vijaytvk

CM Vijay Speech: ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்..

47 0

CM Vijay Assembly Speech: திமுக தலைவர் ஸ்டாலினின் தோல்வி குறித்து, சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி இணையத்தில் வைரலாகியுள்ளது.

CM Vijay Assembly Speech: திமுக தலைவர் ஸ்டாலினின் தோல்வி குறித்து, சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி இணையத்தில் வைரலாகியுள்ளது.

சிஎம் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி

சட்டசபையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்தார். இதனை ஏற்காமல் உதயநிதி தலைமையில் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் சட்டப்பேரவையில் பேசிய விஜய், ஒரு குட்டிக்கதை சொல்ல தோன்றுகிறது சொல்லலாம என கேட்க சபாநாயகர் அனுமதி கொடுத்தார். அதன்படி, ”ஒரு ஊரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்பதால் பெரியர் ஒருவர் கண்கள் மீது கையை வைத்து மறைத்தபடி சுற்றும் முற்றும் பார்த்து தேடிக்கொண்டிருந்தார். அப்போது உடன் இருந்த சிறுவன் என்ன தேடுகிறீர்கள் என கேட்டான். அதற்கு ஒன்றுமில்லை தம்பி, உங்கள் அப்பா இங்கே தான் இருப்பார் என சொன்னார்கள்.  என தேடிக்கொண்டு இருக்கிறேன்.  எங்க உங்க அப்பாவை காணோம். அவரை தான் தேடிக்கொண்டு இருக்கிறேன்” என சொன்னாராம் என தனது குட்டிக்கதையை முதலமைச்சர் விஜய் முடித்தார்.

ஸ்டாலினை சீண்டிய விஜய்

தொடர்ந்து பேசுகையில், “இல்ல எங்களுக்கும் இப்படி நக்கல் நையாண்டியாக சம்மந்தம் சம்மந்தமே இல்லாமல் குட்டிக்கதை சொல்ல எங்களுக்கும் தெரியும். அந்த கதையில் பெரியவர் அப்படி சொன்னார். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இதற்காக யாரும் டென்ஷனாக வேண்டாம். ஐந்து நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூர் இந்த ஆட்டம் கண்டுள்ளது. பேசு பேசு என்றால் நான் வேறு என்ன செய்வது.

பழச மறந்துட்டீங்களா?

தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டது குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர். அப்படி ஒரு நிகழ்வு இதுவரை சட்டமன்ற வரலாற்றில் நிகழ்ந்ததே இல்லை என கூறுகின்றனர். மரபையே மாற்றிவிட்டீர்கள் என பெரிய போரை போன்று பேசினர். அந்த மாநில உரிமை போராளிகளை, மரபு காக்கிற போராளிகளை ஒரே ஒரு கேள்வி தான் கேட்க வேண்டும். 2021, ஆகஸ்ட் 2ம் தேதி நினைவிருக்கிறதா? தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் புகைப்படம் குடியரசு தலைவரால் திறக்கப்பட்டது. அப்போது தேசிய கீதத்திற்கு அடுத்ததாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதோடு நிகழ்ச்சியின் முடிவில் இரண்டாவது முறையாகவும் தேசிய கீதம் பாடப்பட்டது. அதுவும் முத்தமிழறிஞர் என சொல்லப்படும் கலைஞரின் புகைப்பட திறப்பு விழாவில், அவர் இருந்த இதே சபையில் தமிழ் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. அது யார் என நியாபகம் இருக்கா? இதெல்லாம் கேட்டால் அது குடியரசு தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சி அப்படி தான் இருக்கும். அதையெல்லாம் கண்டுகொள்ள கூடாது என்பார்கள்” என முதலைச்சர் விஜய் பேசினார்.

Related Post

யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி

Posted by - February 21, 2025 0
ஆனாலும் பாஜக தலைவர்களுக்கும் மற்ற கட்சி தலைவர்களுக்கும் வார்த்தை போர் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியுதவியை கேட்கிறோம் எனவும் மொழியை வைத்து என்ன அரசியல்…

மீனாட்சி அம்மன் கோவில் அருகில் ஷாரிக் தங்கி இருந்தாரா?- கர்நாடக தனிப்படை விசாரணை

Posted by - November 26, 2022 0
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் ஷாரிக் 2 நாட்கள் தங்கி இருந்து உள்ளான். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக…

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

Posted by - October 9, 2025 0
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதமாகியுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கள்ளப்புலியூர், கொண்டான்குடி , பாகவதபுரம் உள்ளிட்ட கிராமங்களில்…

“அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு மருந்து” – விவகாரத்துக்கு விண்ணப்பித்த பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போட்ட முதல் பதிவு

Posted by - April 10, 2024 0
ஐஸ்வர்யா தனுஷ் அவருடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நடிகர் தனுஷும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் விவகரத்து கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், ஐஸ்வர்யா தனுஷ்…

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வருக்கு செந்தில் பாலாஜி உருக்கமான கடிதம் …

Posted by - February 13, 2024 0
சிறையில் இருந்துகொண்டே இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அமைச்சரவையில் நீடித்து வந்த செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *