ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றார் தினேஷ் கார்த்திக்… பிரியாவிடை கொடுத்த ஆர்சிபி வீரர்கள்

395 0

அகமதாபாத்தில் நடைபெற்ற பிளேஆஃப் போட்டியில் தோல்விக்குப் பிறகு விராட் கோலி உட்பட ஆர்சிபி வீரர்கள், மூத்த விக்கெட் கீப்பர்-பேட்டரான தினேஷ் கார்த்திக்கிற்கு மரியாதை செய்து பிரியாவிடை அளித்தனர்.

ஐ.பி.எல். தொடரில் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு வெளியேறிய நிலையில், அந்த அணிக்காக விளையாடி வந்த தமிழ்நாடு வீரர் தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்றார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற பிளேஆஃப் போட்டியில் தோல்விக்குப் பிறகு விராட் கோலி உட்பட ஆர்சிபி வீரர்கள், மூத்த விக்கெட் கீப்பர்-பேட்டரான தினேஷ் கார்த்திக்கிற்கு மரியாதை செய்து பிரியாவிடை அளித்தனர். அப்போது அவர் தனது கையுறைகளை கழற்றி மைதானத்தை வலம் வந்து ரசிகர்களின் பாராட்டையும் ஏற்றுக்கொண்டார்.

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கிய முதல், 17 ஆண்டுகள் விளையாடிய வீரர்களில் 38 வயதான தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். மொத்தம் 257 போட்டிகளில் ஆடி 4,842 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 22 அரை சதங்கள் அடக்கம். நடப்பு சீசனில் 15 போட்டிகளில் ஆடி 326 ரன்களை சேர்த்த அவர், மீண்டும் ஒரு முறை ஆர்சிபி-க்கு ஃபினிஷராக செயல்பட்டார்.2008ல் டெல்லி அணிக்காக முதன்முதலில் களமிறங்கிய அவர், தொடர்ந்து டெல்லி, குஜராத், கொல்கத்தா, பெங்களூரு என 6 அணிகளுக்காக விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

IPL 2024 : 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வென்றது பஞ்சாப் கிங்ஸ்…

Posted by - May 2, 2024 0
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு ஜானி பேர்ஸ்டோ சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கு…

ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. சூப்பர் ஓவர் த்ரில்.. ஸ்டார்க்கால் டெல்லி அபார வெற்றி

Posted by - April 17, 2025 0
ராஜஸ்தான் – டெல்லி அணி ஆடிய போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்ற நிலையில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் இன்று நடந்த போட்டியில்…

இந்தியா-பாகிஸ்தான் மீண்டும் மோதல்! மன்னிப்பு கேட்ட நடுவர்.. சூடுபிடிக்கும் சூப்பர் 4 போட்டிகள்

Posted by - September 18, 2025 0
ஆசியக் கோப்பையில் நடப்பு சாம்பியனான இந்தியா, மீண்டும் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. ஆசியக்கோப்பை போட்டியின் சூப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ள…

தலைக்கு மேல் கத்தி..! கப் அடிச்சா கேப்டன்சி, இல்லன்னா வீட்டுக்கு தான் – ரோகித் சாதிப்பாரா?

Posted by - March 7, 2025 0
சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல் முடிவை பொறுத்து ரோகித் சர்மா, இந்திய அணியின் கேப்டன் பதவியில் நீடிப்பது குறித்து முடிவு செய்ய பிசிசிஐ (BCCI) திட்டமிட்டுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ்…
Generated Image November 12 2025 10 03AM

Jadeja CSK: சிஎஸ்கே-வை விட்டு வெளியேற ஜடேஜா ”ஓகே” சொன்னது ஏன்? ராஜஸ்தானின் கிஃப்ட், சாம்சனுக்கு ”நோ”

Posted by - November 12, 2025 0
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு விலக, ஆல்-ரவுண்டர் ஜடேஜாவிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வழங்கிய சலுகைகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். சென்னை சூப்பர் கிங்ஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *