தனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக களமிறங்கும் பாலிவுட்டின் பிரபல நடிகர்..

304 0

தனி ஒருவன் 2 ஆம் பாகத்தில் மாஸ் விளங்க களமிறங்கவுள்ளார் பாலிவுட்டின் பிரபல நடிகர் ஒருவர்.. யார் அந்த பிரபலம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான படங்களில் ஒரு சில படங்கள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி சூப்பர் ஹிட் படமாக அமைந்துவிடுகிறது. அப்படி, நடிகர் ஜெயம் ரவி நடித்த படங்களில் அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் நடித்த ‘தனி ஒருவன்’ திரைப்படம், சினிமாவில் அவரது கெரியர் கிராப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றது என்றே கூறலாம்.

2018 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி இயக்கத்தில் வெளியா படம் ‘தனி ஒருவன்’.  பெரும்பாலும் ரீமேக் படங்களையே இயக்கி வந்த மோகன் ராஜா முதன் முதலாக தனது சொந்த ஸ்க்ரிபிட்டில் உருவாக்கிய படம் தான் ‘தனி ஒருவன்’ நல்லவனுக்கும் , கெட்டவனுக்கும் இடையே நடக்கும் சண்டை மற்றும் போராட்டம் தான் படத்தின் கதை.படத்தில் ஹீரோ ஜெயம் ரவியின் கதாபாத்திரத்திற்கு நிகராக மாஸ் காட்டும் விதமாக வில்லன் கதாபாத்திரம் அமைந்திருக்கும். நீண்ட இடைவேளைக்கு பிறகு சித்தார்த் அபிமன்யூ கதாபாத்திரத்தில் அரவிந்தசாமியை திரையில் கண்ட ரசிகர்கள் கொண்டாடினார்கள். படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம், பாடல் என அனைத்திலும் தனி ஒருவன் திரைப்படம் மக்களின் பாரட்டை பெற்றது. பொதுவாக ஒரு படம் மாபெரும் ஹிட் கொடுத்தால் அதன் இரண்டாம் பாகத்தை மக்கள் எதிர்பார்த்திருப்பார்கள்.அதே போல் , தனி ஒருவன் திரைப்படத்தின் 2 ஆம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தனி ஒருவன் படத்தின் 2 ஆம் பாகம் குறித்த தகவல் வெளியானது, எளிமையான முறையில் படத்தின் பூஜையும் நடந்து முடிந்தது. ஆனால், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எந்த வித தகவலும் வெளியாகாமல் இருந்தது. மேலும், 2ஆம் பாகத்தின் வில்லன் கதாபாத்திரத்தை இயக்குனர் வலைவீசி தேடி வருவதாக கூறப்பட்டது, முதல் பாகத்தில் அரவிந்தசாமியின் வெயிட்டான கதாப்பாத்திரம் போல இரண்டாம் பாகத்திலும் அமைய வேண்டும் என இயக்குனர் வில்லன் கதாபத்திரத்தை தேடி வருவதாக கூறப்பட்டிருந்த நிலையில்,தற்போது தனி ஒருவன் படத்தின் 2 ஆம் பாகத்தின் வில்லன் நடிகர் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி, ஜெயம் ரவி , நயன்தாரா நடிக்கும் தனி ஒருவன் படத்தின் 2ஆம் பாகத்தில், பிரபல பாலிவுட் நடிகரும் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முதல் பாகத்தில் அரவிந்சாமியின் கதாபாத்திரம் எப்படி பேசப்பட்டதோ அதே போல் இரண்டாம் பாகத்திலும் அபிஷேக் பச்சனின் கதப்பாத்திரம் பேசப்படும் என்று கூறப்படுகிறது.

Related Post

விக்ரம், பா ரஞ்சித் கூட்டணி தாக்கத்தை ஏற்படுத்தியதா.? பிரகாசமாக மின்னிய தங்கலான் முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

Posted by - August 16, 2024 0
 சமூக வலைத்தளம் முழுவதுமே இப்போது தங்கலான் பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. ஒரு சிலர் படம் பற்றிய குறைகள் சொன்னாலும் ஒட்டுமொத்த ஆடியன்ஸும் தங்கலானை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு…

தனுஷின் ராயன் பட இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸும் இருக்கு..!

Posted by - May 16, 2024 0
தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் பட இசை வெளியீட்டு விழா, காத்திருக்கும் பிரம்மாண்டம்.. நடிகர், இயக்குனர், தயரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என தமிழ் சினிமாவில் பன்முக…

இனி தமிழ் சினிமா போதும், அதிரடி முடிவு எடுத்த நடிகை பிரியா பவானி ஷங்கர்- என்ன விஷயம்?

Posted by - August 12, 2023 0
ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வலம் வரும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற…

இட்லி கடை உருவானது எப்படி? – நடிகர் தனுஷ் விளக்கம்

Posted by - September 16, 2025 0
தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம், ‘இட்லி கடை’. இதில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.…

காதல் மன்னன் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு……

Posted by - March 7, 2023 0
ஆக்‌ஷன், நகைச்சுவை, காதல் என அனைத்து ஏரியாவிலும் நன்றாக ஸ்கோர் செய்தார் அஜித். அஜித்தின் காதல் மன்னன் திரைப்படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. 1993-ல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *