Generated Image November 22 2025 10 34AM

பிரிந்தவர்களுக்கான ‘பி பிளான்’ – பழனிசாமியிடம் பேச வாசனை அனுப்பியதா பாஜக?

136 0

பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகளை ஒருங்கிணைப்பதற்காக ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் சமயத்தில் இருந்து விடாமல் தொடர் முயற்சிகளை எடுத்து வரும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இப்போதும் அதற்கான முயற்சிகளை புதிய ஃபார்முலாவுடன் தொடங்கி இருப்பதாக செய்திகள் வருகின்றன.

அதிமுக அணிகள் ஒன்றாக இணையவேண்டும், பாஜக-வுடன் மீண்டும் அதிமுக கூட்டணி அமைய வேண்டும் என்பதில் அதிக முனைப்போடு செயல்பட்டவர்; இன்னமும் செயல்பட்டு வருபவர் வாசன். அதனால் தான் அதிமுக அணிகளை எந்த விதத்திலாவது ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து நிறுத்தும் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்திருக்கிறது பாஜக.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மாநில பாஜக நிர்வாகி ஒருவர், “பழனிசாமி விரும்பாவிட்டாலும் அதிமுக ஒன்றுபட்டு நின்றால் தான் தங்கள் அணிக்கு பலம் என நம்புகிறது பாஜக தலைமை. அதை நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிமுக-வில் இருக்கும் தங்களது விசுவாசிகள் மூலமாகவும் அவ்வப்போது பழனிசாமிக்கு உணர்த்திக் கொண்டும் வருகிறது.

பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியை தொடங்க செங்கோட்டையன் கெடு வைத்ததும் அப்படியான ஒரு முயற்சிதான். ஆனால், தனது பேச்சு பழனிசாமியிடம் எடுபடாமல் போனதால், தானே களத்தில் இறங்கிய செங்கோட்டையன், தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோருடன் வெளிப்படையாகவே கைகோத்தார். இதனால் அவரை கட்சியை விட்டு அதிரடியாக நீக்கினார் பழனிசாமி. ஆனாலும் பாஜக தலைமையின் ஆதரவு தனக்கு இருப்பதால் ‘அதிசயம்’ நடக்கும் என்ற அசாத்திய நம்பிக்கையில் இருக்கிறார் செங்கோட்டையன்.

இதற்கு நடுவில் தான், அடுத்ததாக ஒருங்கிணைப்பு முயற்சியில் வாசனை அணிலாக பயன்படுத்தி இருக்கிறது பாஜக தலைமை. சேலத்தில் பழனிசாமியை தான் சந்தித்தது வழக்கமான ஒன்று தான் என்று வாசன் சொன்னாலும், அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டவர் களை மீண்டும் கட்சிக்குள் சேர்க்காவிட்டாலும் தனி அணியாகவாவது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் அங்கீகரிக்க வேண்டும் என்ற பாஜக தலைமையின் விருப்பத்தை பழனிசாமி உடனான சந்திப்பின் போது வாசன் தெரிவித்ததாகச் சொல்கிறார்கள்.

கோவை விசிட்டின் போது வாசனை சாட்சியாக வைத்துக் கொண்டு பிரதமர் மோடியும் இது விஷயமாக பழனிசாமியிடம் பேசுவதாக திட்டம் இருந்தது. ஆனால், கோவை நிகழ்ச்சிக்கு பிரதமர் ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததால் இந்தப் பேச்சுவார்த்தை நடக்காமல் போய்விட்டது.

என்றாலும், செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி. தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பதற்குப் பதிலாக, அவர்களை தனி அணியாக அங்கீகரித்து பாஜக-வுக்கு ஒதுக்கப்படும் சீட்களில் அவர்களுக்கும் சில தொகுதிகளை விட்டுக் கொடுப்பது தொடர்பாக பழனிசாமி தரப்பிடம் தொடர்ந்து வாசன் பேசிக் கொண்டிருக்கிறார். அநேகமாக பிரதமர் அல்லது அமித் ஷாவுடனான பழனிசாமியின் அடுத்த கட்ட சந்திப்பின் போது இந்தப் பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை எட்டலாம்” என்றார்.

எல்லாம் சரி, “பழனிசாமியை முதல்வர்வேட்பாளராக ஏற்கமாட்டோம்” என்று காட்டுக்கும் மேட்டுக்கும் இழுக்கும் தினகரனை தங்கள் ரூட்டுக்குக் கொண்டுவர என்ன செய்யப் போகிறது பாஜக?

Related Post

தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி?

Posted by - December 15, 2025 0
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும்…
Generated Image January 12 2026 5 19PM

கொத்து கொத்தாக வாக்குறுதி அறிவித்த இபிஎஸ்

Posted by - February 4, 2026 0
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக சார்பாக இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி கடன் தள்ளுபடி, முதியோர் ஓய்வூதியம், மானிய விலையில் சிலிண்டர் என பல…
Generated Image January 12 2026 5 19PM

விண்டேஜ் கார் ஓட்டுவதையும், சிலம்பம் சுற்றுவதையும் ரீல்ஸ் பதிவிட்டு விளையாடுவதா.!

Posted by - January 12, 2026 0
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, 3 மாத காலத்திற்குள் முடிவு எட்டப்படும் என தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனையில் கொலை சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அதிகாலையில் ரவுடி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் தலைநகர்…

மதுரை தவெக மாநாட்டில் விஜய் உடைக்கும் சீக்ரெட்! போட்டியிடும் தொகுதி பற்றி அறிவிக்க வாய்ப்பு!

Posted by - August 21, 2025 0
மதுரை: மதுரையில் இன்று தவெக மாநாடு (TVK Maanadu Madurai) நடைபெறுகிறது. மிக பிரமாண்டமாக நடைபெறும் இந்த மாநாட்டில் விஜய் மாலை 6 மணியளவில் பேசுவார் என்று…
CHT

எதிர்க்கட்சிகளுக்கு செங்கோட்டையன் வார்னிங்!

Posted by - February 9, 2026 0
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் நிலையில் தலைவர் விஜய் இதுவரை செய்தியாளர்களை சந்திக்காமல் இருப்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *