தொப்பை இருக்கா.. தப்பி தவறியும் இந்த 2 உணவுகளை சேர்த்து சாப்பிடாதீர்கள்! பெரிய பிரச்சினையாகிடும்

232 0

டெல்லி:

உடல் எடையைக் குறைக்க முயல்வோர் நிச்சயம் சில வகை உணவுகளை ஒன்றாகச் சாப்பிடக் கூடாது. அவை என்னென்ன உணவுகள் என்பது குறித்து நாம் இதில் பார்க்கலாம்.

உடல் பருமனைக் குறைக்க எப்போதும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று எந்தவொரு அவசியமும் இல்லை. சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டாலும் கூட உங்களால் உடல் எடையைக் குறைக்க முடியும்.

இதற்கு நீங்கள் சில விஷயங்களில் கவனமாக இருந்தால் போதும். சில வகை உணவுகள் எடை குறைப்பு பயணத்தைத் தாமதமாக்கும். அத்துடன் கொழுப்பை ஏற்படுத்தும் சில உணவுகளைச் சேர்த்துச் சாப்பிட்டால், மீண்டும் எடை கூடிவிடும் ஆபத்தும் இருக்கிறது.தொப்பை இருக்கா.. தப்பி தவறியும் இந்த 2 உணவுகளை சேர்த்து சாப்பிடாதீர்கள்! பெரிய  பிரச்சினையாகிடும் | What are the five food combinations that need to avoid  at all costs for ...

உடல் எடை:

இந்த குறிப்பிட்ட உணவுகளை நீங்கள் சாப்பிடாமல் இருந்தால் போதும் உடல் எடை மளமளவென குறையும். அதேபோல நீங்கள் சமைக்கும் போது எப்படிச் சமைக்கிறீர்கள் என்பதும் முக்கியம். உணவின் சுமை மட்டுமில்லை, உடல் எடையையும் கூட இது மாற்றும். நீங்கள் சமைக்கும் முறையும் கூட உணவில் இருக்கும் கலோரி எண்ணிக்கையை மாற்றும்..

அதாவது ஒரு காய்கறி அல்லது அசைவ உணவை டீப் ஃப்ரை செய்தால் அதன் கலோரி எண்ணிக்கை அதிகரிக்கும். அதேநேரம் வேகவைத்துச் சாப்பிட்டால் கலோரி எண்ணிக்கை குறையும். மேலும், உணவை டேஸ்ட் ஆன ஒன்றாக மாற்ற அதில் எலுமிச்சை, தேன், பேரீச்சம்பழம், உலர் பழங்கள் ஆகியவற்றைச் சேர்க்கலாம். இது உணவின் சுவையையும் கூட்டும் உடல் எடை அதிகரிக்காமலும் பார்த்துக் கொள்ளும்.

அரிசி & உருளைக்கிழங்கு:

அரிசி சாதத்தில் கார்போஹைட்ரேட் அதிகம் இருக்கிறது. இதனால் அரிசி சாதத்தை அதிகம் சாப்பிட்டால் அது உடல் எடை அதிகரிப்புக்குக் காரணமாக அமையும். அரிசி எளிதில் ஜீரணிக்கக்கூடியது தான் என்றாலும் அதை அளவாகச் சாப்பிட வேண்டும். அரிசி சாதம் சாப்பிடும் போது அத்துடன் உருளைக்கிழங்கைச் சாப்பிடக் கூடாது.

அவை இரண்டும் உடலுக்குக் கொழுப்பைத் தரும். உருளைக்கிழங்கில் மாவுச்சத்து அதிகம் இருக்கிறது. அதை அரிசி சாதத்துடன் சாப்பிடும் உடலில் கலோரி எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் இந்த இரண்டு உணவுகளை நிச்சயம் ஒன்றாகச் சாப்பிடக் கூடாது.

ரொட்டி மற்றும் தயிர்:

பெரும்பாலும் எதாவது அவசரம் என்றால் நாம் ரொட்டி மற்றும் தயிரைத் தான் சாப்பிடுவோம், ரொட்டி என்பது மைதாவில் இருந்து செய்யப்பட்டது. அதில் அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால் மைதா ரொட்டியை தான் முதலில் தவிர்க்க வேண்டும். அதேபோல ரொட்டி சாப்பிடும் போது தயிரைச் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

அதுவும் நமது உடல் எடையை அதிகரிக்கும் ஆபத்து இருக்கிறது. சில நேரங்களில் அதிகளவில் புரதம் இருக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டால் அதுவும் கூட செரிமான அமைப்பைக் குழப்பம். இதுவும் உடல் பருமன் அதிகரிக்கக் காரணமாக அமைந்துவிடும். எனவே, நீங்கள் சிக்கன் மற்றும் பருப்பு உள்ளிட்ட புரதம் அதிகம் இருக்கும் உணவுகளை ஒன்றாகச் சாப்பிட வேண்டாம். ஏனென்றால் இது உடல் எடை அதிகரிக்கக் காரணமாக அமைந்துவிடும்.

கண்டிப்பாகக் கூடாது:

தின்பண்டங்கள் மற்றும் டீ, காபி ஆகிய இரண்டையும் ஒன்றாகக் குடிக்க வேண்டாம். இந்த இரண்டையும் நாம் ஒன்றாகச் சாப்பிட்டால் அது வயிற்றில் அசிடிட்டியை ஏற்படுத்தும். இது மட்டுமின்றி பிஸ்கட்கள் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களில் சர்க்கரை மற்றும் ப்ரிசர்வேட்டிவ்கள் அதிகமாக இருப்பதால், அவை உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். தின்பண்டங்களை நீங்கள் தவிர்க்காவிட்டால் உடல் எடையை உங்களால் குறைக்கவே முடியாது.

பால் மற்றும் வாழைப்பழம்:

இந்த இரண்டிலும் அற்புதமான ஊட்டச்சத்து இருக்கிறது. இருப்பினும், இந்த இரண்டையும் ஒன்றாகச் சாப்பிட்டால், அது உடலில் இருக்கும் சத்துக்களை காலி செய்துவிடும். மேலும், உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும். எனவே, பால் மற்றும் தயிர் என இரண்டையும் சாப்பிட விரும்பினால் குறைந்தது 20-30 நிமிடங்கள் கேப் விடுவது நல்லது.

Related Post

பெங்களூருவில் ஆன்லைனில் ‘பிரிட்ஜை’ விற்க முயன்று ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த என்ஜினீயர்

Posted by - July 1, 2023 0
பெங்களூரு : பெங்களூரு விஜயநகர் பகுதியில் வசித்து வருபவர் பூர்ண சந்திரராவ் (வயது 41). என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பூர்ண சந்திரராவ் வீட்டில்…

கருணாநிதி, எம்.ஜி.ஆர் வணங்கிய டி.ஆர்.எஸ்! – மார்டன் தியேட்டர்ஸின் கதை

Posted by - December 15, 2023 0
சினிமா தயாரிப்பு தொழிலில் கொல்கத்தாதான் கோலோச்சிக்கொண்டிருந்தது. சினிமா தயாரிப்பு தொடர்பான எல்லா வேலைகளுக்கும் கொல்கத்தா செல்ல வேண்டியிருந்தது. அதற்கு மாற்றாக சேலத்திலேயே ஒரு ஸ்டூடியோ தொடங்கினால் என்ன?…

நைஜர் நாட்டில் இருந்து இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள் – மத்திய அரசு வேண்டுகோள்

Posted by - August 12, 2023 0
புதுடெல்லி: மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அதிபர் முகமது பாசும் கைது செய்யப்பட்டார். இதற்கு ஐ.நா. மற்றும் அமெரிக்கா…

பெங்களூரு: ஒரே நாளில் 1,344 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை

Posted by - June 9, 2023 0
பெங்களூரு கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அதிகளவில் வேலை விஷயமாக குடியிருந்து வருகிறார்கள். இதனால் தலைநகரில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்ற…

கச்சா எண்ணெய் விலை உயர்வு: பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு

Posted by - September 7, 2023 0
புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 டாலர், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.7,470 ஐ நெருங்குகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *