்கி இருப்பதாக கூறப்படுவதைக் கண்டு அதிர்கிறார்கள். விஜய் அறிக்கை விட்டால் ஒன்றரை கோடி பேர் பார்க்கிறார்கள்.

விருப்பமனு வாங்க 25 ஆயிரம் பேர் வந்தார்கள். போலீசாரே திணறி விட்டார்கள். பனையூர் அலுவலகம் வீதியில் இருப்பவர்கள் போராட்டம் நடத்தி விடும் அளவுக்கு சென்று விட்டது. தமிழக வெற்றிக் கழகத்தில் 2 மணி நேரத்தில் 25 ஆயிரம் விருப்பமனு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தை தமிழ் மண்ணில் இருந்து யாரும் நீக்க முடியாது” என கூறியுள்ளார்.

Related Post

இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா… விஜய் தங்க ஹோட்டல் இல்லை என்று கைவிரிப்பு

Posted by - September 8, 2025 0
விஜய் தங்குவதற்கு திருச்சியில் உள்ள ஹோட்டல் அதிபர்கள் இடம் கொடுக்க மறுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. திருச்சி: அரசியல் சதுரங்கத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் காய் நகர்த்துகின்றனர். ஆனால் இதெற்கெல்லாம்…
hq720

கும்​பகோணம் த.வெ.க வேட்​பாளர் புது முயற்சி….

Posted by - April 14, 2026 0
ஹாலோகி​ராம்’ தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி தவெக தலை​வர் விஜய் நேரில் பிரச்​சா​ரம் செய்​வது போல புதிய முயற்​சியை கும்​பகோணம் தவெக வேட்​பாளர் மேற்​கொண்​டுள்​ளார். தவெக தலை​வர் விஜய் தனது…
Gemini Generated Image 1mc9ek1mc9ek1mc9

கர்மா சும்மா விடுமா? – உலகத்தில் முதல் முறை.. திருமாவை சாடிய மோகன் ஜி!

Posted by - April 7, 2026 0
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது. அங்கு ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் ஏனாம் தொகுதிகளில் தான் அறிவித்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என…

தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு: முதல்வருக்கு உதயநிதி வேண்டுகோள்

Posted by - December 15, 2025 0
திரு​வண்​ணா​மலை: வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிட இளைஞர்​களுக்கு அதிக வாய்ப்​பு​கள் வழங்க வேண்​டும் என்று முதல்​வரிடம் கோரிக்கை வைப்​பேன் என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கூறி​னார். திரு​வண்​ணா​மலை​யில்…

அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார்.. சவாலுக்கு சம்மதம் சொன்ன அன்புமணி!

Posted by - October 29, 2025 0
திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *