கனடா காட்டுத்தீ.. பேரழிவை நினைவூட்டும் மஞ்சள் நிற புகையில் மூழ்கிய நியூயார்க்!

260 0

கனடா காட்டுத்தீ காரணமாக நியூயார்க் நகர் முழுக்க மஞ்சள் நிற புகை மூட்டம் ஏற்பட்டது. காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மிக மோசமான காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்கனடாவில் பயங்கர காட்டுத்தீ- 13 ஆயிரம் பேர் வெளியேற்றம் - ஐபிசி தமிழ்

காட்டுத்தீ காரணமாக கனடாவில் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மஞ்சள் நிற புகைமூட்டம் மேன்ஹேட்டன் நகரின் வானுயர்ந்த கட்டிங்களை மூழ்கடிக்க செய்திருக்கிறது.

இதன் காரணமாக காற்று மாசு ஏற்பட்டதோடு, விமானங்கள் காலதாமதமாக கிளம்பி சென்றன. மேலும் விளையாட்டு நிகழ்வுகள் தாமதமாக துவங்கப்பட்டன. காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் இருந்து சிகாகோவின் மேற்கு பகுதி மற்றும் தெற்கு அட்லாண்டா வரை பாதிப்பை ஏற்படுத்தியது.

கனடாவில் இந்த காட்டுத்தீ காரணமாக சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காட்டுத்தீயில் சுமார் 3.8 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு முழுக்க தீயில் கருகின. கனடா வரலாற்றிலேயே மிக மோசமான காட்டுத்தீ இது என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 1960-க்களில் இருந்து இதுவரை ஏற்பட்டதிலேயே மிகவும் மோசமான காற்று மாசு இது என நியூயார்க் நகர சுகாதார துறை ஆணையர் அஸ்வின் வாசன் தெரிவித்துள்ளார். இந்த நிலை, பல நாட்கள் வரை நீடிக்கும் என்றும், இது அவசரகால நெருக்கடி என்று நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சூல் தெரிவித்தார்.

Related Post

பிரேசிலில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்வு

Posted by - February 21, 2023 0
ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் சவொ பாலோ மாகாணத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.…

கனடாவில் 45 ஆயிரம் ஏக்கர் காடுகளை சேதமாக்கிய காட்டுத்தீ

Posted by - June 10, 2023 0
கனடாவில் இதற்கு முன் இதுவரை இல்லாத அளவிற்கு காடுகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன. ஒரு இடத்தில் பற்றிய தீயை அணைப்பதற்குள் அடுத்த இடத்தில் தீப்பிடித்து எரிகிறது. இதனால்…

காமேனி படுகொலையும் ஈரான் போரும்: இந்திய மவுனத்தின் பின்னணியில் 5 காரணிகள்

Posted by - March 4, 2026 0
1. முதல் காரணமாக, இஸ்ரேலுடனான இந்தியாவின் நெருக்கத்தைக் குறிப்பிடலாம். இந்தியா பல ஆண்டுகளாகவே இஸ்ரேலுடன் நட்புறவில் இருக்கிறது. இந்த உறவு சமீப ஆண்டுகளில் பன்மடங்கு வலுப்பெற்றுள்ளது. 2. இந்தியாவுக்கும் ஈரானுக்கும்…

உலகளவில் 67.82 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு

Posted by - February 17, 2023 0
அமெரிக்கா: உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா…

இரட்டை வேடம் போடும் அமெரிக்கா : உண்மையை அம்பலப்படுத்திய புள்ளிவிவரம்!

Posted by - August 8, 2025 0
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என இந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், ரஷ்யாவுடன் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் பல லட்சம் கோடி ரூபாய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *