கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது: சுற்றுலா பயணிகள் பீதி

224 0

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் கிழக்கே வங்க கடலும் தெற்கே இந்திய பெருங்கடலும் மேற்கே அரபிக்கடலும் அமைந்து உள்ளன. இதனால் இந்த முக்கடல் சங்கமத்தை பார்த்து ரசிப்பதற்காக இந்த 3 கடல்களும் சங்கமிக்கும் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் எப்போதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

வழக்கம்போல இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண தீபாவளி பண்டிகை காரணமாக குறைவான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் 50 அடி தூரத்துக்கு கடல் “திடீர்” என்று உள்வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.

இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகளும் மணல் பரப்புகளும் வெளியே தெரிந்தன. வழக்கமாக சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்துவிட்டு முக்கடல் சங்கமத்தில் கடலில் புனித நீராடுவது வழக்கம். ஆனால் இன்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் கடல் உள்வாங்கி இருந்ததால் சுற்றுலா பயணிகள் கடலில் ஆனந்த குளியல் போடுவதற்கு கூட போதுமான தண்ணீர் இல்லை.

சில இடங்களில் முட்டளவு தண்ணீரும், சில இடங்களில் கரண்டை கால் அளவுக்கு மட்டுமே கடலில் தண்ணீர் தேங்கி நின்று கொண்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் கடலில் இறங்கி ஆனந்த குளியல் போடுவதற்கு அச்சம் அடைந்தனர். அதையும் மீறி கடலில் இறங்கி நின்ற சுற்றுலாப் பயணிகளை சுற்றுலா போலீசார் எச்சரித்து வெளியேற்றினர்.

ஆனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் எந்த மாற்றமும் காணப்படவில்லை. இன்று காலை 8 மணிக்கு வழக்கம் போல விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர். இதற்கிடையில் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கிய புரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இருப்பினும் வள்ளம், கட்டுமரங்களில் மீனவர்கள் வழக்கம்போல் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீனவர்களும் அதிக அளவில் மீன்களை பிடித்துக் கொண்டு வந்தனர்.

Related Post

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

Posted by - January 1, 2023 0
தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல் 38 சதவீதமாக உயர்த்தப்படும். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”அரசின்…

நவீன கால நாட்டாமைகள்…! நடவடிக்கை எடுக்குமா அரசு…?

Posted by - April 13, 2023 0
“இந்த குடும்பத்தோட யாரும் அன்னந்தண்ணி பொழங்ககூடாது” என நாட்டாமை படத்தில்  நடிகர் விஜயகுமார் பேசும் சினிமா நாம் அனைவரும் அறிந்ததே.இந்த காலத்திலும் இப்படி ஊரை விட்டு ஒதுக்கி…

இந்த அறிகுறிகள் இருந்தா… உங்க கல்லீரல் செயலிழக்க வாய்ப்பு உள்ளதாம்…அது கல்லீரல் புற்றுநோயாவும் மாறுமாம்!

Posted by - November 9, 2023 0
அதிகரித்து வரும் சுகாதார பிரச்சனைகளில் கொழுப்பு கல்லீரல் நோயும் ஒன்று. இந்த பிரச்சனை சமீபகாலமாக மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், அது உயிருக்கு ஆபத்தான…

செயலற்று கிடக்கும் மாநகராட்சி;கும்பகோணத்தில் நாய்கள் தொல்லை – பொதுமக்கள் அச்சம்!

Posted by - February 22, 2025 0
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலக்காவேரி பகுதியில் அளவுக்கு அதிகமான தெருநாய்கள் சுற்றித்திரிவதால்…

கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Posted by - May 31, 2025 0
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பால் மக்கள் பதட்டப்பட வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் பொதுமக்கள் அனைவரும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *