“என்னை உலக நாயகன் என யாரும் அழைக்கவேண்டாம்” – ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்!

270 0

கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது என கமல்ஹாசன் கருத்து.

தன்னை எந்தவிதமான அடைமொழியுடனும் அழைக்க வேண்டாம் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன். உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன். உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு.சினிமாக் கலை, எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது, அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான். பிற கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது. அனைவராலுமானது. திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது.கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது.

அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது. மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றைத் துறப்பது என்பதே அது.

Related Post

லிஸ்டை ரெடி பண்ணுங்க.. விஜய் போட்ட ஆர்டர்.. திமுகவிற்கு எதிராக இதுதான் வியூகம்

Posted by - July 8, 2025 0
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது சுற்றுப்பயணத்திற்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பிரச்சினைகளை பட்டியல் எடுக்க கூறியுள்ளார். தமிழக அரசியல் களம்…

“நான் இப்படி செய்வனோ..?” – ஜி.கே.மணி உருக்கம்

Posted by - May 17, 2025 0
45 ஆண்டுகாலமாக இருக்கிறேன். ஒரு சின்ன உயிருக்கு கூட தீங்கு விளைவிக்க நினைக்க மாட்டேன். ஜி.கே.மணி இப்படி செய்வாரா என நீங்களும் உங்கள் மனசாட்சி தொட்டு கேட்டுக்…

தமிழக அரசியலில் புதிய திருப்புமுனை : சீமான் , திருமாவளவனுக்கு கமல்ஹாசன் வாழ்த்து..!!

Posted by - June 10, 2024 0
புதிய சின்னத்தோடு தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையிலும் தீரத்துடன் களம் கண்ட தம்பி சீமானின் நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை எட்டிப் பிடித்து மாநிலக் கட்சியாக…
udhay

Udhayanidhi Stalin: தவெக அரசு இதை கண்டிப்பா பண்ணுங்க.. விஜய்க்கு பறந்த வேண்டுகோள்.. உதயநிதி சொல்வது என்ன?

Posted by - June 20, 2026 0
ரத்து செய்யப்பட்ட நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 2 மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட…

நீண்ட இழுபறிக்கு பின் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

Posted by - March 27, 2024 0
மயிலாடுதுறை தொகுதியை குறி வைத்து மணிசங்கர் அய்யரின் மகள், ராஜ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் காய் நகர்த்தி வருவதாகக் கூறப்பட்டது. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *