நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு- பிரகாஷ் ராஜ் கண்டனம்

198 0

பெங்களூரு:

பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள திரைப்படம் ‘சித்தா’. இந்த படத்தை நடிகர் சித்தார்த் தன்னுடைய இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நேற்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ‘சித்தா’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சித்தார்த் பெங்களூரு சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நடிகர் சித்தார்த் பேசிக்கொண்டிருந்தார்.அது நடக்கவில்லை எனில் நடிப்பை விட்டு விடுவேன் - நடிகர் சித்தார்த்
அப்போது அங்கு வந்த கன்னட அமைப்பினர் இந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காவிரி விவகாரத்தில் கன்னட அமைப்பினர், தமிழ்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழ் நடிகரான சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கன்னட அமைப்பினரின் எதிர்ப்பைத் தொடர்ந்து மேடையில் இருந்து நடிகர் சித்தார்த் வெளியேறினார். இதையடுத்து அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சித்தார்த்தை தொந்தரவு செய்வதை ஏற்க முடியாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “நீண்ட காலமாக இருக்கும் பிரச்சனையை தீர்க்காமல் வைத்திருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும், மத்திய அரசை தலையிட வைக்க அழுத்தம் கொடுக்காத எம்.பி.க்களையும் கேட்பதற்கு பதிலாக, சாதாரண மக்களையும் , சித்தார்த் போன்ற கலைஞர்களையும் தொந்தரவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு கன்னடராக அனைத்து கன்னட மக்களின் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.

Related Post

இரண்டு சூப்பர்ஹிட் இயக்குனர்களின் படத்தில் நடிக்கவிருந்த விஜய்! ஆனால் தவறிப்போன வாய்ப்பு..

Posted by - August 30, 2023 0
விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் தளபதி 68.…

திடீரென விலகிய விடாமுயற்சி.. அதிர்ச்சியில் ரசிகர் வெளியிட்ட கடிதம்

Posted by - January 1, 2025 0
விடாமுயற்சி வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிலீஸ் ஆகவில்லை என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.புத்தாண்டு அன்று விடாமுயற்சி ட்ரைலரை…

‘தக்லைஃப்’ படத்தில் கெத்தான என்ட்ரி கொடுத்த சிம்பு – வீடியோவுடன் அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

Posted by - May 8, 2024 0
மணிரத்தினம் – கமல்ஹாசன் காம்போவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் நடிகர் சிம்பு அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதாக என்ட்ரி வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.…

அருண் விஜய்க்காக வந்து நின்ற சிவகார்த்திகேயன்.. வணங்கான் மேடையில் முடிவுக்கு வந்த மோதல்

Posted by - December 19, 2024 0
இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் சூர்யா, சிவகுமார், சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதுதான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதிலும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *