1½ நிமிடங்களில் முடிந்தது கருவில் உள்ள குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை- டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் சாதனை

341 0

புதுடெல்லி:

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 28 வயதான கர்ப்பிணி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே மூன்று முறை கரு கலைந்திருந்தது. 4-வது முறையாக கர்ப்பம் அடைந்த அப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கருவில் உள்ள குழந்தைக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.1½ நிமிடங்களில் முடிந்தது கருவில் உள்ள குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை- டெல்லி  எய்ம்ஸ் டாக்டர்கள் சாதனை | Heart surgery on unborn baby completed in 1½  minutes ...

இதுபற்றி பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். அவர்கள் இந்த குழந்தையை பெற்றெடுக்க விரும்பினர். இதையடுத்து கருவிலேயே குழந்தைக்கு இதய சிகிச்சை அளிக்க டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

மிகவும் சவாலான இந்த அறுவை சிகிச்சையை மகப்பேறு மருத்துவதுறையுடன் இணைந்து இதயவியல் மற்றும் இதய மயக்க மருந்துத்துறை டாக்டர்கள் குழுவினர் செய்தனர். அல்ட்ராசவுண்ட் வழிகாட்டுதலின் கீழ் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தாயின் அடி வயிற்றில் துளையிட்டு மெல்லிய குழாய் செலுத்தப்பட்டது.

அது கருவில் உள்ள குழந்தையின் இதயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதிலிருந்து சிறிய பலூன் வடிகுழாயை பயன்படுத்தி, திராட்சை அளவு கொண்ட இதயத்தில் இருந்து அடைப்பு வெற்றிகரமாக நீக்கப்பட்டது. இந்த சிகிச்சையை 90 வினாடிகளில் செய்து முடித்தனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு தாயும், குழந்தையும் நன்றாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அறுவை சிகிச்சை செய்த மூத்த டாக்டர் ஒருவர் கூறும்போது, தாயின் அடி வயிற்றின் வழியாக கருவில் உள்ள குழந்தையின் இதயத்தில் ஒரு ஊசியை செலுத்தி அடைப்பை சரி செய்தோம். குழந்தையின் இதயம் நன்றாக வளரும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் குழந்தை பிறக்கும் போது இதய நோய் தீவிரம் குறைவாக இருக்கும்.

இது போன்ற ஒரு செயல் முறை மிகவும் சவாலானது. ஏனென்றால் அது கருவின் உயிருக்கு கூட ஆபத்தாகலாம். இந்த சிகிச்சை மிக விரைவாக செய்யப்பட வேண்டும். ஏனென்றால் இதயத்தின் பெரிய அறையை துளைக்க வேண்டி இருந்தது ஏதாவது தவறு நடந்தால் குழந்தைக்கு ஆபத்தாக முடியும். இந்த சிகிச்சையை நாங்கள் விரைவாக செய்து முடித்தோம் என்றார்.

Related Post

கேரளாவில் புதிதாக நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: கோழிக்கோட்டில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு

Posted by - September 22, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்று பாதிப்புக்கு அடுத்தடுத்து 2 பேர் இறந்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை சுகாதாரத்துறையினர் சேகரித்து,…

பிலிப்பைன்ஸ் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட திரிசூலம் 10 ஆயிரம் ஆண்டு பழமையானது: ஆய்வில் தகவல்

Posted by - June 10, 2023 0
பெங்களூரு : பெங்களூருவில், பிலிப்பைன்ஸ் நாட்டில் சுரங்க தொழில் செய்து வரும் பிரபல தொழில் அதிபரான சையத் சமீர் உசேன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,…

நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் காலமானார்..

Posted by - August 15, 2025 0
நாகாலாந்து ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல. கணேசன் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. “ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு”

Posted by - June 5, 2025 0
ஏழைகள் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கருணையுடன் கூடிய மத்திய அரசு, கடந்த பத்தாண்டுகளில், வறுமையின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி…

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்

Posted by - November 16, 2023 0
புதுடெல்லி: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. தமிழ்நாடு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *