படப்பிடிப்பை நிறைவு செய்த ‘சந்திரமுகி 2’ படக்குழு

241 0

சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து ‘சந்திரமுகி 2’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர்.Chandramukhi 2 crew completes shooting | படப்பிடிப்பை நிறைவு செய்த  சந்திரமுகி 2 படக்குழு

லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் படக்குழு வெளியிட்டு வந்தது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வடிவேலு ‘ரிஸ்க் எடுக்குறதெல்லாம், எனக்கு ரஸ்க் சாப்புட்ற மாதிரி..’ என்ற தனது காமெடியை நடிகை ராதிகாவுடன் இணைந்து ரீ கிரியேட் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் ‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

தலைவர் 171 படத்தின் டீஸர் வெளியானது! எதிர்பார்க்காத ஒரு டைட்டில்

Posted by - April 22, 2024 0
லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணி சேரும் படம் தற்காலிகமாக தலைவர்171 என அழைக்கப்பட்டு வருகிறது. படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படும் என முன்பே லோகேஷ்…

நாயகனாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பன்… இயக்குனர் யார் தெரியுமா?

Posted by - October 9, 2025 0
உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது ரெட் ஜெயன்ட் மூவீஸ். நடிகரும், துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் இந்த நிறுவனம் மூலம் பல…

ப்ரீ புக்கிங்கிலேயே மாஸ் வசூல் சாதனை செய்த விஜய்யின் லியோ- இதுவரை இத்தனை கோடி வசூலா, தளபதி செம

Posted by - September 23, 2023 0
விஜய்யின் லியோ வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் நடித்துவரும் திரைப்படம் தான் லியோ. மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைக்க லியோ என்ற…

சர்ச்சைகளில் `வாரிசு’

Posted by - December 2, 2022 0
இதன் படப்பிடிப்பை பல தடவை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வலைத்தளத்தில் வெளியிட்டு படக்குழு வினரை நோகடித்த சம்பவம் நடந்தது. பிறகு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் ஆந்திராவில் அதிக…

நடிகை சமந்தா இரண்டாம் திருமணம்? சாமியார் அட்வைஸ்

Posted by - March 17, 2023 0
சமந்தா தமிழ், தெலுங்கு தற்போது ஹிந்தி என இந்தியளவில் டாப் நடிகையாக ஜொலித்து வருபவர் சமந்தா. இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் திருமணம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *