கோட்டைகாலத்திற்கு ஏற்ற குளு குளு பானம் எது தெரியுமா ?

187 0

நன்னாரி சர்பத் செய்முறை மற்றும் அதன் பயன்கள் குறித்த செய்தித் தொகுப்பு.

கோடை வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக பருகப்படும் இயற்கை பானங்களான இளநீர், மோர், கரும்புச்சாறு, பதனீர் ஆகியவற்றின் வரிசையில் முதல் இடம் பிடிப்பது “நன்னாரி சர்பத்” தான். குறிப்பாக கிராமப்புறங்களில் கோடைக் காலங்களில் தவிர்க்கமுடியாத பானமாக உள்ளது. நன்னாரி வேர் கலந்த சிரப் ஊற்றி சர்பத் குடித்த காலம் மாறி தற்போது சர்பத் தயாரிப்பில் எசென்ஸ் கலக்கிறார்கள். இதனால் நன்னாரி வேரின் பயன் மறைக்கப்பட்டு வெறும் இனிப்புக் குளிர்பானமாக மாறிவிட்டது.

நாற்றம் என்றால் தமிழில் நல்ல மணம் என்பது பொருள் ஆகும். நல்ல நாற்றம், அதாவது நல்ல மணம் தருவதால்தான் இதனை ‘நன்னாரி’ என்று கூறுகிறோம். இது உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை ஏற்படுத்துவதோடு பசியையும் தூண்டும் ஒருவகைத் தாவரம். நன்னாரியின் வேரை தண்ணீரில் ஊறவைத்துக் குடித்து உடல் உஷ்ணத்தை குறைத்து வந்தனர் முன்னோர்கள். நாளடைவில் வேர் ஊறிய நீருடன் சுவை கூட்ட வெல்லப்பாகு கலந்து குடித்து வந்ததால் இது ‘நன்னாரி சர்பத்’ என்றானது.ஒரு லிட்டர் மணப்பாகு தயார் செய்ய, ஒருகிலோ நன்னாரி வேரை ஒன்றிரண்டாக (பவுடராக இடிக்காமல்உரல் அல்லது மிக்ஸியில் இடித்து, அதை 6 லிட்டர் வெந்நீரில் போட்டு ஒரு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். வெந்நீரின் சூடு மிதமாக இருந்தால் போதும். மறுநாள் காலையில் அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேற்றி ஒன்றரை லிட்டராக வற்ற வைத்து இறக்கி வடிகட்டி, அதனுடன் 1கிலோ சீனிக்கற்கண்டை தூளாக்கிப் போட்டு, மீண்டும் அடுப்பில் வைத்து பாகு அல்லது தேன் பதம் வந்தவுடன் இறக்கி உடனே வேறொரு பாத்திரத்தில் ஊற்றிவிட வேண்டும்.

சூடு ஆறியதும் இதைக் கண்ணாடி பாட்டில்களில் அடைத்து வைத்துக்கொள்ளலாம். இதுதான் நன்னாரி சிரப் தயாரிப்பு முறை. வெந்நீரில் வேரை ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டியதிருப்பதால் இந்த தயாரிப்பை மாலையில் செய்ய ஆரம்பிக்கலாம். நன்னாரி வேர் எல்லா நாட்டுமருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இந்த நன்னாரி சிரப் இளம்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதுதான் நன்னாரியின் ஒரிஜினல் நிறமும் ஆகும்.

இதனைத் தொடர்ந்து வீட்டில் செய்து நன்னாரி சிரப் பயன்படுத்தி சர்பத் செய்ய எலுமிச்சை பழச்சாறு எடுத்து அதனுடன் இனிப்புக்காக வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஏதாவது ஒன்றை சேர்த்து நன்னாரி சிரப் கொஞ்சமா எடுத்துட்டு குளு குளு தண்ணீர் சேர்த்து மிக்ஸ் பண்ணா வெயிலுக்கு சில்லுனு ஆரோக்கியமான நன்னாரி சர்பத் ரெடி… வெளிய செயற்கை எசன்ஸ் சேர்த்து கொடுக்கிற சர்பத்க்கு பதிலா வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில நன்னாரி சர்பத் ரெடி பண்ணி என்ஜாய் பண்ணுங்க..

Related Post

புரோட்டீன் நிறைந்த கேழ்வரகு கொள்ளு தோசை

Posted by - March 24, 2023 0
டயட்டில் இருப்பவர்களுக்கு சிறந்த உணவு இது. சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த உணவு சிறந்தது. தேவையான பொருட்கள் கேழ்வரகு – 1 கப் கொள்ளு – கால் கப்…

சிங்கப்பூர் சலூன் ரசிகர்கள் பார்வை…

Posted by - January 25, 2024 0
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் இன்று வெளிவந்துள்ளது. வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் இப்படத்தை தயாரிக்க சத்யராஜ், லால்,…

ரஜினியின் ‘கூலி’ படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா – காரணம் என்ன?!

Posted by - May 1, 2024 0
அப்பாடல் மற்றும் இசைக்கு முதல் உரிமையாளரான இளையராஜாவிடம் முறையாக எந்த அனுமதியும் பெறவில்லை என கூறப்பட்டுள்ளது. இது, காப்புரிமை சட்டம் 1957-ன் கீழ் குற்றம் என்றும் நோட்டீஸில்…

இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 7, 2023 செவ்வாய்க்கிழமை

Posted by - March 7, 2023 0
இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 7, 2023 செவ்வாய்க்கிழமை❤️ மேஷம்✅ ஏதோ ஒரு மன கவலையால் இரவில் தூங்காமல் தவிப்பீர்கள். புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளாவிட்டால் கை…

கார்த்திகை பொரி உருண்டை செய்ய ரெசிபி..!

Posted by - December 3, 2022 0
Karthigai deepam | திருகார்த்திகைக்கு உகந்த பொரி உருண்டையை எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். நம் மரபில் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *