Generated Image January 02 2026 11 05AM

தமிழகத்தில் அடுத்த ஆட்சி எங்க ஆட்சி தான்.!

123 0

தமிழகத்தில் ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என உறுதியோடு களத்தில் இறங்கியுள்ளது பாஜக, அந்த வகையில் பிரம்மாண்ட மோடி பொங்கல் விழாவில் தொடங்கி அடுத்த 2 மாதங்களுக்கு தமிழகத்தை குறிவைத்து செயல்பட அமித்ஷா திட்டமிட்டு களம் இறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூடு பிடிக்கும் தமிழக தேர்தல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 100 முதல் 120 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில்தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளதுஅந்தவகையில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க திமுக திட்டமிட்டு வருகிறதுஆனால் இதற்கு வாய்ப்பே கொடுக்க கூடாது என அதிமுக– பாஜக கூட்டணி காய நகர்த்தி வருகிறதுஅதில் மற்றொரு பக்கம் திரைத்துறையில் இருந்து அரசியலில் கால் பதித்துள்ள நடிகர் விஜய் இளம் தலைமுறை வாக்காளர்களை வைத்து மிரட்டி வருகிறார்இதுவரை பார்த்திராத தேர்தலாக தமிழக சட்டசபை தேர்தல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதுஅதிலும் இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்த பாஜகவால் தமிழகத்தில் கால் பதிக்க முடியவில்லை.

40 தொகுதிகளை குறிவைக்கும் பாஜக

பல வருடங்களுக்கு பிறகு கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி உதவியோடு சட்டமன்றத்தில் 4 எம்எல்ஏக்கள் நுழைந்துள்ளனர்இதை 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தை எட்ட முடிவு செய்துள்ளதுஅதற்கு ஏற்ப பாஜகவிற்கு சாதகமாக 40 தொகுதிகளை குறிவைத்து ஏற்கனவே களப்பணியை தொடங்கியுள்ளதுஅதிலும் திமுக குறைந்த வாக்குகளில் வெற்றி பெற தொகுதிகளின் பட்டியலையும் எடுத்து வைத்து அலசி ஆராயந்து வருகிறதுஇந்த நிலையில் எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என சபதத்தோடு களத்தில் இறங்கியுள்ளார் பாஜக மூத்த தலைவர் அமித்ஷா,

4ஆம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா

அதற்கு ஏற்ப தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளாராக தனது நம்பிக்கைக்குரிய நபரான பியூஸ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை நியமித்துள்ளார்இதனையடுத்து அதிமுக– பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்கவும் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜனவரி 4-ந்தேதி தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாஅன்றைய தினம் புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தி வரும் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்‘ என்ற பாதையாத்திரை இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளார்.  இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பாஜக நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்இந்த ஆலோசனையில் திமுகவை வீழ்த்த எடுக்கப்படவுள்ள வியூகங்கள் தொடர்பாக கேட்டறிவதோடுஆலோசனையும் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இபிஎஸ்- அமித்ஷா சந்திப்பு

இதனையடுத்து ஜனவரி 5-ந்தேதி ஸ்ரீரங்கத்தில் ‘மோடி பொங்கல்‘ நிகழ்ச்சியிலும் அமித்ஷா கலந்துகொள்ளவுள்ளார்காலை 11 மணி அளவில் மன்னார்புரம் ராணுவத்திடலில் 3 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் “மோடி பொங்கல்” விழாவில் பங்கேற்க பாஜக கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாகவோ அல்லது நிகழ்ச்சிக்கு பிறகோ அமித்ஷாவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசவுள்ளார்.

அப்போது கூட்டணியில் இடம்பெறவுள்ள கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடுபாஜகவிற்கு தொகுதிகள் எத்தனைஓபிஎஸ்– டிடிவியை மீண்டும் இணைப்பது தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதுஎனவே எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியை பிடித்தாக வேண்டும் என உறுதியாக இருக்கும் அமித்ஷா, தித்திக்கும் பொங்கல் பண்டிகை முதல் அடுத்த 2 மாதங்களுக்கு தமிழகத்தை டார்கெட் செய்து களத்தில் இறங்க முடிவு செய்துள்ளதாக பாஜக வட்டார தகவல் கூறப்படுகிறது. 

Related Post

nda

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி: மேட்ரிஸ் – ஐஏஎன்எஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

Posted by - March 16, 2026 0
தமிழக அரசி​யல் களம் குறித்து கருத்​துக் கணிப்பு வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தமிழகத்​தில் திமுக கூட்​ட​ணியை பின்​னுக்​குத் தள்​ளி, தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ)…
tvk cm e1777981664118

Vijay Swearing-In: ”ஜோசப் விஜய் ஆகிய நான்” முதலமைச்சர் பதவியேற்பு எப்போ? எங்கே? தேதி குறித்த தவெக!

Posted by - May 5, 2026 0
Vijay Swearing-In Ceremony: தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் பதவியேற்பு எப்போது? எங்கே? தேதி குறித்த தவெக! தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள் (மே 7ஆம் தேதி) முதலமைச்சராகப்…

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

Posted by - August 18, 2025 0
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாதக பொதுக் கூட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. செஞ்சிக்கோட்டையை மராட்டிய மன்னர்கள் ஆண்ட கோட்டை…
vijay 2

தமிழக சட்டப்பேரவை தேர்தல்-வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

Posted by - April 6, 2026 0
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு…
dmdk 2 e1776320866955

“பாலியல் வன்கொடுமை, போதைக் கலாச்சாரம் குற்றச்சாட்டுதான் இந்த ஆட்சி மீது இருக்கு..” மு.க.ஸ்டாலின் முன்பே பேசிய பிரேமலதா!

Posted by - April 16, 2026 0
மு.க.ஸ்டாலின் ஆட்சி மீது போதைக் கலாச்சாரம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுதான் இருக்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியது திமுக-வினரை அதிருப்தி அடையவைத்துள்ளது. தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலுக்கான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *