கோவில் உண்டியலில் ரூ.100 கோடிக்கு காசோலை செலுத்திய பக்தர் – அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்

245 0

அமராவதி:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பண்ணா வராகலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. இந்நிலையில், கோவில் அதிகாரிகள் சார்பில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நேற்று நடந்தது. அப்போது உண்டியலில் இருந்த காசோலை ஒன்றை எடுத்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.கோவில் உண்டியலில் கிடந்த ரூபா 100 கோடி காசோலை -மிரண்டுபோன நிர்வாகம்

அந்தக் காசோலையில், 100 கோடி ரூபாய்க்கு கோவில் பெயரில் காணிக்கையாக எழுதப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், பொட்டேபள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்பு கணக்கு காசோலை என தெரிய வந்தது. காசோலை எம்விபி டபுள் ரோடு கோடக் வங்கி கிளையின் பெயரில் இருந்தது. அதிலும் வராகலட்சுமி நரசிம்ம தேவஸ்தானம் என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலையில் முதலில் ரூ10 என்றும், பிறகு அதை அடித்து 100 கோடி எனவும் எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் வங்கிக்குச் சென்று அந்த சேமிப்பு கணக்கு குறித்த தகவல்களை விசாரித்தனர். அந்த சேமிப்பு கணக்கில் 17 ரூபாய் மட்டும் இருப்பு இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, காசோலையை காணிக்கையாக போட்டவரைக் கண்டுபிடித்து, இனி இதுபோன்ற செயலில் ஈடுபடாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க கோவில் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கோவில் உண்டியலில் 100 கோடி ரூபாய்க்கு காசோலை போட்ட நபரின் செயல் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அடைந்தனர்.

Related Post

Gemini Generated Image adeqyiadeqyiadeq

ஐயோ, பயந்த மாதிரியே ஆயிடுச்சே.! இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு; எவ்வளவு தெரியுமா.?

Posted by - March 20, 2026 0
ஈரான் போர் சூழலால் கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இன்று முதல், BPCL ‘ஸ்பீட்’, HPCL ‘பவர்’ மற்றும் IOCL-ன் ‘XP95’ போன்ற ப்ரீமியம் பெட்ரோல்களின்…

அடடே இதெல்லாம் தெரியாம போச்சே.. சர்வதேச எழுத்தறிவு தினம்.. சுவாரஸ்ய தகவல்கள்

Posted by - September 8, 2023 0
நமது பிரபஞ்சத்தில் நாம் பிறந்த தினம் தவிர்த்து- பொங்கல், புத்தாண்டு, தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்று பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் என ஆண்டின் 365 நாட்களில்…

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: 7 ஆயிரம் வி.ஐ.பி.களுக்கு அழைப்பு

Posted by - December 7, 2023 0
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ப பூமியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி பிரதமர்…

புஷ்பா 2 பட விவகாரம், தாய் அன்றே இறந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்

Posted by - December 18, 2024 0
புஷ்பா 2 நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது புஷ்பா. முதல் பாக வெற்றியை தொடர்ந்து 2ம் பாகம் செம மாஸாக தயாராகி கடந்த…

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு: இந்தியாவில் புற்றுநோய்க்கு 8 லட்சம் பேர் பலி

Posted by - July 29, 2023 0
புதுடெல்லி : மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக, தொற்று அல்லாத நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *