தென் தமிழகத்தில் இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கோடை மழை..

274 0

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (30.04.2024) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை (01.05.2024) முதல் 03.05.2024 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வரும் 04.05.2024 முதல் 06.05.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு :

இன்று (30.04.2024) முதல் 04.05.2024 வரை அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

இன்று (30.04.2024) முதல் 04.05.2024 வரை அடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 01.05.2024 முதல் 03.05.2024 வரை: வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

இன்று (30.04.2024) முதல் 04.05.2024 வரை அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°–43° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38°–40° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°–39° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம் :

30.04.2024 முதல் 04.05.2024 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் , ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை :

01.05.2024 முதல் 03.05.2024 வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

வானிலை முன்னறிவிப்பு :

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Related Post

”நேர்மையில்லாத ஆளுநர் ரவி” 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல், உச்சநீதிமன்றம் ஆப்பு – மாநில அரசின் வசமாகும் பல்கலை.,

Posted by - April 8, 2025 0
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் துணைவேந்தர்களை நியமிக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் அதிகாரம் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாட்டில் நேர்மை இல்லை என உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.…

மலேரியாவை விரட்டும்! மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்! கோரைக்கிழங்கின் அற்புதம்! எப்படி சாப்பிடுவது?

Posted by - December 27, 2023 0
சென்னை: கோரை கிழங்கு எல்லா தரப்பினருக்கும் நிறைய மருத்துவ பலன்களை கொடுக்கிறது. சித்தர்கள் நமக்கு எண்ணற்ற மூலிகைகளை விட்டுச் சென்றுள்ளனர். அந்த வகையில் மிக முக்கியமானது கோரைக்…

தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் இதுவா? தேர்தலில் மெர்சல் காட்ட விஜய் மாஸ்டர் ப்ளான்!

Posted by - June 21, 2025 0
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்டோ சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தை அணுக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும்…

“நைட்டி”.. மனித நுரையீரலை மசாலா தடவி சாப்பிட்டாராம்.. கல்லீரலை கூட விடல.. வெறிபிடித்த “ஹோமோ” டாக்டர்

Posted by - November 25, 2023 0
தஞ்சாவூர்: கும்பகோணம் போலி சித்த மருத்துவர் கேசவமூர்த்தி செய்த காரியத்தை பார்த்து, அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள் தஞ்சை போலீசார். அவரது வீட்டில் தோண்ட தோண்ட எலும்புகள் கிடைத்து…

எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! – பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்!

Posted by - January 9, 2025 0
கடந்த மாதம் சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இணைந்து உணவுத்திருவிழா நடத்தினர். பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படுமா என்பது குறித்து துணை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *