காஷ்மீருக்கு அடுத்தபடியாக கொடைக்கானலில் குங்குமப்பூ விளைவித்து விவசாயி சாதனை

216 0

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல் மலைக்காய்கறிகள் விளைச்சலுக்கு அதிக பெயர் பெற்றது. இங்கு முக்கிய காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீட்ரூட், காலிபிளவர், பீன்ஸ், காரட், புரோக்கோலி போன்ற பல்வேறு வகையான காய்கள் பயிரிடப்பட்டு வருகிறது. உலக அளவில் கர்ப்பிணி பெண்கள் தங்கள் குழந்தைகள் சிவப்பாக பிறக்க குங்குமப்பூவை பாலில் கலந்து குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.Pride of Kashmir now comes to Kodaikanal | Tamil Nadu News - The Hindu
இந்த குங்குமப்பூ உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடுகள் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான். அடுத்து இந்தியாவில் நமது காஷ்மீர் மாநிலம் ஆகும். ஆனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் குங்குமப்பூ குறைந்த அளவில் உள்ளதால் ஆண்டுக்கு பல ஆயிரம் கிலோ வெளிநாட்டில் இருந்து வாங்கும் நிலை உள்ளது.

தற்பொழுது இந்தியாவில் காஷ்மீருக்கு அடுத்தபடியாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் மேல் மலை கிராமமான கவுஞ்சி மற்றும் பூண்டி மலை கிராமங்களில் மூர்த்தி என்ற விவசாயி கடந்த 2014ம் ஆண்டு முதல் தொடர்ந்து முயற்சி செய்து காஷ்மீரிலிருந்து குங்குமப்பூ விதை கிழங்கு வாங்கி பசுமை குடில் அமைத்து விவசாயம் செய்தார். 9 ஆண்டு கால முயற்சியில் தற்பொழுது வெற்றியும் கண்டுள்ளார். தனது ஒரு ஏக்கர் நிலத்தில் குங்குமப்பூ பயிரிட்டு சாகுபடி செய்தார்.

இது குறித்து அவர் கூறும்போது, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் இதற்கான பயிற்சி மற்றும் அறிவுரைகளின்படி தனது முயற்சியை தொடர்ந்ததாக தெரிவித்தார். மேலும் காஷ்மீருக்கு அடுத்தபடியாக குங்குமப்பூ பயிரிட கொடைக்கானலில் சீதோஷ்ண நிலை மற்றும் குளிர் முக்கிய காரணமாக உள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் ரூ.4 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் பயிரிட்டால் சில ஆயிரங்கள் மட்டுமே கிடைக்கும்.

ஆனால் குங்குமப்பூ சாகுபடிக்கு 55 நாட்கள் முதல் 60 நாட்கள் போதுமானது. 15 கிலோ குங்குமப்பூ விதை கிழங்கு வாங்கி தற்பொழுது அதனை 40 கிலோவாக உருவாக்கி உள்ளேன். தற்பொழுது கொடைக்கானலில் விளையக்கூடிய குங்குமப்பூ காஷ்மீரை காட்டிலும் தரம் உயர்ந்ததாக உள்ளது. மேலும் கொடைக்கானலில் விளையும் குங்குமப்பூவுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. இந்த புது முயற்சியை மற்ற விவசாயிகளும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Related Post

ஹாப்பி! இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தேதியை குறிச்சுக்கோங்க மக்களே

Posted by - July 11, 2025 0
தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் வீடுகளுக்கே தேடிச்சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாட்டில் ரேஷன் கடையில்…

காலை 10 மணி வரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Posted by - August 24, 2023 0
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வருகிற 29-ந்தேதி வரை கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக…

பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டம் : தமிழகத்தில் எவ்வளவு வீடு கட்டப்பட்டது தெரியுமா?

Posted by - April 12, 2024 0
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வசதியை வழங்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அதாவது பிரதமர் வீடு கட்டும்…

அதை வாங்கி ஓசி சோரு சாப்புட்ற!! காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை அவமானப்படுத்திய பிக்பாஸ் பிரபலம்.

Posted by - July 17, 2023 0
விக்ரமன் பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் விக்ரமன். அவர் சின்னத்திரையில் பணியாற்றி இருந்தாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒரு பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்…

க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்க? இந்த பொருளோடு சேர்ந்து குடிச்சா உங்க ஆரோக்கியம் செமையா இருக்குமாம்

Posted by - December 25, 2023 0
கோவிட்-19 வகை JN.1 இன் புதிய திரிபு உடல்நலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது, மேலும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *