காசா முழுவதும் இஸ்ரேல் தாக்குதலில் ஒரே நாளில் 100 பேர் பலி

298 0

இஸ்ரேல்- காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் இரண்டரை மாதங்களுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது. இதில் காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் ஒரே நாளில் 100 பேர் பலியானதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் ஒரே இரவில் 200 பேர் உயிரிழப்பு: ஹமாஸ் தகவல்  | 200 Dead In Overnight Israeli Strikes On Gaza says Hamas - hindutamil.in

இதுகுறித்து சுகாதார அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அஷ்ரப் அல்-குத்ரா கூறும்போது, “காசா பகுதி முழுவதும் நேற்று இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் ஒரே நாளில் சுமார் 100 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்” என்றார். காசாவில் நிவாணர பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். உணவு, தண்ணீர், மருந்து ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இதுகுறித்து ஐ.நா. குழந்தைகள் அமைப்பின் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரசல் கூறும்போது, “தெற்கு காசாவுக்கு இடம் பெயர்ந்த குழந்தைகள், அடிப்படை தேவையான தண்ணீர் கூட கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். பாதுகாப்பான தண்ணீர் இல்லாமல் வரும் நாட்களில் பல குழந்தைகள் இறக்க நேரிடும்” என்றார்.

Related Post

BUNKER-ல் பதுங்கிய பயந்தாங்கோலி.. பாக். பிரதமரை ஓடவிட்ட இந்தியா! ஷெபாஸ் ஷெரீப் கப் சிப்..

Posted by - May 9, 2025 0
பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், ராணுவ தளபதி முனீர் ஆகியோர் வீடுகளின் அருகே இந்தியா குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பகல்ஹாமில் தீவிரவாதிகள் நடத்திய…

2500 கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய சாக்லேட் பாக்ஸ்- கின்னஸ் சாதனை

Posted by - July 8, 2023 0
அமெரிக்காவில் ரஸ்ஸல் ஸ்டோவர் என்கிற பிராண்ட் நிறுவனம் ஒன்று 2500 கிலோவுக்கு மேல் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய சாக்கெட் பெட்டியை தயாரித்துள்ளது, இந்த அற்புதமான சாக்லேட்…

மரணத்தை தள்ளிப்போட தினமும் 4,000 அடிகள் நடக்க வேண்டும் – ஆய்வு

Posted by - August 11, 2023 0
வார்சா: எந்த வயதினரும் செய்யக்கூடிய உடற்பயிற்சி நடைபயிற்சியாகும். ஓடுவதன் மூலம் உருவாகும் காயங்களை நடைப்பயிற்சியில் தவிர்க்க முடியும். நாம் நடக்கும் போது ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கின்றோம்.…

மெக்சிகோவில் 122 டிகிரி வெயில்- வெப்ப அலை தாக்கி 100 பேர் பலி

Posted by - June 30, 2023 0
மெக்சிகோ: மெக்சிகோவில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து 122 டிகிரி வெயில் கொளுத்தியது. கடந்த 3 வாரங்களாக…

பிரேசிலில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்வு

Posted by - February 21, 2023 0
ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் சவொ பாலோ மாகாணத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *