சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் பால் பவுடர் பேஸ் பேக்

228 0

பால் பவுடருடன் சிறிது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறு சேர்த்து பல்வேறு விதமான பேஷியலை முயற்சி செய்யுங்கள். அது வளமான பொலிவை நமது முகத்திற்கு கொடுக்கும். பாலை விடவும் இது சிறந்தது.சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் பால் பவுடர் பேஸ் பேக் | milk powder face pack

ஏனெனில் பாலை விட பால் பவுடரில் சில ஊட்டச்சத்துக்களின் காம்பவுண்ட்டுகள் சேர்க்கப்பட்டிருக்கும். அது சருமத்தை மென்மைப்படுத்த உதவும். எண்ணெய் பசையான சருமம் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு மிகவும் ஏற்ற முறை இதுதான்.

சருமத்தில் உள்ள எண்ணெய் பசை அதனால் உருவாகும் பருக்கள் ஆகியவற்றைக் குறைத்து சருமத்தின் நிறத்தைக் கூட்டும். ஒரு ஸ்பூன் பால் பவுடருடன் ஃபிரஷ்ஷாக எடுத்த எலுமிச்சை சாறினை இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

அந்த கலவையை முகத்தை நன்கு கழுவி விட்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் இடைவெளி இல்லாமல் நன்கு அப்ளை செய்து உலர விடுங்கள். நன்கு உலர்ந்தபின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இந்த முறையைப் பயன்படுத்திப் பாருங்கள். சிறந்த ரிசல்ட்டை பெற்றிருப்பதை உணர்வீர்கள்.

ஒரு டேபிள் ஸ்பூன் பால் பவுடருடன் சில துளிகள் குங்குமப்பூவைச் சேர்த்து அதனுடன் பேஸ்ட் செய்வதற்கான சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பேஸ்ட்டாக்கிக் கொள்ள வேண்டும். அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து அதை அப்படியே அரை மணி நேரம் உலர விடுங்கள். அதன் பின்னர் குளிர்ந்த நீரால் நன்கு கழுவி விடுங்கள்.

தேவையான பொருட்கள்:

பால்பவுடர் – 1 ஸ்பூன்

அரிசி மாவு – 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

ரோஸ் வாட்டர் – 1

அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவிய பின்னர் இந்த பேக்கை உங்களுடைய முகம் கழுத்து எல்லா இடங்களிலும் நன்றாக அப்ளை செய்து 20 நிமிடங்கள் அப்படியே விட்ட பின்னர் முகத்தை தண்ணீரில் லேசாக தேய்த்து கழுவுக் கொள்ளவும்.

நீங்களே எதிர்பாராத வகையில் முகம் பொழிவு பெற்றிருக்கும். வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது ஒரு நாள் விட்டு, ஒரு நாள், இந்த ஃபேஸ் பேக்கை போட்டு வரும் போது உங்களுடைய சருமத்தின் நிறம் கூடிக்கொண்டே இருக்கும்.

Related Post

தனது ஹீரோவுடன் துபாயில் வலம்வரும் வெங்கட்பிரபு.. யாரா இருக்கும்..?

Posted by - April 28, 2023 0
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி…

Bigg Boss Tamil 9 Title Winner | பிக்பாஸில் கடைசி நேர ட்விஸ்ட்..

Posted by - January 18, 2026 0
Bigg Boss Tamil 9 Title Winner | பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் இன்றுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே, யார் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது தொடர்பான…

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ

Posted by - October 15, 2025 0
வருகிற தீபாவளி அன்று தமிழில் உள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவுள்ள சிறப்பு திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் ஜீ தமிழ் தொலைக்காட்சியில்…

ஓணம் ஸ்பெஷல்: கேரளா கூட்டு கறி

Posted by - August 28, 2023 0
கேரளாவின் மிகவும் பிரபலமான பண்டிகை தான் ஓணம். இந்த ஓணம் சத்யா விருந்தில் தலை வாழை இலை விரித்து, அதில் 26 வகையான உணவுகள் பரிமாறப்படும். அதில்…

எந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம்……..

Posted by - March 9, 2024 0
வாரம் வாரம் சீரியல் டிஆர்பி லிஸ்ட் வெளியாகும். சீரியல்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இல்லத்தரசிகள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து வயதினரும் சீரியல் பார்த்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *