தமிழக சட்டப்பேரவை கூடியது: கரூர் கூட்ட நெரிசலில் பலியானோருக்கு அஞ்சலி

182 0

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்.14) தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கரூர் துயரம் தொடர்பாக இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு கடந்த மாதம் அறிவித்தார். அதன்படி, தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது.இதில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன், நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன், அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.முன்னதாகம் பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் அப்பாவு தலைமையில் நேற்று நடைபெற்றது. பாஜக, கம்யூனிஸ்ட்கள் தவிர்த்து மற்ற கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். பாமக சார்பில் ஜி.கே.மணி பங்கேற்றார். பின்னர், அப்பாவு கூறுகையில், “அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சட்டப்பேரவைக் கூட்டம் அக்.14 முதல் 17-ம் தேதி வரை நடைபெறும்.” என அறிவித்தார்.பரபரப்பான அரசியல் சூழலில் இந்தக் கூட்டத்தொடர் தொடங்குவதால் இக்கூட்டத்தொடரின் மீது எதிர்பாப்பு கூடியுள்ளது.

Related Post

Generated Image February 09 2026 3 52PM

ரூ.10.71 லட்சம் கோடி கடன் சுமை

Posted by - February 17, 2026 0
Tamil Nadu Interim Budget 2026: தமிழ்நாடு அரசின் கடன்சுமை 2027ம் நிதியாண்டின் முடிவில் ரூ.10.71 லட்சம் கோடியாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. Tamil…

அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெறவில்லை – இபிஎஸ்

Posted by - August 22, 2025 0
அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெறவில்லை என இபிஎஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் விஜய்-க்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அவர், அதிமுக யாரிடம் இருக்கிறது என்று…
Generated Image November 17 2025 11 26AM

”ஒன்று சேர், புரட்சி செய்” மோடில் பாஜக.. நவகிரகங்கள், பீகார் ஃபார்முலா?தமிழகத்தில் சாத்தியமா?

Posted by - November 17, 2025 0
பீகார் சட்டமன்ற தேர்தலின் போது முன்னெடுத்த திட்டங்களை அப்படியே, தமிழ்நாடு தேர்தலுக்கும் பின்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாம். எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, திமுகவை…
qw

TVK ‘இன்ஸ்டன்ட்’ வெற்றிக்கு வித்திட்ட இன்ஸ்டாகிராம் ..

Posted by - May 5, 2026 0
தமிழக அரசியலில் 2024 – 2026 காலகட்டம் ஒரு மாபெரும் டிஜிட்டல் மாற்றத்துக்கான சாட்சியாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்…

”காக்கா, தற்குறி கூட்டம்.. மழையில பேசுவியா?” – விஜயை அடித்த சீமான், திருப்பிக் கொடுக்கும் தவெக

Posted by - September 15, 2025 0
தவெக தலைவர் விஜய்க்கு கூடியது காகங்கள் மற்றும் தற்குறி கூட்டம் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். மக்கள் பிரச்னைகளை கூட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *