ஜனநாயகன் படத்துடன் மோதும் பராசக்தி.. சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு

193 0

ஜனநாயகன்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். இப்படத்தை ஹெச். வினோத் இயக்க பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, கவுதம் மேனன், மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர். ஆனால், சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, ரிலீஸ் தள்ளிப்போய்விட்டது, இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் வெளிவரும் என கூறப்படுகிறது.

ஜனநாயகன் vs பராசக்தி..?

 

இந்த நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீலீலா நடித்து வரும் பராசக்தி படமும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளிவரும் என்கின்றனர்.இப்படியிருக்க விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் உடன் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் மோதுகிறதா என கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், எக்காரணத்தை கொண்டும், ஜனநாயகன் படத்துடன் நம் படம் வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம் சிவகார்த்திகேயன். இதனால், ஜனநாயகன் படம் வெளிவருவதற்கு முன்பே, பராசக்தி படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.சிவகார்த்திகேயனின் இந்த அதிரடி முடிவின் காரணமாக, ஜனநாயகன் படத்துடன் பராசக்தி வெளிவராது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

விஜய் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்..

Posted by - February 10, 2026 0
ஜனநாயகன் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸாகி இருக்க வேண்டும்.சென்சார் போர்டு படத்தின்…

ஷாலினியை தாண்டி வளர்ந்த அஜித்தின் மகள்!! லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்

Posted by - March 13, 2023 0
அஜித் – ஷாலினி நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி இருவருக்கும் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு…

விஜய் குடும்பம் பிரிய காரண மே விஜய் மனைவி சங்கீதா தானா.?? மனைவி பேச்சை கேட்டு பெற்றோரை விரட்டிய விஜய்.! !வெளியான ஷாக் தகவல்.!!

Posted by - January 18, 2023 0
 தமிழ்   சினிமாவின்   பிரபல   நடி கர்   விஜய் .  இவர்   சமீபத்தில்   நடித்த   வாரிசு   திரைப் படம்   வெளியாகி    மக்கள்   மத்தியில்   நல்ல   வரவேற்பு   பெற்று …

சிங்கப்பூர் சலூன் ரசிகர்கள் பார்வை…

Posted by - January 25, 2024 0
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் இன்று வெளிவந்துள்ளது. வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் இப்படத்தை தயாரிக்க சத்யராஜ், லால்,…

AK-வை நேரில் சந்தித்த SK.. அடுத்த திட்டம் என்ன ரசிகர்கள் கேள்வி..

Posted by - November 23, 2022 0
நடிகர் அஜித் தற்போது ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *