களத்தில் விஜய்! 2026 தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் பரந்தூர் விமான நிலையம்!

229 0

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை விஜய் நேரில் சந்தித்துள்ள நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தி.மு.க.வும், தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் களமிறங்கியுள்ளன. இதில், வரும் தேர்தலில் தி.மு.க.விற்கு மிகப்பெரிய அளவில் சவால் அளிக்கும் கட்சியாக அ.தி.மு.க. மட்டுமின்றி தவெக-வும் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரந்தூர் விமான நிலையம்:

மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் என பல திட்டங்களை மக்களுக்காக அமல்படுத்தியிருந்தாலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம், சென்னையில் ஏற்பட்ட வெள்ளம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆகியவை பின்னடைவாக உள்ளது. குறிப்பாக, பரந்தூர் விமான நிலைய விவகாரம் தி.மு.க. அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் அமைய உள்ள இந்த புதிய விமான நிலையம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இந்த புதிய விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர், வளத்தூர், பொடவூர், நெல்வோய், தண்டலம், மடப்புரம், தோடூர், சிங்கிலிபாடி, குணகாரப்பாக்கம், இடையர்பாக்கம், அக்கமபுரம், ஏகானபுரம், மகாதேவி மங்கலம் ஆகிய 13 கிராமங்கள் முழுவதும் அரசால் கையகப்படுத்தப்பட உள்ளது.

தொடர் போராட்டம்:

இதனால், இந்த கிராமங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் என்று வேதனை தெரிவித்து வருகின்றனர். அரசு தங்கள் வாழ்விடங்களுக்கும், வேலைக்கும் மாற்று ஏற்பாடுகளை வழங்குவதாக உத்தரவாதம் அளித்தாலும், 3 மடங்கு இழப்பீடு தொகை வழங்குவதாக கூறினாலும் தங்கள் பூர்வீக இடங்களை விட்டுச் செல்ல பலரும் மறுத்து வருகின்றனர். இதனால், பல மாதங்களாக இந்த பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.

இந்த விவகாரத்தை சுமூகமாக முடிக்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும், இந்த விவகாரத்தில் மக்கள் தொடர்ந்து போராடி வருவதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சீமான், திருமாவளவன், பிரேமலதா விஜயகாந்த், அதிமுக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் ஆகியோர் ஏற்கனவே சந்தித்திருந்தனர்.

களத்தில் விஜய்:

இந்த நிலையில், தமிழக அரசியல் களத்தில் புதியதாக களமிறங்கியுள்ள விஜய் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவினரை இன்று சந்தித்துள்ளார்.. இதனால், பரந்தூர் விமான நிலைய விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால், அடுத்தாண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் பரந்தூர் விமான நிலைய விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தவெக மட்டுமின்றி பிற எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசுக்கு அழுத்தம் தர திட்டமிட்டுள்ளனர்.

Related Post

மின் கட்டண மென்பொருள் மாற்றம்!

Posted by - May 14, 2024 0
தமிழ்நாடு மின்சார வாரியம் அதிக உயரம் கொண்ட மின் வயர்கள் மூலமாகவும், பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட புதைவடங்கள் மூலமாகவும், நுகர்வோருக்கு மின் விநியோகம் செய்து வருகிறது.இதில் அதிக…

தவெக – பாமக கூட்டணி? துணை முதல்வர் அன்புமணி ! விஜய் பக்கா ஸ்கெட்ச்

Posted by - April 21, 2025 0
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் தேர்தலை சந்தித்த பாமக, இந்த முறை தவெக உடன் கூட்டணி அமைக்க திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும்…

2023: ரத்னவேலு முதல் ஜாக்கி பாண்டியன் வரை – நடிப்பால் வசீகரித்த வில்லத்தனங்கள்!

Posted by - December 27, 2023 0
எல்லா கதைகளும் பிரச்சினைகளாலும் அதனை உருவாக்கும் எதிர்மறை கதாபாத்திரங்களாலும் மட்டுமே சுவாரஸ்யம் பெறுகின்றன. ‘ஹீரோ’வை ஹீரோவாக்குவதே பலமான வில்லன் கதாபாத்திரம்தான். அவர்களின் அழுத்தமான நடிப்பு பிரச்சினையின் தீவிரத்தை…

மிக்ஜாம் புயல் பாதிப்பு : முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அனுப்புவது எப்படி? – முழுவிபரம் இதோ

Posted by - December 8, 2023 0
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பினை சீர்செய்திடவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட தமிழக அரசு…

நிறைவடைந்தது ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம்; தமிழக அரசு முக்கிய முடிவு

Posted by - January 5, 2025 0
2019-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சிறப்பு அலுவலர்களை நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் 2019…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *