கடனை அடைக்க கடன் கேட்கும் முகேஷ் அம்பானி…உலகளாவிய பணக்காரருக்கே இந்த நிலைமையா…?

228 0

Reliance Industries Seeking Big Loan – முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம் மற்றும் உலகளாவிய அளவில் 100 ஆவது மிகப்பெரிய நிறுவனம் ஆக அறியப்படுகிறது, கிட்டதட்ட 3,47,362 பணியாளர்களை கொண்டு இயங்கும் ரிலையன்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் பல தொழில்களை கையாண்டு வருகிறது, நிகழ் நிதி ஆண்டில் மட்டும் ரிலையன்ஸ் 120 பில்லியன் USD வருமானத்தை ஈட்டி இருக்கிறது.

அதில் நிறுவனத்தின் நிகர இலாபம் மட்டும் கிட்டதட்ட 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை நெருங்கலாம் என கூறப்படுகிறது, அதே சமயத்தில் கடந்த செம்படம்பர் 2024 நிலவரப்படி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர கடன் என்பதும் 39.60 பில்லியன் டாலர்களாக இருக்கிறது, இது வட்டியை சேர்க்காமல் என்னும் போது வட்டியை சேர்த்தால் இன்னும் கடன் தொகை அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறது.

இந்த கடன் தொகை நிறுவனத்தின் நிகர வருமானத்தில் மூன்றில் ஒரு பங்காக இருக்கிறது, அதே சமயத்தில் நிகர இலாபத்தை விட 4 மடங்குகள் இருக்கிறது, இந்த நிலையில் தான் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது, அதாவது தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக சரிந்து வருவதால், வங்கிகள் மிகப்பெரிய நிறுவனங்களிடம் இருந்து கடனை வசூலிக்க அழுத்தங்கள் கொடுத்து வருகின்றன.

இதில் ரிலையன்ஸ் நிறுவனமும் அடங்கும் என்பதால், ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய கடன் தொகைகளையும் வங்கிகள் தற்போது துரத்தி வருகின்றன, இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் வருகின்ற முதல் காலாண்டின் கடன் நிலுவைத் தொகையை அடைக்க பிற வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து 25,500 கோடி கடன் வாங்க திட்டமிட்டு இருக்கிறதாம், கடன் பெறுவதற்கான முடிவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என தெரிகிறது.

” ரிலையன்ஸ் தொடர்ந்து இந்திய வங்கிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதால் கொள்கை முடிவுகளில் மாற்றம் ஏற்படலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது “

Related Post

இமாசல பிரதேசத்தில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Posted by - February 21, 2023 0
சிம்லா: இமாசல பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவின் வடக்கே 56 கிலோமீட்டர் தொலைவில் நேற்று இரவு 10.38 மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம்…

காதலியின் கணவரை கொன்று 6 துண்டாக வெட்டி புதைத்த கள்ளக்காதலன் கைது

Posted by - July 19, 2023 0
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியைச் சேர்ந்தவர் மிஸ்ரலால் மேக்வால் மகன் ஜோகேந்திரா (வயது 33). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து…

‘தமிழக வெற்றி கழகம்’ நடிகர் விஜயின் கட்சி பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted by - February 2, 2024 0
நடிகர் விஜய் தொடங்க உள்ள கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். #தமிழகவெற்றிகழகம் #TVKVijay https://t.co/Szf7Kdnyvr —…

டெல்லி கார் வெடிப்பு – அவசர தாக்குதலா? திட்டமிட்ட சதியா? சிக்கும் டாக்டர்கள் – ஷாக்கிங் அப்டேட்ஸ்

Posted by - November 11, 2025 0
Redfort Car Blast: டெல்லியில் நடந்த கார் வெடிப்பு அவசர தாக்குதலா? திட்டமிட்ட சதியா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. Redfort Car Blast: டெல்லியில் வெடித்த காரை…

நாடு முழுவதும் நடந்த 2 மாத கால ஆய்வில் ரூ.15 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு

Posted by - July 6, 2023 0
புதுடெல்லி: வர்த்தக நிறுவனங்கள், ஜி.எஸ்.டி. சட்டத்தின்கீழ் பதிவு செய்து கொள்வது கட்டாயம். அப்படி பதிவு செய்யப்படும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. அடையாள எண் அளிக்கப்படும். ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *