“புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக புகார் அளித்தவர் காட்டிக் கொடுக்கப்பட்டார்” – எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

164 0

கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டையில் கனிம வளக் கொள்ளைக்கு எதிராக புகார் அளித்த அதிமுக நிர்வாகி காட்டிக் கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி,  கொலையாளிகளை விட்டு விட்டு மற்றவர்களை கைது செய்து வழக்கை திசை திருப்புவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. அதிமுக முன்னாள் கவுன்சிலரான இவர், மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். ஜகபர் அலியின் மனைவி மற்றும் பிள்ளைகள் காரைக்குடியில் வசித்து வரும் நிலையில, இவர் மட்டும் திருமயம் அருகே காட்டுபாவா பள்ளிவாசல் அருகே தனியாக வசித்து வந்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்று பிற்பகலில் தொழுகை முடித்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது எதிரே வந்த மினி லாரி, இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. இந்த விபத்தில், தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த ஜகபர் அலி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

ஜகபர் அலியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, அவரின் உறவினர்கள் திருமயம் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். மேலும் போலீசார் உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, ஜகபர் அலியின் மனைவி மரியம், திருமயம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், திருமயம் அருகே கல் குவாரி என்ற பெயரில் சிலர், கனிம வளத்தை சுரண்டி கொள்ளையடிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அதை தடுக்கும் வகையில், தனது கணவர் ஜகபர் அலி தொடர்ந்து போராடி வந்ததாக தெரிவித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த கல் குவாரி உரிமையாளர்கள், லாரியை ஏற்றி கொலை செய்துவிட்டு, விபத்து போன்று ஜோடித்து விடுவதாக ஜகபர் அலிக்கு மிரட்டல் விடுத்ததாக, அவரின் மனைவி கூறியுள்ளார். அதை பொருட்படுத்தாமல் கனிம வள கொள்ளைக்கு எதிராக ஜகபர் அலி தொடர்ந்து போராடி வந்ததாக தனது புகாரில் மரியம் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பான போலீசார் விசாரணையில் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் ஜெபகர் அலி இறப்புக்கு நீதி வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Related Post

மகனை போட்டுத்தாக்கிய ராமதாஸ்! உடனடியாக நிர்வாகிகளுக்குக்கு அன்புமணி போட்ட முக்கிய உத்தரவு

Posted by - May 29, 2025 0
தன்னை சந்திக்க யாரும் தற்போது சென்னை வரவேண்டாம். நான் அழைக்கும் வரை யாரும் சென்னைக்கு வரவேண்டாம் என நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். தன்னை சந்திக்க யாரும்…
Generated Image November 21 2025 4 15PM

பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!

Posted by - November 21, 2025 0
தமிழ்நாடு அரசுத்துறை ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாது என்று கூறி மீண்டும்…
Generated Image November 13 2025 5 06PM

நான் முதல்வன் திட்டம்: இவர்களுக்கெல்லாம் ரூ.50,000 ஊக்கத்தொகை! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

Posted by - November 13, 2025 0
நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக 50.000 ரூபாய் ஊக்கத்தொகையாக நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். நான் முதல்வன் திட்டத்தின்கீழ் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி…

தமிழ்நாட்டில் மயோனிசுக்கு தடை! வெளியான அதிரடி உத்தரவு! காரணம் என்ன?

Posted by - April 24, 2025 0
மயோனிஸ் மூலம் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும் என அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதனால் அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் பச்சை முட்டையில் தயாரிக்கப்படும் மயோனிசுக்கு…

சூறாவளிக்காற்று.. இடி மின்னலுடன் மழை.. புது அலெர்ட் கொடுத்த வானிலை மையம்

Posted by - December 20, 2022 0
weather update | சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *