ஈபிஎஸ் உடன் தங்கமணி… சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி! குஷியில் அதிமுக தொண்டர்கள்

177 0

முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிருப்தி காரணமாக திமுகவில் இணையவுள்ளார் என்று தகவல் சர்ச்சை கிளம்பியிருந்த நிலையில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன்  சுற்றுப்பயணத்தில் கலந்துக்கொண்டார்

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிருப்தி காரணமாக திமுகவில் இணையவுள்ளார் என்று தகவல் சர்ச்சை கிளம்பியிருந்த நிலையில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன்  சுற்றுப்பயணத்தில் கலந்துக்கொண்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதிமுக-பாஜக கூட்டணி:

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்தது. இதனால் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதிமுக முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்த அன்வர் ராஜா, முன்னாள் எம்.பி மைத்ரேயன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர், இந்த லிஸ்டில் அடுத்ததாக  அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் பெயர் பெரிதும் அடிப்பட்டது. இதை ஒரு நாளிதழ் செய்தியாகவே வெளியிட்டது.

தங்கமணி மறுப்பு:

இந்த செய்திகளுக்கு தங்கமணி மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார், அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில்  ”13.8.2025 (அன்றைய நாள்) தங்கள் நாளிதழில் முதல் பக்கத்தில் நான் எங்கள் கட்சியில் அதிருப்தியில் இருப்பதாகவும், அறிவாலயத்தில் அழைப்பு என்றும் செய்தி போட்டிருப்பது பார்த்து மிகவும் வருத்தமடைந்தேன்.

நான் தினந்தோறும் படிக்கிற பத்திரிக்கையில் முதல் பத்திரிக்கையாக படித்து வருகிற வாசகன். உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிற ஆசிரியர் மீதும், பத்திரிக்கையின் மீதும் இன்று வந்துள்ள செய்தி, அதுவும் உங்கள் பத்திரிக்கையில் வந்ததைப்பார்த்து மிகவும் மனவேதனை அடைந்தேன். நான் திங்கட்கிழமை காலை (11.8.2025) தொண்டையில் சிறு அறுவைசிகிச்சை செய்து மருத்துவமனையில் இருக்கும்போது இந்த செய்தி என்னை இன்னும் ரணம் அதிகமாக்கியது.

11.8.2025 காலை 6.00 மணிக்கு அறுவை சிகிச்சை என்ற போதும், ஓய்வு எடுக்காமல் கடந்த 9.8.2025, 10.8.2025 ஆகிய தேதிகளில் திருச்சியில் முகாமிட்டு எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்று கட்சிப்பணியாற்றியவனை பற்றி இப்படி ஒரு செய்தி வந்ததை எண்ணி மிகவும் மனவேதனைப்படுகிறேன்.

இறுதி மூச்சுவரை அதிமுக:

எனது இறுதி மூச்சு உள்ளவரை அஇஅதிமுக இயக்கம் தான் என் உயிர் மூச்சு. மூச்சு நின்றதற்கு பிறகு எனது உடலில் அஇஅதிமுக கொடி போர்த்தி தான் இருக்கும் என்பதையும், இது யாரோ சில அரசியல் எதிரிகளின் தவறான தகவல் தெரிவித்ததை செய்தியாக போட்டுள்ளீர்கள். இதை முழுமையாக மறுக்கிறேன்” என அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

ஈபிஎஸ் உடன் ஒரே வேனில் தங்கமணி:

இந்த நிலையில் தங்கமணியின் உடல்நலம் சீரடைந்துள்ளது. அதனால் திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, லால்குடி சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தில் தங்கமணி கலந்துகொண்டார். மேலும் நேற்று மணச்சநல்லூர், துறையூர், முசிறி ஆகிய தொகுதிகளுக்கும் எடப்பாடி பழனிசாமியுடன் தங்கமணி கலந்துகொண்டுள்ளார். தங்கமணியை பார்த்ததும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குஷியாக கையசைத்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள், இதனால் தங்கமணி திமுகவில் இணைவார் என்கிற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Related Post

Generated Image January 23 2026 11 16AM

வெளியான அதிமுக கூட்டணியின் தொகுதிப்பங்கீட்டு பட்டியல்; பாஜக, பாமக, அமுமுக-விற்கு எத்தனை.?

Posted by - March 23, 2026 0
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில், பிரதான கூட்டணி கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது குறித்த பட்டியல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு…

”ஒன்னுமே இல்லாத விஜய்க்கு X,Y எதுக்கு? சொந்த சாதிக்காரங்களே என்ன கண்டுக்கல” சீமான் பேச்சு

Posted by - July 28, 2025 0
Seeman On Vijay: தவெக தலைவர் விஜய்க்கு எதற்கு X,Y பிரிவு பாதுகாப்பு என, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். Seeman On Vijay: சொந்த…

திமுக அரசு மீதான மக்களின் கோபம் தேர்தல் முடிவுகளில் வெளிப்படும் – எல்.முருகன் உறுதி!

Posted by - May 1, 2026 0
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும்,  திமுக அரசு மீதான மக்களின் கோபம் தேர்தல் முடிவுகளில் வெளிப்படும் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன்…
Gemini Generated Image t4hwvit4hwvit4hw

500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?

Posted by - March 30, 2026 0
தங்கம், வெள்ளி, பணம், கார்கள்… தவெக தலைவர் விஜயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? தவெக தலைவர் விஜயின் அசையும் சொத்து மதிப்பு ரூ.404 கோடி (404,58,57,196)…

பட்டையடித்த மோடி, கடுப்பாகி ஒபிஎஸ் எடுத்த புது ரூட் – தமிழக பிள்ளைகள் பாவம்.. ஆன் தி வே டூ விஜய்?

Posted by - July 29, 2025 0
மத்திய பாஜக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்து இருப்பது, தமிழ்நாடு அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி ஓ.பன்னீர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *