பிக் பாஸ்க்கு பிறகு புத்தம் புதிதாக வரப்போகும் 4 சீரியல்கள்.. இரண்டு சீரியலுக்கு பூசணிக்காய் உடைக்க போகும் இயக்குனர்கள்

218 0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலை விட ரியாலிட்டி ஷோ மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனால் சமீப காலமாக ரியாலிட்டி ஷோ மீது பெரிதும் ஆர்வம் இல்லாததால் சீரியலை பரவாயில்லை என்று மக்கள் சீரியலை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.அந்த வகையில் எக்கச்சக்கமான சீரியல்களை விஜய் டிவி ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். ஆனால் வருசத்துக்கு 100 நாள் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் அதற்கு பதிலாக சில சீரியல்களை அவசரமாக முடித்து விடுவது வழக்கம்தான். அந்த வகையில் தற்போது சீசன் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆரம்பித்து 75 நாட்களை தாண்டி இருக்கிறது.

இன்னும் ஒரு சில வாரங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வர இருப்பதால் அதற்கு அடுத்து புத்தம் புது சீரியல்களை இறக்கலாம் என்று நான்கு சீரியல்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது. அது என்னென்ன சீரியல்கள் என்றால் சிந்து பைரவி, அய்யனார் துணை, பூங்காற்று திரும்புமா மற்றும் தனம் போன்ற நான்கு புது சீரியல்கள் வரப்போகிறது. \

அது மட்டுமில்லாமல் இரண்டு சீரியல்கள் முடிவடைய போகிறது. அந்த வகையில் வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியல், பாக்கியலட்சுமி சீரியலையும் முடித்து விடலாம் என்று இயக்குனர்கள் கதைகளை வேகமாக கொண்டு வருகிறார்கள். இதில் பாக்கியலட்சுமி சீரியல் ஆரம்பத்தில் நல்ல புள்ளிகளை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பெற்று இருந்தாலும் தற்போது கதையே இல்லாமல் இழுத்து அடித்துக் கொண்டிருப்பதால் முடிக்கப் போகிறார்கள்.

மேலும் புத்தம் புதிதாக ஆரம்பித்த வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பை பெறாததால் அதையும் முடிக்கப் போகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த சீரியல்கள் மூலம் விஜய் டிவி, சன் டிவி கிட்ட நெருங்க முடியுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Related Post

எப்போதும் கோபம், எரிச்சலா இருக்கா..? இந்த விஷயங்கள் காரணங்களாக இருக்கலாம்..!

Posted by - December 14, 2022 0
கடந்த காலத்தில் நீங்கள் சில அதிர்ச்சிகரமான சம்பவங்களை எதிர்கொண்டிருந்தால், எந்த வெளிப்படையான காரணமும் இல்லாமல் உங்களுக்கு அடிக்கடி கோபம் வரலாம்.கோபம் என்பது எதிர்மறை சூழலுக்கு நம்முள் இருந்து…

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து பத்த வைத்த சுனிதா.. முகம் கருத்து போன ஹவுஸ் மேட்ஸ், இன்றைய எபிசோட்

Posted by - January 7, 2025 0
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் ஆகி வெளியில் சென்ற போட்டியாளர்கள் வீட்டுக்குள் வரப் போகிறார்கள். இதன் அறிவிப்பு நேற்றே வந்தது. அதன் முதல் கட்டமாக இப்போது சுனிதா…

சிவகுமார் நடிப்பை நிறுத்த இப்படி ஒரு காரணமா.? சிவாஜி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்தும் வீணா போச்சே!

Posted by - August 30, 2024 0
அந்த காலத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் சிவகுமாரின் படங்களும் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்று வந்தது. எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் சிவகுமார்…

அசிடிட்டி தடுக்க… தவிர்க்க!

Posted by - December 31, 2022 0
  அசிடிட்டி என்பது என்ன.. எதனால் ஏற்படுகிறது.. பொதுவாக நமது உடலில் இயற்கையாகவே சிறியளவிலான ஆசிட் சுரப்பு இருக்கும். இது எதற்காக என்றால், நாம் உண்ணும் உணவை…

Bridal Photoshoot பிரபலத்துடன் எடுத்தது ஏன்?- மறுமணமா, சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக்

Posted by - July 10, 2023 0
பாக்கியலட்சுமி சீரியலில் முதலில் நல்ல கதாபாத்திரமாக அமைந்து பின் வில்லி போல் மாறி வருகிறது ராதிகா வேடம். நடிகை ரேஷ்மா நடித்துவரும் இந்த கதாபாத்திரத்தால் தான் சீரியல் நகர்ந்துகொண்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *