”நான் அன்னைக்கே செத்துட்டன், அம்மாவையே பாட்டிலால அடிச்சாரு அன்புமணி” ராமதாஸ் வேதனை

262 0

பெற்ற தாயையே பாட்டிலால் அடித்தவர் தான் அன்புமணி என, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

அன்புமணி கூசாமல் பொய் பேசுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு:

அண்மையில் தருமபுரியில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி, கடந்த ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்தேன். தூக்கமே இல்லை. நான் என்ன தவறு செய்தேன்? என்று எனக்குள் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் ஏன் மாற்றப்பட்டேன்? அப்படி என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை” என பேசியிருந்தார். இந்நிலையில் தான், விழுப்புரத்தில் தைலாபுரத்தில் உள்ள வீட்டில், பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

 

”தகுதியற்ற அன்புமணி”

ராமதாஸ் பேசுகையில், “தவறு செய்தது அன்புமணி அல்ல. அவரை 35 வயதில் மத்திய அமைச்சராக்கி நான் தான் தவறு செய்துவிட்டேன். தவறான ஆட்டத்தை தொடங்கி அடித்து ஆடியது அன்புமணி தான். புதுச்சேரி பொதுக்குழுவில் நடந்தது என்ன  என்று உலகமே பார்த்தது. மேடை நாடகத்தை கடைபிடிக்காதது யார்? அன்புமணியின் குற்றச்சாட்டுகள் முழுக்க மக்களையும், கட்சியினரையும் திசை திருப்பும் செயல். தலைமைப் பண்பு அன்புமணிக்கு கொஞ்சம் கூட இல்லை.

”தாயை தாக்கிய அன்புமணி”

ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனின் நியமனத்தை அன்புமணி கிழித்து போட்டார். முகுந்தன் விவகாரத்தில் தனது தாய் மீது பாட்டிலை வீசி அன்புமணி தாக்கினார். வளர்த்த கிடாவே மார்பில் எட்டி உதைத்துவிட்டது. இப்போது என்னை குற்றவாளியாக்கி அனுதாபம் தேட அன்புமணி முயல்கிறார். சுவற்றுக்குள் பேச வேண்டிய விஷயத்தை நடுவீதிக்கு கொண்டு வந்தது யார்? கட்டுக்கோப்பாக நடத்திவந்த கட்சியை அன்புமணி அவமானப்படுத்திவிட்டார்.

 

”நான் அன்றே செத்துவிட்டேன்”

மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தேன். ஆனால், அன்புமணி ஒவ்வொருவரையும் தனித்தனியாக தொடர்பு கொண்டு பேசி, என்னை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்க நிறுவனர் முயல்கிறார். எனவே யாரும் அந்த கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தினார். இதனால், அந்த கூட்டத்திற்கு மொத்தமுள்ள சுமார் 108 தலைவர்களில் வெறும் 8 பேர் மட்டுமே வந்திருந்தனர். அதனை கண்ட பிறகு அன்றே நான் இறந்துவிட்டேன்” என ராமதாஸ் வேதனையுடன் பேசினார்.

தொடரும் மோதல்:

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. புதுச்சேரி பொதுக்குழுவில் அவர்கள் இடையேயான மோதல் பகிரங்கமான நிலையில், அன்புமணி வகித்து வந்த தலைவர் பதவியை தானே எடுத்துக்கொள்வதாக ராமதாஸ் அறிவித்தார்.  ஆனாலும், தானே தலைவராக தொடர்வதாக அன்புமணி தெரிவித்தார். இந்நிலையில் தான், அவர் மீது ராமதாஸ் பகிரங்கமாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

Related Post

எதிர்ப்பை மீறி காதல் திருமணம்: மருமகனை விருந்துக்கு அழைத்து சென்று காரில் இருந்து தள்ளிவிட்ட மாமனார்

Posted by - September 7, 2023 0
திருமங்கலம்: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மணி. இவர் தனது குடும்பத்தினருடன் மதுரை கே.கே.நகரில் வசித்து வருகிறார். இவரது மகன் பிரியவரதன் (வயது 22). இவரும், மதுரை…

Christmas 2025: இந்தியா முழுவதும் கொண்டாட்ட வேகம்… சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் ஸ்பெஷல் Events!

Posted by - December 12, 2025 0
சென்னை: உலகம் முழுவதும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் Christmas 2025 கொண்டாட்டங்கள் பெரிய கொண்டாட்டத்தோடு இன்று ஆரம்பமானது. தமிழ் நாடு முழுவதும் தேவாலயங்கள், மால்கள், கடைகள், சுற்றுலா…

விறகுக்கடை முதலாளியாக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் தளபதியாக மாறியது எப்படி?

Posted by - August 23, 2024 0
விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் நம்பிக்கைக்குரியவராக எப்படி மாறினார்? யார் இந்த புஸ்ஸி ஆனந்த்? விரிவாக பார்க்கலாம்.நடிகர் விஜய் தனது அரசியல்…

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்கவும் – திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

Posted by - December 28, 2022 0
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்றும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை உடனடியாக…

நிலக்கடலை.. இதயத்தை காக்கும் அட்டகாசமான வேர்க்கடலை.. ஆனா “இவங்க” மட்டும் நிலக்கடலையை தொடவே கூடாதாம்

Posted by - December 14, 2023 0
சென்னை: பல்வேறு சத்துக்களை கொண்டிருக்கும் நிலக்கடலையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? யாரெல்லாம் நிலக்கடலை சாப்பிடக்கூடாது? தெரியுமா? மிகச்சிறந்த புரதத்தின் ஆதாரமாக விளங்கக்கூடியது வேர்க்கடலை என்று சொல்லக்கூடிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *