கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?

183 0

பணி நியமனங்களில் முறைகேடு விவகாரத்தில் 1,020 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்துள்ள அமலாத்துறை அமைச்சர் கே என் நேரு மீது எப்ஐஆர் பதிவு செய்ய கோரி கடிதம் எழுதியுள்ளது.

அமலாக்கத்துறை பரபரப்பு கடிதம்

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழக அமைச்சர்கள் மீது குறிவைத்து அமலாக்கத்துறை தொடர் சோதனை மற்றும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. கொங்கு மண்டலத்தில் முக்கிய அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு செக் வைத்த நிலையில் சிறையில் பல மாதங்கள் அடைக்கப்பட்டார். இதனையடுத்து அமைச்சர் பதவியில் இருந்து விலகவேண்டிய நிலையும் ஏற்பட்டது. இதனையடுத்து அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்தது. குறிப்பாக டாஸ்மாக், மணல் கொள்ளை மீது அமலாக்கத்துறையின் பார்வை திரும்பியது.

பணி நியமனத்தில் முறைகேடு

இந்த நிலையில் திமுக முதன்மை செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேரு மீது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், 2,538 பணி நியமனங்களுக்கு ஒவ்வொரு பதவிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெற்று வேலை வழங்கியதாகவும் இதன் காரணமாக பல நூறு கோடி ரூபாய் முறைகேடு ;நடைபெற்றதாக தெரிவித்திருந்தது. இது தொடர்பாக ஆதாரத்தோடு தமிழக டிஜிபிக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்கட்சிகளும் தமிழக அரசுக்கு எதிராக விமர்சித்து வந்தனர்.

அமலாத்துறை மீண்டும் கடிதம்

இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த பணி நியமனங்களில் முறைகேடு எனக் குற்றம் சாட்டிய விவகாரத்தில் தமிழக தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், தனது உறவினர்கள் மூலம் ஒப்பந்ததாரர்களித்திலிருந்து ஒப்பந்த மொத்த மதிப்பின் 7.5 % முதல் 10 % வரை முறையற்ற பணமாக வசூலித்ததாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் 252 பக்கங்கள் கொண்ட ஆவணங்களில் அமைச்சர் கே என் நேரு, லஞ்சமாகவும், கட்சி நிதி என்ற பெயரிலும், 1,020 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடிதம் எழுதி 36 நாட்கள் ஆகும் நிலையில், மீண்டும் கடிதம் எழுதியுள்ள அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் அமைச்சர் கே என் நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கோரியுள்ளது.

Related Post

vijay dmk

”பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்துக்கு பாடம் புகட்டும்” தவெகவுக்கு சவால்விட்ட சேகர்பாபு!

Posted by - March 20, 2026 0
பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஆற்றல்மிக்க தலைவவரை விமர்சிப்பவர்களை, தன் தாயே தடுத்தாலும் திமுக தொண்டன் எதிர்ப்பான். பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்- சேகர்பாபு…
Gemini Generated Image 1mc9ek1mc9ek1mc9

கர்மா சும்மா விடுமா? – உலகத்தில் முதல் முறை.. திருமாவை சாடிய மோகன் ஜி!

Posted by - April 7, 2026 0
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது. அங்கு ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் ஏனாம் தொகுதிகளில் தான் அறிவித்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என…

’’அமித் ஷாவுடன் சந்திப்பு; கர்ச்சீப்பால் முகத்தை மறைத்தேனா? தும்மினால்கூட..’’ ஈபிஎஸ் பரபர!

Posted by - September 18, 2025 0
சந்திப்பு முடிந்ததும் அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து, முகத்தை கர்ச்சீப் கொண்டு துடைத்தேன். மறைக்கவில்லை. இதை எல்லாம் அரசியல் ஆக்குகிறார்கள்- எடப்பாடி பழனிசாமி. நாம் தும்மினாலும்…

விஜய்க்கு போன் போட்ட இபிஎஸ்! 30 நிமிடம் கூட்டணி பேச்சுவார்த்தை! DEAL-ஐ முடித்த பவன் கல்யாண்!

Posted by - October 8, 2025 0
விஜய்-க்கு போன் போட்ட இபிஎஸ்! வாங்க தம்பி பாத்துக்கலாம் என்ற எடப்பாடி, பொங்கலுக்கு பிறகு வரேன் அண்ணா என்ற விஜய்! அதிமுக-தவெக கூட்டணி பேச்சுவார்த்தை பின்னணியில் பவன்…

சம வேலைக்கு சம ஊதியம்: போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் 1560 பேர் மீது வழக்கு பதிவு

Posted by - December 27, 2025 0
சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் ஆயிரத்து 560 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம வேலைக்கு சம…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *