நடிப்பது மட்டுமே நாடாள தகுதி என்பது அவமானம் – சீமான் விமர்சனம்

322 0

திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே ஒரு நாட்டை ஆள்வதற்கு, ஒரு இனத்தை வழி நடத்துவதற்கு தலைவனாக இருப்பதற்கு தகுதி வந்து விடுவது என்று கூறுவது அவமானகரமானது என சீமான் ஆவேசமாக பேசியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ஒரு நாட்டில் நீர் வளம், நிலவளத்தை தாண்டி அறிவு வளம் முக்கியம், ஒரு நாட்டின் எதிர்காலமே வகுப்பறையில் தான் இருக்கிறது என்று கூறுகின்றனர். ஆனால் இன்றைக்கு வகுப்பறை வர்த்தக அறையாக மாறிவிட்டது.

யார் அதிகம் பணம் கொடுக்கிறார்களோ, அவர்கள் நல்ல கல்வியை கற்றுக் கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. பல ஆயிரம் அரசு பள்ளிகள் மூடப்படும் நிலை உள்ளது. காரணம் மாணவர்கள் வரவில்லை. ஏன் வரவில்லை? பள்ளிகள் தரம் இல்லை.

செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் வைத்து மருத்துவம் பார்க்க முடியவில்லை, ஏன் ? தரமாக இல்லை. தரங்கெட்டவர்கள் கையில் அதிகாரம் உள்ளது. மற்ற நாடுகளில் கல்வி ,குடிநீர், மின்விநியோகம் என்று அரசு நடத்தும் அனைத்தும் தரமாக உள்ளது. ஏன் என் நாட்டில் கேவலமாக, தரமற்று இருக்கிறது?

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் சாலை சரியாக உள்ளதா? விவசாயத்திற்கு தனிபட்ஜெட் போட்டால் போதாது, விவசாயம் செய்ய ஆட்கள் இல்லை. 100 நாள் வேலை திட்டத்தை எப்படி பயன்படுத்துவது என்று இங்கு தெரியவில்லை. கடலில் சிலை வைக்க, டாஸ்மாக் மது பாட்டில்களை பாதுகாக்க கொடுக்கும் முக்கியத்துவத்தை உயிர் பாதுகாக்கும் விவசாய பொருட்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை.

சினிமா டிக்கெட் விலை என்ன? விவசாய பொருட்களின் விலை என்ன? ஊழல், லஞ்சம் பற்றி பேச பாஜக, காங்கிரஸ், திமுக ,அதிமுக, கட்சிகளுக்கு பேச அருகதை இல்லை. மணிப்பூர் கலவரம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது, மணிப்பூர் போல போல தமிழகத்தில் கலவரத்தை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது.

விஷத்தை கொடுத்து ஒரு குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க முடியும் என்று நம்பவில்லை. ஸ்டெர்லைட் வேண்டாம் . அதனை வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்லட்டும். தாமிரத்தை பற்றி பேசுபவர்கள், தண்ணீரைப் பற்றி பேசுவார்களா? அங்கு வேலை பார்ப்பவர்கள், அந்த ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி குடியிருப்பார்களா?

அரசியலுக்கு வர நடிகர் விஜய் விரும்புகிறார்.‌ நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலமாக பல ஆண்டுகளாக மறைமுகமாக செய்து வருகிறார். ஆனால் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர விரும்புவதால் அதை வெளிப்படையாக செய்து வருகிறார். படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதை வரவேற்கலாம், பாராட்டலாம். வாக்கு செலுத்துவதற்கு பணம் கொடுக்கவும் வாங்கவும் கூடாது என்ற எனது கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தம்பி விஜய் பேசியுள்ளார். அது வரவேற்க வேண்டிய விஷயம்.

வாக்குக்கு பணம் கொடுக்கும் போது மக்களுக்கான சேவை ஒழிந்து விடும், நேர்மையான அரசியல், ஆட்சி அமையாது. இவ்வளவு நாள் ஏன் வரவில்லை என்று கேட்க கூடாது. இந்த தருணத்தில் வர தம்பி விஜய் விரும்புகிறார். என்னுடைய கொள்கை வேறு, சமரசம் செய்து கொள்ளும் எண்ணம் என்னிடம் இல்லை.

தம்பி விஜய் அரசியலுக்கு வருவதை வாழ்த்துவோம். என்னுடைய பாதை வேறு அவருடைய பாதை வேறு. தம்பி விஜய் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். நல்லது செய்வதை தட்டிக் கொடுக்கலாம், தள்ளி விடக்கூடாது. இன்றைக்குள்ள அரசியல் தலைவர்களில் மூத்த தலைவர் நல்லக்கண்ணு சிறந்தவர். அவரை ஒரு வார்டு கவுன்சிலராக கூட நம்மால் ஆக்க முடியவில்லை என்பது தலைகுனிவு.

திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே ஒரு நாட்டை ஆள்வதற்கு, ஒரு இனத்தை வழி நடத்துவதற்கு தலைவனாக இருப்பதற்கு தகுதி வந்து விடுவது என்று கூறுவது அவமானகரமானது. இது மாறாது. எல்லோரும் சேர்ந்து தான் மாற்ற வேண்டும்” என்றார்.

Related Post

வீட்டிற்கு வராத கதிர் ஆனந்த்.. லாக்கரை உடைக்க கடப்பாறை; வேலூரில் அடுத்தடுத்து அதிர்ச்சி

Posted by - January 4, 2025 0
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன், கதிர் ஆனந்த் எம்.பி. மற்றும் அவரது ஆதரவாளர் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக…

மீண்டும் மதன் ரவிச்சந்திரன்; ‘ஸ்டிங் மேளா’ வீடியோக்களால் பரபரப்பு!

Posted by - March 16, 2023 0
ஓராண்டுக்கும் மேலான இடைவெளியில் மதன் ரவிச்சந்திரன் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். இம்முறை ’ஸ்டிங் மேளா’ என்ற பெயரில் அரசியல் மற்றும் ஊடக புள்ளிகள் பலரின் வயிற்றில் புளி…

வேங்கைவயல் சம்பவம் | இன்றுடன் ஓராண்டு நிறைவு: விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை

Posted by - December 26, 2023 0
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது கடந்த ஆண்டு டிச.26-ம் தேதி தெரியவந்தது. இந்தக் கொடுஞ்செயல்…

மாநகர பஸ்களில் அடுத்தடுத்த நிறுத்தங்களின் பெயரை அறிவிக்கும் வசதி- உதயநிதி தொடங்கி வைத்து பயணம்….

Posted by - November 26, 2022 0
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பங்கேற்று பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, போக்குவரத்துத்துறை செயலாளர்…

வாழை இலை.. வெயிட் லாஸ் முதல் சரும ஆரோக்கியம் வரை உதவும் அதிசய சாறு.. தலைமுடி வளர்ச்சிக்கு வாழை இலை

Posted by - November 21, 2023 0
சென்னை: வாழையிலையில் உள்ள நன்மைகள் ஏராளம்.. இந்த வாழையிலையை அரைத்து பயன்படுத்துவதால், ஏற்படும் நன்மைகள் அதைவிட ஏராளம்.. அவை என்னென்ன தெரியுமா? வாழையிலையில் உள்ள சத்துக்களை லிஸ்ட்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *