கறிவேப்பிலை.. முளைக்கீரையை விடாதீங்க.. கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க கூடாத கீரை இதுதான்.. நோட் பண்ணுங்க

383 0

சென்னை:

கீரைகள் அனைத்துமே நன்மை தரக்கூடியவை என்றாலும், கர்ப்பிணிகள் கீரைகள் சாப்பிடலாமா? என்ன வகையான கீரைகளை சாப்பிட வேண்டும் தெரியுமா?

பப்பாளி, அன்னாசி பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் கர்ப்பம் கலைந்துவிடும் என்கிற தவறான நம்பிக்கை உள்ளது.. இந்த பழங்களால் உடல் சூடு அதிகரிக்குமே தவிர, கர்ப்பம் கலையும் என்பதற்கான எந்தவிதமான அறிவியல் ஆதாரங்களும் இல்லையாம்.. எனவே, அளவாக பப்பாளி, அன்னாசிப் பழங்களை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சாப்பிடலாம்.கறிவேப்பிலை.. முளைக்கீரையை விடாதீங்க.. கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க கூடாத  கீரை இதுதான்.. நோட் பண்ணுங்க | Do you know Amazing Uses of Curry Leaves and  What are the ...

பொதுவாகவே கர்ப்பகாலத்தில் மலச்சிக்கல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.. இதுபோன்ற நேரங்களில் கோதுமை மைதாவில் செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்துவிட்டு, நார்ச்சத்து மிகுந்த முருங்கைக்கீரை, முள்ளங்கியை தவறாமல் எடுத்து கொள்ளலாம்.. அதனால்தான், முருங்கைக் கீரையும், பாசிப் பருப்பு கலந்த பொரியலும் பெரும்பாலும் கர்ப்பிணிகளுக்கு தருவார்கள்..

கர்ப்பிணிகள்:

அதேபோல, கர்ப்பிணிகள் தினமும் உணவில் கீரையை கட்டாயமாக சேர்த்து கொள்ள வேண்டும்.. காரணம், கீரைகளில் வைட்டமின்கள், தாது உப்புகள், சுண்ணாம்பு சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன.. அந்தவகையில், பொன்னாங்கண்ணி, புள்ளிச்சரை கீரை, மணத்தக்காளி கீரை போன்றவற்றில் இரும்பு சத்துக்கள் உள்னன.. அரைக்கீரை, முருங்கைக்கீரை போன்றவை தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும். பசலிக்கரை, ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியவை.. கொத்தமல்லியும், தூதுவளையும், சுவாசம் மற்றும் சளி பிரச்சனைகளை சரி செய்யவும் உதவக்கூடியவை.
முளைக்கீரை:
இதைத்தவிர, பசலிக்கீரை, முளைக்கீரை போன்றவை சிறுநீர்பாதை பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும்.. வல்லாரை கீரை சிறந்த நினைவாற்றலை தரக்கூடியவை.. புதினா கீரைகள், கர்ப்ப நேரத்தில் ஏற்படக்கூடிய மயக்கத்தையும் தடுத்து நிறுத்தக்கூடியவை. அந்தவகையில், எந்த கீரைகளையுமே தவிர்க்கக்கூடாது. இதில், முக்கியமானது கறிவேப்பிலை.. இருதய நோய் உள்ளவர்கள்கூட, இந்த கறிவேப்பிலையை அதிகமாக உணவில் பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர்களே சொல்கிறார்கள்..
கறிவேப்பிலை:
இந்த கறிவேப்பிலை இலையை, நிழலில் உலரவைத்து, அரைத்து பொடியாக்கி, அதனுடன், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து எடுத்து கொள்ளவேண்டும்.. தினமும், சாப்பாட்டில் இந்த பொடியை நல்லெண்ணையுடன் கலந்து ஒருவேளையாவது பிசைந்து சாப்பிட்டால், அவ்வளவும் பலன்தரும். கர்ப்பிணிகளுக்கு கறிவேப்பிலை போல சிறந்த நன்மை வேறு இல்லை..

Related Post

பெண் காவலரிடம் அத்துமீறல்.. திமுக இளைஞரணி நிர்வாகிகள் 2 பேர் கைது; கட்சியிலிருந்து இடைநீக்கம்!

Posted by - January 4, 2023 0
பெண் காவலர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்ததுடன், சாட்சியங்களிடம் விசாரணை நடத்தினர். சென்னை விருகம்பாக்கத்தில் பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டது…

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை… வானிலை மையம் அப்டேட் !

Posted by - May 15, 2024 0
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் திண்டுக்கல், தேனி,…

ஒரு வீட்டில் சிறைவைக்கப்பட்டு இருந்த 12 பெண்கள் உள்பட 25 பேர் மீட்பு- போலீசார் அதிரடி நடவடிக்கை

Posted by - February 16, 2023 0
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் ‘அன்புஜோதி’ என்ற பெயரில் செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் ஆசிரமத்தில் போதை மருந்து கொடுத்து பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள…

பல்வேறு இடங்களில் கைவரிசை- காதலனுடன் ஜாலியாக இருக்க கொள்ளையடித்த இளம் பெண்

Posted by - August 15, 2023 0
கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே புது வள்ளியாம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் ஜோதி வெங்கட்ராமன்.விரதம் மனைவி கோமதி. இவர்கள் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகின்றனர்.…

ரேஷன் அரிசி இல்லாதபோது ஃபேஷன் ஷோ எதுக்கு? செவ்வாய்க்கு செங்கல்வராயன் ஏன்? பார்த்திபன் ஆதங்கம்

Posted by - December 7, 2023 0
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து நடிகர் பார்த்திபன் ஆதங்கத்துடன் எக்ஸ் பதிவில் கருத்து வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பார்த்திபன் கூறியிருப்பதாவது: நேற்று மக்களின் நிலையில்லா பரிதாப…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *