அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு – ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?

194 0

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், ஞானசேகரன் குற்றவாளி தான் என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு:

ஞானசேகரன் மீது சுமத்தப்பட்டுள்ள 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார்.  ஞானசேகரனுக்கு கருணை காட்டக்கூடாது எனவும், அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் ஜுன் 2ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை ஞானசேகரனுக்கான நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கு விவரம்:

கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதியன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனது நண்பருடன் இருந்த, 19 வயது பெண்ணை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஞானசேகரன் மீது குற்றம்சாட்டப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023 இன் பிரிவுகள் 63(a), 64(1), 75(i)(ii), மற்றும் 75(i)(iii) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் (FIR) படி, கோட்டூர்புரத்தில் வசிக்கும் ஞானசேகரன் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி, அவரது வீடியோக்களைப் பதிவு செய்து, அவரது அடையாள அட்டையின் புகைப்படங்களை எடுத்தார். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு வரலாற்று குற்றவாளி என்பது கண்டறியப்பட்டது. இதுபோக அவருக்கு பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பதாகவும் புகார்கள் எழுந்த நிலையில், அவர் மீது சுமத்தப்பட்ட 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக பல்வேறு குற்றச்சாட்டுகளில் அடுத்தடுத்த வழக்குகளில் கைதான ஞானசேகரன் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.

எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்:

பெண்ணிடம் அத்துமீறி நடந்தபோது ஞானசேகரன் தொலைபேசி வாயிலாக யாரையோ தொடர்புகொண்டு, ”சார்” என குறிப்பிட்டு பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் ஞானசேகரனை தவிர மற்ற யாருக்குமே சம்மந்தம் இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் திமுக அரசு யாரையோ காப்பாற்ற முயல்கிறது என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக களமாடின. திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதகாவும் குற்றம்சாட்டின. இந்நிலையில் தான், ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என வழக்கு பதிவு செய்யப்பட்ட 5 மாதங்களில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Related Post

சனியின் ராசிக்கு இடம்பெயரும் சூரியன்… பண மழையில் நனைய போகும் ராசிகள்!

Posted by - December 5, 2024 0
மாதம் ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றும் சூரிய பகவான் வரும் பிப்ரவரி மாதம் கும்ப ராசிக்கு செல்கிறார். சனிபகவானுக்கு சொந்தமான ராசியாக கும்ப ராசி உள்ளது. சூரிய…

பணிநேரம் முடியும்வரை ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை.. அதிரடி உத்தரவு

Posted by - March 29, 2023 0
விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள்…
Generated Image January 12 2026 10 59AM

கரூர் நெரிசல் விவகாரம் தொடர்பாக டெல்லி சிபிஐ முன்பு விஜய் இன்று ஆஜராகிறார்

Posted by - January 12, 2026 0
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று ஆஜராகிறார். இந்த விசாரணை 3 நாட்கள்…

”நேர்மையில்லாத ஆளுநர் ரவி” 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல், உச்சநீதிமன்றம் ஆப்பு – மாநில அரசின் வசமாகும் பல்கலை.,

Posted by - April 8, 2025 0
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் துணைவேந்தர்களை நியமிக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் அதிகாரம் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாட்டில் நேர்மை இல்லை என உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.…

ரெட் ஜெயின்ட் மூவிஸ் படங்களில் ‘உதயநிதி வழங்கும்’ என்ற வாசகத்தை நீக்க அறிவுறுத்தல்!

Posted by - December 19, 2022 0
தற்போது உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்று இருப்பதால், ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிடும் படங்களின் போஸ்டர் மற்றும் விளம்பரங்களில் ரெட் ஜெயன் மூவிஸ் என்பது மட்டும் பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *