கேலிச்சித்திரத்தை நீக்க வேண்டும் – விகடன் குழுமத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

113 0

பிரதமர் மோடி தொடர்பாக இணைதளம் வெளியிட்ட கேலி சித்திரத்தை நீக்க வேண்டும் என விகடன் குழுமத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி சந்திப்புக்கு முன் விகடன் குழுமம் தனது இணைதள பக்கத்தில் கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டது.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் கடந்த 15ஆம் தேதி விகடன் இணையதளத்தை மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை முடக்கியது.

மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விகடன் குழுமம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில், நட்பு நாடுகளில் உறவில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் விகடன் கேலி சித்திரம் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டது. விகடன் குழுமம் தரப்பில், கேலி சித்திரத்திரம் வெளியிட்டதற்காக ஒட்டு மொத்த இணையதளத்தையும் முடக்க அவசியமில்லை என வாதிடப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி, விகடன் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள பிரதமர் தொடர்பான கேலிச் சித்திரத்தை நீக்க வேண்டும் என விகடன் குழுமத்திற்கு உத்தரவிட்டார்.

 

 

மேலும், கேலி சித்திரத்தை நீக்கியது குறித்து மத்திய அரசுக்கு விகடன் குழுமம் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், அதன் அடிப்படையில் இணைதள முடக்கத்தை மத்திய அரசு நீக்க வேண்டும் எனவும் ஆணையிட்டார்.

Related Post

”நான் அன்னைக்கே செத்துட்டன், அம்மாவையே பாட்டிலால அடிச்சாரு அன்புமணி” ராமதாஸ் வேதனை

Posted by - May 29, 2025 0
பெற்ற தாயையே பாட்டிலால் அடித்தவர் தான் அன்புமணி என, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். அன்புமணி கூசாமல் பொய் பேசுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ராமதாஸ்…

TVK கட்சிக்கு அஜித் ஆதரவா? Race Car – ஒரே Colour -ல இருக்கே! குழப்பத்தில் நெட்டிசன்ஸ்!

Posted by - November 28, 2024 0
அஜித்தும், விஜயும் சினிமாவுல அறிமுகமாகி கிட்டத்தட்ட 30 வருஷத்துக்கு மேல ஆகிருச்சு. ஆரம்பத்தில அஜித் – விஜய் – பிரசாந்த் என மூனுபேருக்கும் போட்டி இருந்துச்சு. அப்புறம்…

ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் வந்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்வோம் – எடப்பாடி பழனிசாமி

Posted by - April 21, 2023 0
ஒரு சிலரை தவிர மற்றவர்கள் வந்தால் கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என்று எடப்பாடி  பழனிசாமி தெரிவித்தார். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…

சென்னையில் வெள்ளம் தேங்கியதற்கு காரணமே இதுதான்.. விளாசிய நீதிமன்றம்! மாநகராட்சி மீது சாடல்

Posted by - December 12, 2023 0
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டனர். இந்த வெள்ள பாதிப்புகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் முக்கியமானவை என…

விவசாயிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த கும்பல்- அதிகாரிகள் போல் நடித்து பணத்துடன் ஓட்டம்

Posted by - July 6, 2023 0
மொடக்குறிச்சி: தேனி மாவட்டம் உத்தம பாளையம் தாலுக்கா சின்ன ஓலாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி (67). விவசாயி. இவரிடம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *